Tuesday, June 16, 2009

முதலாளித்துவம்:“மனிதர்களைப் பண்டமாக பணம் மாற்றி விடும்

பொருளாதார மந்தத்தின் கோரவிளைவாக நான் வேலையிழக்கும் வேளையில் சமூகம் என்மீது இரக்கம் கொள்ளும், ஆதரவுக்கரம் நீட்டும் என நினைத்தேன். ஆனால், வேலையிழப்பின் வேதனை கூடலாப வெறியர்களால் லாபமீட்ட பயன்படுத்தப்படும் என்று கனவிலும் கருதவில்லை. “யாராவது போய்த்தான் ஆக வேண்டும்” எனும் தலைப் பில் ஒரு அமெரிக்க தொலைக்காட்சி நிறு வனம் ஒரு தயாரிப்பை ஒளிபரப்பி, அதைத் தான் செய்ய இருக்கிறது. அதில், இந்த நெருக் கடிக் காலத்தில் மூழ்கி விடாமலிருக்க, தன் சக ஊழியர் ஒருவரை வேலையிலிருந்து நீக்க தங்களுக்குள் வாக்களித்துக் கொள்ளுமாறு ஒரு நிறுவனம் கேட்கிறது. மனிதனின் துய ரத்தை பணமாக்கும் எத்தகைய வக்கிரமான மனிதநேயமற்ற செயல்! தொலைக்காட்சி ஒளிபரப்பு அதிகமாகப் பார்க்கப்படும் நேரத் தில், மனித வாழ்வு நாசமாக்கப்படுவதை லேசான நகைச்சுவையாகச் சித்தரிப்பதை விடப் பாவமானது என்ன இருக்க முடியும்?

அந்த நேரத்தில் சூடான, பரபரப்பான, கவர்ச்சியாக எதைக்காட்டுவது என்பதில் நாங்கள் எப்போதுமே முனைப்பாக இருப் போம் என்கிறார் குமட்டும் மேற்கண்ட நிகழ்ச் சியைத் தயாரித்த குடிஒ சூநவறுடிசமள நிர்வாகி. நிதிநெருக்கடியும், வேலை பறிபோகும் நிகழ்வு களும்தானே நடப்புச் செய்திகளாக இருக்க முடியும்?

அவர்களைப் பொறுத்தவரை மனிதனுக்கு மனிதன் எந்த உறவும் இல்லை. அம்மணமான சுயநலமும், கயமையான பணப்பட்டுவாடாவும் தான் அவர்களின் யதார்த்தம்! பட்டினியில் மடியும் மனிதர்களைக் கூட சுவையாகக் காட்சிப்படுத்த ஒரு கணம் கூடத் தயங்கமாட் டார்கள். முதலாளித்துவ கலாச்சாரம் என்ன வேண்டுமானாலும் செய்யும். மனித துயரத்தைக் கூட அது பணம் பண்ணப் பயன்படுத் தும். “மனிதர்களைப் பண்டமாக பணம் மாற்றி விடும், மனித மாண்புகளை ஈனப்படுத்தி விடும். உலகில் எல்லாவற்றிலும் பணமே சக லமும். அது உலகின் பொது விபச்சாரி” என்று வெகுகாலம் முன்னரே மார்க்ஸ் சொல்லிவிட் டார். பணம்! பணத்தைவிட மேலான சாபம் எதுவும் மனிதனுக்கு இல்லை என்றார்.

அது நகரங்களை நாசமாக்குகிறது, மனி தனை குடும்பத்தை விட்டு விரட்டுகிறது. மிகச் சிறந்த ஆன்மாவைக் கூட சபலப் படுத்து கிறது. இகழ்வுக்கும், அவக்கேட்டிற் கும் இட்டுச் செல்கிறது. அதனால்தான் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்து கொண்டிருந்த பொழுது, அதற்குக் காரண கர்த்தாக்களாக இருந்த நிதி நிறுவனங்களின் தலைவர்கள் போனஸ் என்ற பெயரில் கனத்த தொகையை எந்தவிதமான குற்ற உணர்வு மின்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படு வதை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு முன், பிரிட்டனின் “ஜேடு கூடி” கேன்சரால் மெது வாக மரணித்துக் கொண்டிருந்ததை நேரடி ஒளிபரப்புச் செய்ய முயன்றது ரியாலிட்டி டி.வி.

19ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் முத லாளித்துவத்தைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறினார்:

“திருப்திப்படுத்தவே முடியாத லாப வேட்கை முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயற்கையாகும். போதுமான அளவு லாபம் கிடைத்தால் அது பெரும் துணிவு கொள்ளும், 100 சதவீதம் லாபமென்றால் மனித சமூக விதிகளையெல்லாம் காலடியில் நசுக்கும், 300 சதவீதம் லாபமென்றால் எந்த ஒரு குற்றமும் செய்யத் தயங்காது, எந்த ஆபத்தையும் எதிர் கொள்ளும், அதன் எஜமானனையே தூக்கிலிடத் தயங்காது.” மூலதன நூலின் முதல்பாகத்தில் மார்க்ஸ் இதைக் கையாண்டிருக்கிறார். முத லாளித்துவ பொருளாதார தத்துவத்தின் அஸ் திவாரம் தான் அதன் வலுவான மேல்கட்ட மைப்பைத் தீர்மானிப்பதால் முன்னணி ஊட கங்கள் அதன் குணாம்சங்களைத்தான் கொண்டிருக்கும்.

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கி நடந்து கொண்டிருந்த போது அள வுக்கு மீறி பரபரப்படைந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் நேரடி யுத்தக் காட்சிக ளைக் காட்டுவதுபோல் அனைத்தையும் ஒளிபரப்பின. யுத்தங்கள் அவ்வாறு ஒளிபரப் பப்படுவதில்லை என்பது வேறு சேதி.

போலீஸ், கமாண்டோக்கள், அதிகாரி களின் வியூகத்தை அப்படியே காட்டினார்கள். எதிரிகள் எதிர் வியூகம் அமைத்துக் கொள் வார்கள் என்ற சாதாரணமான அறிவு கூட இல்லை. தரைமேல் குப்புறப்படுத்துக் கொண்டு தங் களது கேமிரா மேன்களிடம் எல்லாவற்றையும் ஷ்டிடிஅ செய்யச் சொல்லி பரபரப்பு, பீதி, தேச வெறி, பொதுவான கலக்கத்தை உருவாக்கும் வகையில், தாங்கள் பேசுவதால் ஏற்படப் போகும் பின்விளைவுகளைப் பற்றிய உணர் வின்றி நடந்து கொண்டார்கள். தங்கள் சேன லுக்குக் கிடைக்கும் ரேட்டிங், லாபம் தவிர வேறு சிந்தனை இல்லை.

பெரு நிறுவனங்களினால் வழிநடத்தப் படும் ஊடகங்களுக்கு உலகில் பணத்தைத் தவிர எதுவும் எஞ்சியிருக்கவில்லை. விரைவான லாபத்தை விட இன்பமானது எதுவும் அவைகளுக்கு இல்லை. தங்கம் கைவிட்டுப்போவதை விட துன்பமானது எதுவும் இல்லை. இத்தகைய பேராசையும், சுயநலமும் மனித மாண்புகள் எதையும் கறைப்படுத்தாமல் விடுவதில்லை.

மூலதனத்தால் அநீதி இழைக்கப்பட்டு வேலையிழந்து, வாழ்விழந்து மக்கள் வாடி னால் என்ன? அங்கும் ஏராளமான பணம் சம்பாதிக்க வழியிருக்கிறது ஐயா!


-ஜி.மம்தா

“பீப்பிள்ஸ் டெமாக்ரசி”

தமிழில் : மிலிட்டரி பொன்னுச்சாமி

No comments: