பேரணியின் போது ஒருவர் கைது செய்யப்பட்டார். அரசுகளின் அலட்சி யத்தாலும், புறக்கணிப்பாலும் எழுந்த அச்சங்களின் விளைவாக ஊர்வலத்தில் உணர்ச்சிகள் கொப்பளித்த போதும், பேரணி அமைதி யாகவே நடந்தது. தொண்டு அமைப்புகள், தொழிற்சங் கங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குழுக்கள் ஆகியவற் றின் 150-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சார்ந்த 35 ஆயிரம் பேர் பேரணியில் பங்கேற்றனர்.
கலைஞர்கள் பங்கேற்பு
கொடிகளுடன் முழக்க அட்டைகளுடன் மக்கள் குழுமிய இடம் திருவிழா மையம் போல் காணப்பட் டது. கூக்ஸ் குழுவின் லூக் பிரிச்சர்ட், நகைச்சுவை நடி கர் மார்க் தாமஸ், மாரீசியஸ் இசைக் கலைஞர் டாபி டூர் ஆகியோர் பேரணிக்கு கூடிய மக்களை கலை நிகழ்ச்சிகளால் மகிழ்வித் தனர்.
நடிகர் டோனி ராபின் சன் பேரணியைத் தொகுத்து வழங்கினார். தன்னுடைய நாட்டிலும், சர்வதேச அள விலும் நடப்பவற்றைக் கண்டு துடிப்பதாக அவர் கூறினார். பேரணி அனைத் தையும் மாற்றிவிடாது, ஆனால் மாற்றத்துக்கான பரந்துபட்ட இயக்கத்தின் பொறியாக விளங்கும் என் றும் அவர் மக்களிடம் கூறி னார்.
இந்தப் பேரணிக்கு ‘மக்களை முன்னிறுத்தி’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. பேரணி ஒருங்கிணைப்பாளர் கிளன் டார்மேன், ராபின்சனின் கூற்றை அங்கீகரித்தார். இது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல என்று கூறிய அவர், 2009-ம் ஆண்டு முடிய ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் பிரிட்டன் இருக்கும். இக் கால கட்டத்தில் ஜி-8, ஜி20 மற்றும் ஐ.நா. அமைப்புகள் பின்னடைவில் இருந்து மீளத்திட்டமிடுவார்கள். கோபன் ஹேகன் தட்ப வெப்ப மாநாட்டுடன் 2009 நிறைவுறுகிறது. நம்மு டைய கோரிக்கைகளை பரிசீலித்து மக்களை முன் னிறுத்தி முடிவுகளை எடுக் குமாறு உலகத் தலைவர் களையும், பிரிட்டிஷ் அர சையும் கட்டாயப்படுத்து வோம் என்றும் கூறினார்.
Monday, March 30, 2009
லண்டனில் மாபெரும் பேரணி ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு ஏப்ரல் 2-ல் லண் டனில் தொடங்குகிறது. அதற்கு கட்டியங் கூறுவது போல் வேலை கோரி, வறுமை ஒழிப்பை வலியு றுத்தி பூமியைப் பாது காக்கும் முழக்கங்களுடன் நடைபெற்ற பேரணியில் மக்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment