Friday, April 3, 2009

பொருளாதார நெருக்கடியால் 10 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள் ஐக்கிய நாடுகள் சபை தகவல்

பொருளாதார நெருக்கடியால் 10 கோடி பேர் வறு மையின் பிடியில் சிக்குவார் கள் என ஐ.நா. வாழ்வியல் அமைப்பு கணித்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியால் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் அனைத்தும் திணறியுள் ளன.

பொருளாதாரச் சரிவில் இருந்து மீள ஊக்க நடவ டிக்கைகளை, அந்தந்த நாடு கள் மேற்கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரச்சரிவால், தினமும் 2 டாலருக்கு குறைவாக வருமானம் பெறும் நபர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உரு வாகியுள்ளது. ஏறக்குறைய 10 கோடி பேர் வறுமைக் கோட்டின் பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித தீர்வு திட்ட (ஐ.நா. வாழ்வியல்) செயல் இயக் குனர் அன்னா திபாய் ஜீகா தெரிவித்தார்.

லண்டனில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உலகப் பொருளாதார நெருக்க டிக்கு தீர்வு காண தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நைரோ பியில் ஐ.நா. மனித தீர்வு திட்ட அமைப்பு மற்றும் நிபுணர்கள், அரசு அதிகாரி களின் ஆலோசனை நடை பெற்றது.

இக்கூட்டத்தில் ஐ.நா. வாழ்வியல் செயல் இயக்குனர் அன்னா திபாய்ஜீகா பேசுகையில், உலக நிதி நெருக்கடியால் வளர்ந்த, வளரும் நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீட்டு வசதி நிதிய ளிக்கும் முறையில் மக்கள் மற்றும் நிறுவனங்கள் இடையே முறைகேடு காணப்படுகிறது.

ஏழை மக்களுக்கு குடியிருக்கும் வீட்டு வசதி செய்து தரப்படுகிற எண்ணத்தில் இருந்து, அவர்களது எண்ணம் விலகி இருப்பது வருந்தத்தக்கது. இத்தகைய செயல்பாடு கடன்களை உருவாக்கிவிடும் என்றார்.

No comments: