Tuesday, June 23, 2009

பட்டினியின் பிடியில் 100 கோடி மக்கள்

மனிதகுல வரலாற்றில் முதல் முறை யாக உலகம் முழுவதிலும் சுமார் 100 கோடி மக்கள் கடும் பட்டினி கொடு மைக்கு ஆளாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

உலகம் முழுவதும் மிக அதிக அளவு உணவு தானிய அறுவடை நடந்துள்ள இந்த சமயத்தில், அதை விலை கொடுத்து வாங்க முடியாத மக்களை இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு கடுமை யாக தாக்க உள்ளது.

பசிக்கொடுமையை குறைப்பதில் பல பத்தாண்டுகாலமாக ஏற்பட்ட முன் னேற்றம் மோசமான முறையில் பின்னுக் குத் தள்ளப்பட இருக்கிறது. 2015ம் ஆண் டுவாக்கில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து விடுவோம் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பு உலக தலைவர்களெல்லாம் கூடி மேற்கொண்ட முடிவு சீரழிந்து கொண்டி ருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் விவசா யத்தை முன்னேற்றுவதற்காக பணக்கார நாடுகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்த அளவிற்கு இதுவரையிலும் பணம் கொடுக்கவில்லை; இத்துடன் உலக அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி, வளரும் நாடுகளை கடுமை யாக தாக்கிக் கொண்டிருக்கிறது; அந்த நாடுகளின் மக்கள் கடும் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; இந்த நாடுகளுக்கென்று ஒதுக்கப்பட் டுள்ள உணவு மானியங்கள் இந்த மாதத்தோடு முடிந்துவிடும்.

இன்றைய நிலைமையில் உலகம் முழுவதும் சுமார் 96 கோடி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் தவிக் கிறார்கள் என்று உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு மிக சமீபத்தில் மேற்கொண்ட சர்வேயில் தெரியவந்துள் ளது. இது இன்னும் மோசமடையும் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். சுமார் 100 கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கு வார்கள் என்று அவர் அபாயச்சங்கு ஊதியுள்ளார்.

1990ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையில் 15 ஆண்டு காலத்தில் போதிய உணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை 80 கோடி யிலிருந்து 85 கோடியாக அதிகரித்துள் ளது. இந்த எண்ணிக்கை கடந்த மூன்றே ஆண்டுகளில் 100 கோடியை தொட்டு விட்டது.

ஆனால் இந்த காலத்தில் உலகம் முழுவதும் உணவுதானிய அறுவடை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு உணவுதானிய உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 241 மில்லியன் டன் அளவிற்கு உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது.

எனவே, பட்டினிக் கொடுமை என்பது கடந்த காலங்களில் ஏற்பட்டதுபோல உணவுதானிய பற்றாக்குறையால் தற் போது ஏற்படவில்லை; மிகப்பெரும் அளவு உணவுதானியம் குவிந்து கிடந் தாலும் அதை மக்களால் வாங்க முடிய வில்லை என்பதே உண்மை.

இதற்கு மிக முக்கியக் காரணம், வெளிச்சந்தையில் உணவு பொருட்க ளின் விலை மிகமிகக்கடுமையாக அதிகரித்திருப்பதே.

இந்த கோடை காலத்திற்கு முந்தைய 12 மாதங்களில் கோதுமை மற்றும் மைதா விலைகள் 2 மடங்காக அதிகரித்துள்ளன. அரிசி விலை 3 மடங்காக அதிகரித்துள் ளது. ஐ.நா. சபை உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கைகளின்படி ஒட்டு மொத்த உணவுதானிய உற்பத்தியில் 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உண வுதானியங்கள் கடந்த ஓராண்டு காலத் தில் உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த பணக்கார நாடுகளில் ஒரு வாகனத்தை ஒருமுறை இயக்க பயன்படுத்தப்படும் உயிரி எரிபொருளை தயாரிக்க செலவிடப் பட்ட உணவுதானியத்தை கொண்டு ஒரு ஏழை மனிதனுக்கு ஓராண்டுக்கு சோறி டலாம்.

இதுமட்டுமின்றி ஊக வணிகம், முன் பேர வர்த்தகம், மக்கள் தொகை அதிக ரிப்பு உள்ளிட்டவையும் உணவுதானிய விலை அதிகரிக்க காரணம் என ஐ.நா. சபை கூறுகிறது.

உணவுதானிய நுகர்வு குறைந்துள்ளது என்பது மட்டுமின்றி, வளரும் நாடுகளில் இறைச்சி நுகர்வும் குறைந்துள்ளது. ஏனென்றால் கால்நடைகளுக்கு அளிக்க வேண்டிய நியாயமான அளவு உணவும் வளரும் நாடுகளின் கால்நடைகளுக்கு கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் கோடைகாலத் திற்கு பிறகு உலகம் முழுவதும் அறு வடையில் நல்ல பலன் கிடைத்தபோதி லும் அதன்மூலம் உலக மார்க்கெட்டில் உணவுதானியங்களின் விலை சற்று குறைந்தபோதிலும், உலகப் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்ததன் விளைவாக வளரும் நாடுகளில் உணவு தானியங்களின் விலை குறையவில்லை; மாறாக மேலும் அதிகரித்துள்ளது.

ஏனென்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான வளரும் நாடுகளின் பண மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக உள்நாட்டில் உணவுதானிய சப்ளை தொடர்ந்து பற்றாக்குறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக உள்ளூர் மார்க்கெட்டுகளில் உணவு தானிய விலைகள் தொடர்ந்து உச்சியி லேயே இருக்கின்றன.

இதுதவிர மூன்றாம் உலக நாடுகளில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு தேவை யான உரங்களின் விலையும் விதைக ளின் விலையும் மிகப் பெரும்பன்னாட்டு ரசாயன நிறுவனங்களின் கைகளிலும், விவசாய தொழில் நிறுவனங்களின் கைகளிலும் சிக்கிச் சீரழிகிறது. கிட்டத் தட்ட அனைத்து வளரும் நாடுகளிலுமே உரங்கள் மற்றும் விதைகளின் விலை விவசாயிகளால் எளிதில் வாங்க முடி யாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதனிடையே, வளர்ந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடியின் பெயரால் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் வெட்டப் பட்டுள்ளன. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வேலை வாய்ப்புகள் பெருமள வில் வீழ்ந்துள்ளன. இதனால் அங்கு புலம்பெயர்ந்து வேலைசெய்து வரும் வளரும் நாடுகளை சேர்ந்த லட்சக்கணக் கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களால் தங்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்ப முடிய வில்லை.

ஏற்கெனவே உள்நாட்டில் உணவு தானிய விலைஉயர்வு, வேலையிழப்பு போன்றவற்றால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள லட்சோப லட்சம் விவசாயி கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங் கள், மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகளாலும் மிகக்கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள் வது தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு உச்சி மாநாடு, உணவு நெருக்கடியை எதிர் கொள்ள வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த பணக்கார நாடுகள் 12.3 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு வருடம் ஆனபின்னரும்கூட நூறு கோடி டாலர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இதற்கு மாறாக பணக்கார நாடு களைச் சேர்ந்த தனியார் பன்னாட்டு பெரும் நிறுவனங்களை உலக நெருக்கடியிலி ருந்து பாதுகாக்க பல நூறு ஆயிரம் கோடி டாலர்களை பணக்கார நாடுகளின் அரசாங்கங்கள் அளித்துள்ளன.

பன்னாட்டு பெரும் நிறுவனங்களை நெருக்கடியிலிருந்து பாதுகாக்க ஊக்கத் தொகை என்ற பெயரில் அளிக்கும் மிகப் பெரும் நிதியில் ஒரே ஒரு சதவீத நிதியை வளரும் நாடுகளுக்கு அளித்தால் கூட லட்சக்கணக்கான மக்களை பட்டினி யிலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக உணவுத்திட்ட அமைப்பின் இயக் குநர் ஜோசெட் ஷீரன் கூறுகிறார்.

“பீப்பிள்ஸ் டெமாக்ரசி”

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

No comments: