இமயம் நொறுங்கியதுபோல் அமெரிக்காவின் பொருளாதாரம் நொறுங்கி வருகிறது. அதன் பகாசுர வங்கிகள் திவாலாகின. அதன் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இதர நிதி நிறுவனங்களும் திவாலாகின. இவை அனைத்தும் தனியார் துறைக்குச் சொந்தமான சொத்துக்களாகும்.
சென்ற ஆண்டு மேற்குநாடுகளின் பொருளாதாரம் நொறுங்கியது. அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி பிரிட்டனையும், பிரான்சையும் பிற நாடுகளையும் பேயாய் ஆட்டியது. அங்கெல்லாம் கூட வங்கிகளும், நிதி நிறுவனங் களும் கதவுகளை மூடிக்கொண்டன.
ஆனால், இந்தப் பேராபத்திலிருந்து இந்தியா தப்பித்தது. ஏனெனில், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் அடித்தளம் உறுதியானது. ஆகவே ஆட்டம் காணவில்லை. ஆயுள் இன் சூரன்ஸ் நிறுவனம் வானிற்கும் மண்ணிற்கு மாக வாமனாவதாரம் எடுத்து நிலைத்து நிற் கிறது. எனவே, மேலைநாடுகளைத் தாக்கிய சூறாவளி அதனைத் தொட்டுக்கூடப் பார்க்க வில்லை.
இந்த நிறுவனங்களெல்லாம் தனியார் உடைமையாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அமெரிக்காவை உலுக்கிய புழுதிப்புயலில் நமது நிறுவனங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கும்.
எனவே, பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரால், நாட்டின் நரம்புகளான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மன்மோ கன் சிங் அரசு எடுக்கும் முயற்சிகளை முறிய டித்தாக வேண்டும்.
அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இப்போ துள்ள பெரும்பான்மையை முன்னிறுத்தி அந்த மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று மைய அரசு திட்டமிடுகிறது. கண் களை விற்றுச் சித்திரம் வாங்குவதற்குக் கைகொடுக்க வேண்டுமா?
தனியார்துறை என்ற முதியோர் இல்லத் தில் சிக்கிய தொழில் அன்னையரை அமெ ரிக்கா மீட்டு வருகிறது. அதே முதியோர் இல் லத்திற்கு பொதுத்துறை அன்னையரைப் பொட்டோடும் பூவோடும் அனுப்பி வைக்க மன்மோகன் சிங் அரசு முயல்கிறது.
அமெரிக்கா சொல்லிக் கொடுத்த பழைய பாடம்தான் இன்னும் அவர்கள் மனதில் நிற் கிறது. இப்போது அந்த அமெரிக்கா சொல்லித் தரும் புதிய பாடத்தைப் படியுங்கள் என்று சொல்கிறோம்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட் டையோ, அந்நிய கம்பெனிகளையோ அனு மதிக்கக்கூடாது என்று தேசப்பற்றாளர்க ளெல்லாம் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால், அமெரிக்க வால்மார்ட் பகாசுர பலசரக்கு கம்பெனி இங்கே முதல் கடை யைத் திறந்துவிட்டது. இந்தியத் தொழில் நிறு வனத்துடன் கூட்டாக பஞ்சாபில் அந்தக் கடை திறக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் அந்த வால்மார்ட் கம் பெனியின் நிலை என்ன? பொருளாதார நெருக்கடிச் சூழலில் சிக்கிய அந்த கம்பெனி யும் பல கிளைகளை மூடிவிட்டது. ஆட் குறைப்புச் செய்துவிட்டது. அனைத்தும் மலிவுவிலை என்று ஆரம்பத்தில் தம்பட்டம் அடித்த அந்த கம்பெனி, படிப்படியாக விலை களை உயர்த்தி வருகிறது.
நமக்கு அரிசி, பருப்பு விற்கத் தெரியாதாம். அரைக்கீரை விற்கத் தெரியாதாம். ஆகவே, அமெரிக்க கம்பெனி இங்கே பலசரக்கு வியாபாரம் செய்ய வந்திருக்கிறது. இதனை மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருக்கிறது.
முல்லைக்குத் தேர் தந்தான் பாரி என்பார் கள். நம்மைக் கேட்டால் அது சரியல்ல என் போம். முல்லைக்கொடி படர ஒரு பந்தல் கூடப் போட்டுத் தந்திருக்கலாம். தேரையே தந்திருக்க வேண்டியதில்லை.ஆனால் பாரி யையே தோற்கடித்துவிட்டார் மன்மோகன் சிங். அமெரிக்காவில் கண்மூடும் ஒரு நிறு வனம் இங்கே விழிப்புறத் தங்கத் தொட்டில் கட்டித் தந்திருக்கிறார், கொடுமை.
இதனை வணிகத்துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழுவே (ஞயசடயைஅநவேயசல ளுவயனேiபே உடிஅஅவைவநந டிn உடிஅஅநசஉந) கடுமையாகக் கண்டித் திருக்கிறது. கொலைப்புற வழியாக அந்நிய முதலீடு அடியெடுத்து வைப்பதை இந்திய அரசு அனுமதிக்கிறது. இதனால் இந்திய வணிகத்துறையில் மொத்த வியாபாரமும் பாதிப்புக்குள்ளாகும். சில்லறை வியாபாரம் சீரழிந்தே போகும் என்று எச்சரித்திருக்கிறது.
பலசரக்கு, பழங்கள், காய்கறிகள் வியாபா ரத்தில் அந்நிய நிறுவனங்கள் அடியெடுத்து வைப்பதை உடனடியாக அடியோடு நிறுத்த வேண்டும். இதற்கு மேல் அமெரிக்க வால் மார்ட் கம்பெனி இன்னொரு நகரில் கடை திறப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது.
சிறிய வியாபாரங்களில்-சில்லறை வியா பாரங்களில் கோடானு கோடி மக்கள் ஈடுபட்டி ருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பஞ் சைப்பராரிகளாக்க வால்மார்ட்டுகள் வருகின்றன என்று தெளிவாக எச்சரித்திருக் கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?.
(குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரையிலிருந்து)
Saturday, July 4, 2009
அரிசி, கீரை விற்கவரும் அந்நிய கம்பெனி
சோலை
Labels:
உலகமயமாக்கல்,
எல்.ஐ.சி,
தாராளமயக்கொள்கை,
பொருளாதார நெருக்கடி,
வால்மார்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment