Friday, November 14, 2008

தாராளமயக்கொள்கை அமலாக்கத்தை தடுக்காமலிருந்தால்

சீத்தாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியை ‘அவுட்லுக்’ பத்திரிகையின் நிருபர் பேட்டிகண்டுள்ளார்.அவர் எழுப் பிய கேள்விகளும்அவற்றுக்கு யெச்சூரி அளித்த பதில்களும் இங்கு தரப்பட் டுள்ளன. அவை உலகப்பொருளாதார நெருக்கடியை இந்தியா எதிர்கொண் டதில் இடதுசாரிக்கட்சிகளின் சிறந்த பங்களிப்பைப் படம்பிடித்துக்காட்டுகின்றன.
கேள்வி: உலகப்பொருளாதார வீழ்ச்சி யின் பாதிப்புகளிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்ததில் உலகமயக்கொள்கைகளுக்கு எதி ரான இடதுசாரிகளின் எதிர்ப்பு கார ணம் என்று கூறப்படுவது எப்படி?
பதில்: நம்முடைய நாடு பாதிப்புகள் எதுவுமின்றி முழுமையாக பாதுகாக்கப் படவில்லை. ஆனால் பிரதமர் மன் மோகன்சிங் 2005 ஆம் ஆண்டில் அமெ ரிக்காவில் வெளியிட்ட தாராளமயத்திட்டஅமலாக்க வரைபடத்தை இந்திய அரசு அப்படியே அமல்படுத்தியிருந்தால் கடு மையான முறையில் இந்தியப்பொருளா தாரம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும். நான்கரை ஆண்டுகளாக ஐ.மு கூட்டணி அரசை நாங்கள் ஆதரித்த போது ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள்கை களை முழுமையாகத் தழுவிவிடாதபடி தடுத்து நிறுத்தினோம். எங்களுடைய இந்த பங்களிப்பை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். வங்கித்துறை காப்பீட்டுத்துறை மற்றும் பென்ஷன் நிதி சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்தினோம். அன்னிய வங்கிகள் இந்தியாவில் 74 விழுக்காடுவரை முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்குமானால் நம்முடைய வங்கிகள் பல வீழ்ச்சி அடைந் திருக்கும். பென்ஷன் நிதி தனியார்மயமாகியிருந்தால் கோடிக்கணக்கான ஊழியர்களின் கதி அதோகதியாகியிருக்கும். இதேபோல காப்பீட்டுத்துறையில் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 49 விழுக்காடாக உயர்த்தப்பட்டி ருந்தால் அமெரிக்காவின் ஏஐஜி இன்சூரன்ஸ் கம்பெனி திவால் நிலையை எட்டிய பின்னணியில் டாட்டா -ஏஐஜி கூட்டு இன்சூரன்ஸ் கம்பெனி யின் பாலி சிதாரர்கள்(இந்தியர்கள்) கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பர்.
கேள்வி -மூலதனக்கணக்கு முழு மாற்றத்தை நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம் என்று நீங்கள் கூறு கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்டஒரு திட்டமே எங்களுக்கு இருக்க வில் லை என்று அரசாங்கம் கூறுகிறதே?
பதில்: சர்வதேச நிதி நெருக்கடியி லிருந்து இந்தியாவைக் காப்பதுதான் நம் முன் உள்ள முக்கிய பிரச்சனை என்று இப்போது (செப்-30) மன்மோகன்சிங் கூறுகிறார்.இதே மன்மோகன்சிங் 2006 மார்ச் 18ந்தேதியன்று என்ன கூறினார் தெரியுமா?மும்பையில் சர்வதேச பிரதி நிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
மூலதனக்கணக்கு முழுமாற்றத்துக்கான வரைபடத்தை தீர்மானிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைக்கும் என்று அவர் அறிவித்தார். இப்போது அரசாங்கம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கு மானால் நல்லது. அன்னிய முதலீட்டா ளர்கள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து தங்கள் பணத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதால் தான் இந்திய பங்குச்சந் தைப் புள்ளிகள் அதலபாதாளத்தில் விழுந்தன.
மூலதனக்கணக்கு முழுமாற்றம் அனுமதிக்கப்பட்டிருந்தால் (வெளி நாடுகளில் வசிக்கும்) இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை வாபஸ் பெற்றிருப் பார்கள். மூலதன வெளியேற்றம் மிகப் பெரும் சீரழிவை ஏற்படுத்தியிருக்கும். மூலதனக்கணக்கு முழுமாற்றத்தை பிரதமரால் கொண்டு வர முடியாமைக்குக் காரணம் அரசியல் கருத்தொற்றுமை ஏற் படாததே. (இடதுசாரிக்கட்சிகளின் எதிர்ப்பே பொதுக்கருத்து எட்டப்படாத தற்கான காரணம்)
கேள்வி: முன்பேர வர்த்தகம் குறித்தும் உங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தீர்கள். எண்ணெய்விலை ஏற்றம் மற்றும் உலக உணவு நெருக்கடிக்கும் முன்பேர வர்த்தகத்துக்கும் தொடர்பு உண்டா?
பதில் : உலக அளவில் எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் உணவு நெருக் கடிக்கு பெரும் அளவில் நடைபெற்ற ஊகவணிகமே காரணம். அமெரிக்காவில் வீட்டு அடமானக்கடன் துறையில் ஈடு பட்டுவந்த ஊகவணிகர்கள் அத்துறை யில் நெருக்கடி ஏற்பட்டவுடன் சரக்கு பரிவர்த்தனையின் பக்கம் திரும்பிவிட் டனர். அங்கேயும் அவர்கள் ஊதிஊதிப் பெரிதாக்கிய பலுான் வெடித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது எண் ணெய் மற்றும் உணவு விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.இதேகாலத்தில் மும்பை சரக்கு பரி வர்த்தனை நிறுவனங்களில் ரூ.40லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள் ளது என்பதைக் குறிப்பிட விரும்புகின் றேன். விவசாய விளை பொருள்களில் ஊகவணிகத்துக்கான கதவை முதலில் திறந்துவிட்டது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியா ளர்கள்தான். ஊகவணிகத்தால் விவ சாயிகளுக்கோ நுகர்வோருக்கோ எத்த கைய பயனும் இல்லை. ஊகவணிகர் களும் கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுமே பயன் அடைந்தன. முன்பேர வர்த்தகம் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு 25 பொருட் கள் மீதான ஊகவர்த்தகம் தடை செய் யப்படவேண்டும் என்று பரிந்துரை வழங் கியது. அந்த பரிந்துரைகள் அமலாக்கப் படவேண்டும் என்று நாங்கள் கோரி வந்தோம். ஆனால் அரசாங்கம் 8 பொருட் களின் மீதான முன்பேரவர்த்தகத்தை மட்டுமே தடை

No comments: