* உணவு மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை வெட்டு
* பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதே. பணக்கொள்கையிலும் நிதிக்கொள்கையிலும் இறுக் கிப்பிடி
இப்படிப்பட்ட ஆலோசனைகளை சர்வதேச நிதியம் வளர்முகநாடுகளின் அரசாங்கங்களுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் துவங்கி உலகின் பல நாடுகளின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு ஐ.எம்.எப். அளிக்கும் அறிவுரைகளில்தான் இத்தகைய ஆலோ சனைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால், பணக்கார நாடுகளுக்கு ஒருவித ஆலோ சனைகளையும், ஏழைநாடுகளுக்கு வேறு விதமான ஆலோசனைகளையும் வழங்கி, தான் யாருடைய கையாள் என்பதை ஐ.எம்.எப். நிரூபித்துள்ளது.
அக்டோபர் மாத மத்தியில் வெளி யிடப்பட்டுள்ள உலகப்பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில்தான் அது இத்தகைய இலவசஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள பணக்கார நாடுகள் எவ்வாறு செயல்படலாம் என்பது பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.
ஒட்டுமொத்த பொருளாதார நிலை மேம்பட அரசாங்கம் உதவி செய்ய வேண் டும். வளர்ச்சிக்கு உதவும் வகையில் விவேகமான முறையில் பணத் தூண்டு தல் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். அதன் அறிவுரைகள் பூடக மான முறையில் அமைந்துள்ளன என்ற போதிலும் அது பயன்படுத்தியுள்ள சொல்லாடல்கள் 20 ஆம்நூற்றாண்டின் பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநரான கீன் ஸின் கொள்கைக்கு ஏற்ப அமைந்துள் ளன. பொருளாதாரச்சூழலை முறைப் படுத்த அரசாங்கம் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும்.சந்தை சக்திகளே எல்லாவற்றையும் சரிசெய்துவிடும் என்று சும்மா இருக்கக்கூடாது. மந்தநிலை ஏற் படும்போது பற்றாக்குறை பணமுறை யைப் பயன்படுத்தி நிதித்தூண்டுதலை அளிக்கவேண்டும். அதிகஅளவில் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளில் முத லீடு செய்ய வேண்டும். தொழிலாளர் களின் கூலியை ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக வைத்திருக்கவேண்டும்.
அதே நேரத்தில் அது வளர்முக நாடு களுக்கு வழங்கியுள்ள அறிவுரை என்ன தெரியுமா?
வளர்முக நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ள தங்கள் நிதிக்கொள்கைகள் மூலம் குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் முந்தையகாலங்களைவிடக் கூடுதலாக உள்ளன என்றபோதிலும், நெருக்கடியை எதிர்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை உறுதியான முறையில் தோற்றுவிக்கப்பட வில்லை என்றால் அந்த நடவடிக் கைகள் பலனளிக்காது. இன்னும் சற்று விரிவாகப் பரிசீலித்தால் உணவு மற்றும் எரிபொருளுக்கு மானியம் வழங்குவது மிகவும் செலவு பிடிப்பதாகவும் உள்ளார்ந்த திறமைக்குறைவைக் காட்டுவதாகவும் உள்ளன.
அனைத்து முனைகளிலும் இறுக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதிக்கொள்கையும் பணக்கொள்கையும் இதில் அடங்கும். செலவுகள் அதிகரிக்கா மல் இருப்பதற்கு அதிக அளவில் கட்டுப் பாடுகளைக் கொண்டுவர வேண்டும். இதில் பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வும் அடங்கும். பணவீக்கம் அதிகரித்துவரும் வேளையில் இறுக்கிப் பிடிக்கக்கூடிய பணக் கொள்கை கடைப் பிடிக்கப்படவேண்டும்.
பணக்கார நாடுகள் பொருளாதார அரங்கில் சக்தியுடன் தலையிட்டு நிதிப் புழக்கத்தை அதிகரித்து அதன்மூலம் நுகர்பொருட்களுக்கான வேண்டலை அதிகரிக்க உதவவேண்டும் என்று அறி வுரை கூறும் ஐஎம்எப் அமைப்பு - ‘வாயைக்கட்டுங்கள் வயிற்றைக்கட்டுங் கள்’ என்று வளர்முக நாடுகளை அறிவுறுத்துகிறது.
இன்றைய தினம் இப்படிப்பட்ட அறி வுரைகளைக் கூறும் சர்வதேச நிதியம் கடந்த பல ஆண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளுக்கு கூறிய அறிவுரைகளை நாம் அறிவோம். மானியங்களைக் குறையுங்கள். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியைக் குறையுங்கள். அவ்வாறு செய்தால்தான் நிதிப்பற்றாக்குறையைக் கட் டுப்படுத்தமுடியும். அரசாங்கம் தொழில் துறை, உற்பத்தித்துறை, பணித்துறை ஆகிய எதிலும் நேரடியாகப் பங்கேற்கக் கூடாது. பொதுத்துறையே கூடாது; அனைத்தும் தனியார் துறைக்கே என்று கூறிவந்தது. தாராளமயம் என்ற பெயரால் எதையெதை செய்யக்கூடாது என்று உலகமயவாதிகள் கூறிவந்தார்களோ அவை அத்தனையையும் தற்போது அமெ ரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் செய்து வருகின்றன. பல நிதி நிறுவனங் கள் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. தேசிய மயம் என்ற சொல்லை அமெரிக்கா பயன்படுத்தவில்லை என்றாலும் தீவிர சுதந்திர சந்தை ஆதரவாளர்கள் அமெரிக்க ஜனாதிபதியை தோழர் புஷ் என்று நையாண்டி செய்துள்ளது இத்தகைய நடவடிக்கைகளை அவர் எடுத்ததனால் தானே?அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் நிற்காமல் அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளையும் ஐஎம்எப் வழங்கி யுள்ளது.
ஐஎம்எப்பின் இரட்டைநிலையைப் பற்றி பொருளாதார வல்லுநரான ஜெயதி கோஷ் பின்வருமாறு விமர்சித்துள்ளார்.
அனைத்தும் வெட்டவெளிச்சமாகி விட்டது. பிரச்சனை பாரபட்சமான முறையில் அணுகப்பட்டுள்ளது. முதலாளித் துவ உலகின் பணக்கொள்கை மிகவும் கட்டுப்பாடற்றதாக இருந்ததும், உலகப் பொருளாதாரம் தனது வேகவரம்பைக் கடந்ததுமே பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக இருந்தது. பணக்கார நாடுகள் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு உலகை நெருக்கடியை நோக்கி இட்டுச் சென்றன .ஆனால் வளர்முகநாடுகளின் அளவுக்கு அதிகமான வேண்டலும் நெருக்கடியைத் தோற்றுவிப்பதில் ஓரளவிற்குக் காரணமாக இருந்தது என்று கூறி பணக்கார நாடுகளுக்கு ஒருவித ஆலோசனையையும்; ஏழைநாடுகளுக்கு வேறு விதமான ஆலோசனையையும் வழங்கி தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை ஐஎம்எப் வெளிப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளின் நலன்கள் தான் உலக நலன்கள் என்ற கருத்துடன் காலங்கால மாக செயல்பட்டு வரும் ஐஎம்எப்பின் இத்தகைய அணுகுமுறையில் வியப் படைய எதுவுமில்லை அல்லவா? |
No comments:
Post a Comment