Friday, December 26, 2008

அமெரிக்காவிடமிருந்து கற்க வேண்டியது என்ன?

-பி.சாய்நாத்

மும்பையில் நடந்த மிகக் கொடூர மான தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதம் குறித்த பலத்த விவாதங் கள் எழுந்துள்ளன. தெரிவிக்கப்படும் கருத்துக்களில் தீவிரவாதத்தை எதிர் கொள்வதில் அமெரிக்காவிடமிருந்து இந் தியா கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் மிகவும் ஆபத்தானது. ‘அமெரிக்காவை பாருங்கள்-9/11க்கு பிறகு மற்றொரு தாக் குதல் நடந்துள்ளதா?’ என்கிறார்கள் சிலர். அமெரிக்காவிடமிருந்து கற்க வேண்டியுள் ளது என்பது உண்மைதான். ஏனென் றால், அமெரிக்கா புரிந்து வரும் தவறுகளி லிருந்து நாம் பாடம் கற்க வேண்டியுள்ளது.

9/11 உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்த பிறகு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ தொடுத்திட அமெரிக்கா முடிவு செய்தது. அந்த தாக்குதல் சம்பவத்தில் நேரடி தொடர்பு ஏதுமற்ற இராக் நாட்டின் மீது தொடுக்கப் பட்ட போரில் 10 லட்சம் உயிர்கள் சூறை யாடப்பட்டுள்ளன. இராக்கிலும் ஆப்கா னிலும் அமெரிக்க ராணுவத்தினர் 5000 பேர் பலியாகியுள்ளனர். மிகவும் ஏழ்மை யான ஆப்கான் நாடு போரினால் மேலும் சிதறுண்டு சீரழிக்கப்பட்டுள்ளது. லட் சக்கணக்கான மக்கள் இராக்கில் தங் களது உடமைகளை இழந்து இடம் பெயர்ந்து தவித்து வருகின்றனர். தினந்தோறும் இராக்கில் ஆயிரக்கணக்கான மக்களும் ஆப்கானில் நூற்றுக்கணக்கான மக்களும் போரினால் மடிந்து வருகின்றனர்.

3 லட்சம் கோடி டாலர் யுத்தம்...

இராக் மீதான யுத்தத்திற்கு மூன்று லட்சம் கோடி டாலர் அமெரிக்கா செல விட்டுள்ளது என்கிறார் நோபல்பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிஸ். இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்று மடங்காகும். இராக் நாட்டில் ‘பேரழிவு ஆயுதங்கள்’ பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அத னால் 9/11 தாக்குதலில் இராக்கிற்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவின் ராணுவ அத்துமீறலுக்கு மையமான காரணமாக சொல்லப்பட்ட இந்த வாதங்கள் தவறானவை என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக் காவின் இந்த யுத்த வெறியினால் அமெ ரிக்க பொருளாதாரத்திற்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதிக் கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் வெட்டி சுருக்கப்பட் டுள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் பட் ஜெட் பற்றாக்குறை 11 பில்லியன் டாலர். இது இராக் மற்றும் ஆப்கான் மீதான அத் துமீறல் போருக்கு அமெரிக்கா ஒருநாள் செலவிடும் தொகையாகும்.

இராக் மீது போர் தொடுக்கப்பட்ட மார்ச் 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக 6,54,965 அப் பாவி இராக் நாட்டு மக்கள் கொல்லப்பட் டுள்ளதாக அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகம் நடத்திய ‘ஆய்வுகள்’ தெரிவிக்கின் றன. ஆயிரம் பேருக்கு 5.5 என்று இருந்த இறப்பு சதவீதம், 2006க்கு பிறகு 13.3 ஆக உயர்ந்தது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று தலைப்பிட்டு நடக்கின்ற அமெரிக்க ராணுவ ஆதிக்கத்தில் அப் பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்கிறது. மத அடிப்படைவாதம் அது வரை காலூன்ற அனுமதிக்கப்படாத இராக்கில், இன்று பயங்கரவாத குழுக்கள் நாடெங்கிலும் முகாமிட்டுள்ளன. மத அடிப்படைவாதத்திற்கு புதிய ஆட்களை திரட்டும் வளமான களமாக மாறியுள்ளது இராக். அமெரிக்காவின் பெரு நிறுவனங் கள் தவிர 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெ ரிக்கா தொடுத்துள்ள பதில் நடவடிக் கையினால் ஆதாயம் அடைந்துள்ளது ‘அல்கொய்தா’தான். இந்த நடவடிக்கை கள் ‘பயங்கரவ’தத்திற்கு எதிரான போருக்கு முன்பைவிட உலகத்தை பல மடங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ஆட் படுத்தியுள்ளது.

பல காலமாக அமெரிக்காவின் மிக விசுவாசியான கூட்டாளியான பாகிஸ்தா னின் பல பகுதிகளின் மீது அவ்வப்போது அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் அந்நாட்டு அப்பாவி மக் கள் கொல்லப்படுகின்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதி பர் ஒபாமாவும் இதே அணுகுமுறையை தீவிரப்படுத்தும் விதமாக அறிவிப்புகளை செய்து வருகிறார். இந்த அணுகுமுறை யினால் பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் அடிப்படைவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு ஏற்படுகிறது.

பல பத்தாண்டுகளாக ஆப்கான் மீதான அமெரிக்க ராணுவ சாகசங்களுக்கு துணை நின்ற பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள கை மாறு இதுதான். பாகிஸ்தான் இன்று சந் திக்கும் பல சோதனைகளுக்கு காரண மாக விளங்கும் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள் ளத்தான் நமது நாட்டிலும் சிலர் துடிக் கின்றனர். பாகிஸ்தானின் இந்த நிலை மை இந்தியாவை பாதித்து வருகிறது. அடிப்படைவாதம் தலைதூக்கும்போது அதிகமான தீவிரவாதத்தை தூண்டு கிறது. இது எல்லையின் இருபுறமும் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் எதிர் நடவடிக்கை களிலிருந்து பத்திரிகைகளும் பலவற்றை கற்க வேண்டியுள்ளது. தற்போது அதிபர் புஷ் மக்கள் ஆதரவை இழந்து நிற்பது குறித்தும், ராணுவக் கொள்கைகளை எதிர்த்தும் எழுதுகிற அதே பத்திரிகை கள்தான் யுத்தத்திற்காக நியாயம் கற்பிக் கப்பட்ட பேரழிவு ஆயுதங்களின் அபா யத்தை பெரிதாக்கி மக்கள் மத்தியில் சித் தரிக்க உதவின. அமெரிக்கா சந்திக்க நேர்ந்திட்ட அனைத்திற்கும் அந்நிய சக்தி களே காரணம் என்ற மாயையை உரு வாக்கின. அதே பத்திரிகைகள் இன்று இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கு கின்றன. ‘இந்தியா தனது மக்களை பாது காப்பதில் ஏற்பட்ட தவறுகளை பரி சீலிக்க வேண்டிய நேரமிது’ என்கிறது நியூ யார்க் டைம்ஸ்

அமெரிக்காவிலும் 9/11 தாக்குதலுக் குப் பின்பு உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிவதை நாம் கண்டோம். அங்குள்ள சீக் கியர்கள் மீது வன்முறையாட்டம் நடந்தது. தலைப்பாகை கட்டியவர்கள், தாடி வளர்ப் பவர்கள் மீது பல காலமாக வளர்க்கப் பட்டு வந்த துவேசத்தை சிலர் தீர்த்துக் கொண்டனர். சீக்கிய மக்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டன. ஆலயங்கள் சூறையா டப்பட்டன. கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டது உட்பட நடந்தது.

அமெரிக்காவின் இந்த பதிலைத்தான் நாமும் பின்பற்ற வேண்டுமா?

புதைக்கப்பட்ட சமூக நீதி...

அமெரிக்க பதில் நடவடிக்கைகளின் ஒரு முக்கிய சின்னமான கவுதானாமோ சிறைச்சாலையிலிருந்து பல வருட துன் புறுத்தலுக்கு பிறகு நிரபராதிகளாக அறி விக்கப்பட்டு சிலர் விடுவிக்கப்படுகின்ற னர். தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக் காவின் பதிலின் ஒரு அங்கமான இந்த அநீதி மிகவும் கடுமையான விமர்சனத் திற்கு ஆளாகியுள்ளது. எதிர் நடவடிக் கையின் ஒரு பகுதியாக அமெரிக்க மக்க ளுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் சமூக சுதந்திரம் வரையறுக் கப்பட்டது. ‘பாட்ரியாட் சட்டம்’ இதன் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அமெரிக் காவின் வரலாற்றில் மிகவும் வெறுக்கப் படுகின்ற மக்கள் ஆதரவற்ற அதிபராக புஷ் பரிணமித்துள்ளார்.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு வலுவான, விரைவான எதிர் நடவடிக்கை மிகவும் அவசியம். குற்றம் இழைத்தவர் களை சட்டத்தின் முன் நிறுத்தி தண் டிக்க வேண்டும். நமது உளவு ஸ்தாபனங் கள் சீரமைக்கப்பட்டு மேலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக தீவிரவாத தாக்குதல்கள் தொடுப்பவர் களின் நோக்கங்கள் நிறைவடையாமல் செய்வதே இவை அனைத்திலும் முக்கிய மானதாகும். மும்பையின் மக்கள் சமூகம் மத, இன ரீதியாக பிளவுபடுவதை தடுத் திட வேண்டும். சாதாரண மக்களின் உயிருக்கு பாதுகாப்பு உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். சமூகத்தின் சுதந்திரத் தை, ஜனநாயகத்தை ஒடுக்குவதும் எதிர் நடவடிக்கைகளுக்கு உதவும் என்ற பார் வை தவறானது. ராணுவ வலிமையை மிகைப்படுத்தி, போலியான நாட்டுப் பற்றை ஊக்குவிப்பதை துறந்து, நமது அர சியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நேரமிது. குறிப்பாக மத மோதல்களை தூண்டுபவர்கள் எந்த மதத்தவராயினும் அவர்களை ஒன்று பட்டு வலுவாக எதிர்த்திட வேண்டும்.

தமிழில் சுருக்கம் : என்.சேகர், சேலம்

No comments: