ஜார்க்கண்ட் மைக்கா சுரங்கங்களில் கொத்தடி மையாகப் பணியாற்றி சமூக ஆர்வலர்களால் விடுவிக்கப் பட்ட 14 வயது நிரம்பிய முகமது மானான் அன்சாரி சர்வதேச தொழிலாளர் மாநாட்டு மேடையில் உரையாற்றவுள்ளார். சர்வ தேச அளவில் உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டா டப்படும் ஜூன் 12 அன்று அன்சாரி பேசு கிறார்.
பசபன் பச்சாவோ அன் தோலன் இயக்கச் செயல் வீரர் கோவிந்த பிரசாத் கானல், அன்சாரியின் குடும் பத்தாருடன் பேச்சு வார்த்தை நடத்தி 10 வயதான அன்சாரியை விடுவித்தார். ஜார்க்கண்டில் உள்ள சாம் சகிரியா என்ற சிறிய கிரா மத்தைச் சேர்ந்தவர் அன் சாரி. இவர் 10 வயது வரை கொத்தடிமையாக மைக்கா சுரங்கத்தில் பணியாற்றி னார். இவருடைய குடும்பமே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள குடும்பங்களில் 10 உறுப் பினர் எண்ணிக்கை என்பது மிகக் குறைவு. எனவே ஒவ் வொரு குடும்பத்துக்கும் ஒரு பைசா என்பது கூட மிகப் பெரிய பணமாகும். கிராமத் தில் உள்ள பாதிக்கும் மேற் பட்ட சிறுவர்கள் சுரங்கங் களில் பணியாற்றுகின்றனர். இவர்களுடைய குறைந்த பட்ச வயது 6 அல்லது 7 தான் என்று அன்சாரி விளக் குகிறார். மண்சரிவால் பல சிறுவர்கள் இறந்துள்ளனர் என்றும் அன்சாரி நினைவு கூர்கிறார். கொத்தடிமை யிலிருந்து விடுபட்ட இவர் மேலும் 8 சிறுவர்களை விடு வித்துள்ளார்.
இவரை கூட்டு கொத் தடிமையிலிருந்து விடுவிப் பதால் ஏற்படும் ரூ.30 இழப்பை ஏற்க இவரது குடும்பம் முதலில் தயங்கியது. ஆனால் பிரசாத்தின் முயற்சி நீடித்த தின் விளைவாக இவர் விடு விக்கப்பட்டார். காலை 10 மணிக்கு சுரங்கத்திற்குள் செல்லும். அன்சாரி மாலை 4 மணிக்குத்தான் வெளியில் வருவார்.
விடுவிக்கப்பட்ட அன்சாரியை அந்தோலனின் ஜெய்ப்பூர் மறுவாழ்வு மையத்தில் பிரசாத் சேர்த் தார். சில மாதங்கள் கழித்து அன்சாரி சாம்சகிரியா கிராமத்திற்கு வந்தார். பள்ளியில் சேர்ந்த இவர் 25 கி.மீ. வரை பயணம் செய்து கல்வி கற்றார். குழந்தை தொழிலாளர்களின் பெற்றோரை சந்தித்து சிறுவர்களை விடு விக்குமாறு தொடர்ந்து வற் புறுத்தி எட்டு சிறுவர்களை விடுவித்தார்.
அன்சாரி ஏழாம் வகுப் பில் 80.27 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். முப்பது ரூபாயை இழப்பதற்கு தயங்கிய பெற்றோர் இன்று மகன் வெளிநாடு செல்லும் செய்தி கிடைத்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மகனை வழியனுப்ப டில்லி பாலம் விமான நிலையம் வந்த பெற்றோர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஜீன்ஸ், டி சர்ட் அணிந் திருந்த மகனின் எழில் உரு வம் கண்டு அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர்.
Friday, June 12, 2009
ஐஎல்ஓ மேடையில் இந்திய கொத்தடிமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment