Friday, November 7, 2008

நவம்பர் புரட்சி தினச் சிந்தனை மார்க்சிய-லெனினியமே விடுதலைக்கான பாதை!

சீத்தாராம் யெச்சூரி

1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் மந்தத்திற்குப் பிறகு உலக முதலாளித்து வம் ஒரு கடுமையான நெருக்கடியை தற் போது சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் நவம்பர் சோசலிச புரட்சி நடைபெற்று 91வது ஆண்டு நிறைவு பெறு கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக ஏகா திபத்திய உலகமயமாக்கலை முன்னெ டுத்துச் சென்ற சர்வதேச நிதி மூலதனத் திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, முதலாளித்துவ வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட நெருக்கடிகளையெல்லாம் விட கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். நெருக்கடியின் பாதிப்புகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் முழு பரிமாணம் எவ்வாறு இருக் கும் என்பதைத் தெரிந்துகொள்ள வெகு காலமாகும்.

கார்ல் மார்க்ஸ் கூறியபடி முதலாளித் துவம் மீண்டும் நெருக்கடியை சந்தித் துள்ளது. இதனால் நாம் கூறியது நடந்து விட்டதாக மார்க்சிஸ்ட்டுகள் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இந்த முதலாளித்துவ நெருக்கடியால் லட்சக்கணக்கானோர் துயருற்றுள்ளதை பார்த்து தங்களின் உலகைப் பற்றிய பார்வையும், புரட்சிகர மான ஆய்வும் துல்லியமாக இருந்துள் ளது என்று மார்க்சிஸ்ட்டுகள் திருப்திப் பட்டுக் கொள்ளமுடியாது. ‘மனிதத்தன் மையற்ற எதுவும் எனக்கு அந்நியமானது தான்என்று மார்க்சே ஒருமுறை கூறி யுள்ளார். மூலதனத்தின் கொடூரக்கரங் களால் சாதாரண உழைக்கும் மக்கள் நசுக்கப்படுவதை மார்க்சிஸ்ட்டுகள் தடுக்க வேண்டும். உலகை மாற்றுவதன் மூலமே இது நடக்கும். உலகைப் பற்றிய நமது கணிப்பு சரியானது என்று திருப்திப் பட்டுக் கொள்வதால் இது நடந்து விடாது.

நமக்கு மார்க்ஸ் சுட்டிக்காட்டியபடி, முதலாளித்துவம், மனிதனை மனிதன் சுரண்டுவதாகவும், ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டுவதாகவும்தான் அமைந் துள்ளது. நெருக்கடியில்லாத அமைப்பாக அது எப்போதுமே இருக்க முடியாது. முதலாளித்துவ அமைப்பிலிருந்து மக் களை விடுவிப்பதன் மூலமே மக்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெர் லின் சுவரைத் தகர்த்துவிட்டு ஒரு பிர மையை ஏற்படுத்தும் முயற்சி நடை பெற்றது. வரலாறு முடிந்துவிட்டது. முத லாளித்துவத்தை எதிர்த்து நின்ற சோச லிசத்தின் பலம் காலாவதியாகிவிட்டது என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டார் கள். ஆனால் யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று கருதப்பட்ட வால் ஸ்ட்ரீட் தகர்ந்து போயுள்ள நிகழ்வு பெர்லின் சுவர் தகர்ப்பை மறக்கடித்து விட்டது. உலகின் ஐந்து பெரிய நிதி நிறுவனங்களான பியர் ஸ்டியர்ன்ஸ், லேமன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ச், மோர் கன் ஸ்டான்லி மற்றும் கோல்டுமேன் சாச்ஸ் ஆகியவை திவாலாகியுள்ளன அல்லது கடுமையாகப் பலவீனமடைந் துள்ளன.

முதலாளித்துவம் முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டிருக்கிறது என்று முத லாளித்துவ ஆதரவு நாளிதழானதி எகனாமிஸ்டேகூறும் அளவுக்கு நெருக்கடி ஆழமாக உள்ளது. வருங்காலத் தில் அரசின் பாத்திரமே பிரதானமாக இருக்கும் என்பதையே மேற்கத்திய நாடு களின் மீட்பு நடவடிக்கைகள் காட்டுகின் றன. முன்னாள் சோவியத் யூனியனே ஆச்சரியப்படும் அளவுக்கு நாட்டுடமை நடவடிக்கைகளை உலக முதலாளித் துவம் மேற்கொண்டு வருகிறது.

நவீன தாராளமயமாக்கலை பிரகட னப்படுத்திய பிரிட்டன் தனது வங்கித் துறையில் பெரும்பாலானவற்றை நாட்டு டமையாக்கிவிட்டது. தனது நிதியமைப் பைக் கட்டிக்காக்க அமெரிக்கா 2.5 லட்சம் கோடி டாலரை கொட்டியுள்ளது. இவர்களுக்கு முதலாளித்துவத்தைப் பாதுகாக்க அரசின் தலையீடு தேவைப் படுகிறது. இந்தியாவிலும் நமக்கு வேறு வகையான அனுபவம் உள்ளது. தனி யாரை வளர்க்க பொதுத்துறையை அர சாங்கம் இங்கு உருவாக்கியது. தங்கள் நோக்கம் நிறைவேறிய பிறகு பெரும் அளவிலான தனியார் மயமாக்கலை அரசு மேற்கொண்டது. நடுநிலையான அரசு என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.
தற்போதைய நெருக்கடி

உலகமயமாக்கல் பாதையில் செல்வ தால் இத்தகைய நெருக்கடி ஏற்படும் என் பது தவிர்க்க முடியாததாகும். சோசலிச சோவியத் யூனியன் குறித்து நாம் மேற் கொண்ட மதிப்பீட்டை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

மார்க்சிசம்-லெனினிசம் என்பது விடுதலைக்கான பார்வை மற்றும் அடிமைத்தளையை உடைத்தெறியும் கொள்கைகளைக் கொண்டதாகும். தற் போதைய நிகழ்வுகளைக் கொண்டு சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க மார்க்சிசம்-லெனினிசம் அளிக்கும் வழிகாட்டுதலை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொரு நாட்டி லும் உள்ள நிலைமைகளைக் கணக்கில் கொண்டு, அந்த நாட்டிற்குரிய தன்மையு டன் மனித விடுதலைக்காக அனைத்து மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்டுகள் போராட வேண்டும் என்று நாம் கூறியிருந்தோம்.

இதைத்தொடர்ந்து, 1993ல் 25 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட் சிகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு ஒன் றை கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. 1998ல், கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் அதே போன்ற மாநாடு நடந்தது. அதன்பிறகு இது வரு டாந்திர முறையில் தொடர்ந்தது. இந்த மாத இறுதியில் பிரேசிலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ள உலகமயமாக்கலின் இரு முக்கிய மான அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, உள்நாட்டுக் குள் பணக்காரருக்கும், ஏழைக்கும் இடை யிலும், பணக்கார மற்றும் ஏழை நாடு களுக்கிடையிலும் உள்ள சமச்சீரற்ற நிலையை இது அதிகரித்தது. மற்றொன்று, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியை இந்த உலகமயமாக்கல் உருவாக்கியது. மனித வளத்தை மேம்படுத்தாமல் லாபத்தை மட்டுமே குறிவைத்து தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதில் அதிகமாக முதலீடு செய்ததே இதற்குக் காரணமாகும்.

பெரும்பான்மையான மக்களின் வாங்கும் சக்தி உலகளாவிய அளவில் சுருங்கிவிட்டது என்பதே இந்த இரு அம்சங்களின் அர்த்தமாகும். தான் உற்பத்தி செய்தது விற்பனையாகாததால் முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கு கிறது. இந்த சூழலில் கடனைக் கொடுத்து செலவு செய்யுமாறு மக்களைத் தூண்டி தனது லாபத்தை முதலாளித்துவம் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும். ஆனால், கடனைத் திருப்பித்தரும் நேரம் வரும்போது தர முடியாத நிலை ஏற்படு வதும் தவிர்க்க முடியாததாகும். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க வீட்டு அடமானக் கடன் விவகாரத்தில் இதுதான் நடந்தது.

இந்திய அணுகுமுறை

இதற்கிடையில், இத்தகைய பெரும் அளவிலான ஊக வணிகத்திலிருந்து தங்கள் பொருளாதாரத்தை விலக்கி வைப்பதன் மூலமே இந்தியா போன்ற சுதந்திர, இறையாண்மை கொண்ட நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பெரும் அழிவிலிருந்து இந்தியா ஒரு வகையில் தப்பித்து விட் டது என்றுதான் கூற வேண்டும். பெரும் அளவிலான நிதித்துறை தாராளமயமாக் கலை செய்யவிடாமல் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசை அதற்கு ஆதர வளித்து வந்த இடதுசாரிக்கட்சிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுத்து நிறுத்தியதுதான் இதற்குக் காரணமாகும். நமது மோசமான எதிரிகள் கூட பெரும் தயக்கத்துடன் இதை ஒப்புக் கொள் கிறார்கள்.

ஆனால் தற்போது அத்தகைய தற் கொலைப்பாதையில் செல்லும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. பணப்புழக்கத்தை அதிகரிக்க சர்வதேச நிதி மூலதனத்துக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் போகிறார் கள். அவ்வாறு செய்யாமல் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விஷயங் களில் அரசு முதலீட்டை செய்ய வேண் டும். வேலை வாய்ப்பு கிடைப்பதால் தேவையை அதிகரிக்கலாம். இதை யொட்டி வளர்ச்சியையும் எட்டலாம்.

அமைப்பிலேயே சிக்கல்

இந்த நெருக்கடிக்கு என்ன காரணம் என்று பல்வேறு கருத்துக்கள் வலம் வரு கின்றன. சிலரின் பேராசை, நெறிமுறை கள் மீறல், வெளிப்படைத்தன்மை இல் லாமை, ஒழுங்குபடுத்தும் முறையில் உள்ள பலகீனங்கள் என்று அவரவர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதே வேளையில், எப்போதும் இல்லாத அளவுக்கு முதலாளித்துவம் குறித்த கார்ல் மார்க்சின் கருத்துக்களுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவ வாதிகளின் விருப்பம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சில விதிகளின்படி தானாகவே முதலாளித்துவம் இயங்கு கிறது என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்.

எடுத்துக்காட்டாக, முதலாளித்துவத் தின் கீழான சுரண்டலை நாம் எடுத்துக் கொள்ளலாம். குறைந்த ஊதியத்தைக் கொடுத்து தொழிலாளியை ஏமாற்றும் நேர்மையற்ற முதலாளித்துவவாதியால் மட்டும் சுரண்டல் ஏற்படுவதில்லை. முதலாளித்துவவாதி மிகப்பெரிய நேர்மை யாளராக இருந்தாலும்கூட சுரண்டல் செய்யப்படுகிறது. தொழிலாளி செய்யும் உற்பத்தியின் மதிப்பு, அவருக்குக் கிடைக்கும் கூலியை விட எப்போதுமே அதிகமாகவே இருந்து வருகிறது. தொழி லாளர்கள் உருவாக்கும் இத்தகைய உபரி மதிப்பே லாபத்தை ஈட்டும் வழியாகும். இதை அதிகரிப்பதே முதலாளித் துவத்தின் வேலையாகும்.

சுரண்டல் மூலமே லாபம் உருவாக்கப் படுகிறது. எனவே, முதலாளித்துவத்தை தூக்கி எறிவது என்பது வெறும் ஒழுக்க ரீதியான தேவை மட்டுமல்ல. மனிதனை மனிதனே சுரண்டும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டிய அறிவியல் ரீதியான தேவையாகும். மூலதனம் பற்றிய தனது கருத்தை வலுப்படுத்த தொழிற்சங்கத் தலைவர் டி.ஜே.டன்னிங்கின் கருத்து ஒன்றை மார்க்ஸ் மேற்கோள் காட்டினார். போதிய லாபம் கொண்ட மூலதனம் உறு தியாக இருக்கும். 10 சதவீத அதிகரிப்பு வேலை வாய்ப்பை உருவாக்கும். 20 சதவீத அதிகரிப்பு ஆர்வத்தைத் தூண் டும். 50 சதவீத அதிகரிப்பு வரம்பு மீற வைக்கும். நூறு சதவீதம் அதிகமானால் அனைத்து மனித சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கும். 300 சதவீதம் கிடைக்கும் என்றால் உரிமையாளரையே தூக்கில் தொங்கவிடத்தயங்காது என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வகையிலாவது லாபம் அடைந் தாக வேண்டும் என்பது முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிணைந்திருக்கும் அம்சமாகும். தற்போதுள்ள நெருக்கடிக்கு இந்த அம்சம்தான் காரணமேயொழிய, தனிநபர்களின் பேராசை அல்லது ஒழுங் குமுறை விதிகளில் உள்ள பலகீனங்கள் போன்றவை அல்ல.

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது

மார்க்சிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டின் தீர்மானம் இவ்வாறு கூறியது. முதலாளித்துவத்தின் வீழ்ச்சி யை தவிர்க்க முடியாது. ஆனால் அது தானாக நிகழாது. அதைத் தூக்கியெறிய வேண்டும். மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கொள்கையைத் உயர்த்திப்பிடிக்கும் கட்சியின் தலைமையில் உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர கொள்கைப் போராட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்ற தேவையைப் புறக்கணிப்பது தவறான புரிதலையே வெளிப்படுத்தும். அத்தகைய போராட்டம் இல்லாமல் புரட்சிகர மாற்றம் சாத்தியமேயில்லை. இத்தகைய நிலை லத்தீன் அமெரிக்கா வில் உருவாகி வருகிறது. அங்கு நவீன-தாராளமயத்தை முன்னிறுத்துவோர் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித் துள்ளார்கள்.

புரட்சிகர இயக்கம் இல்லையென் றால், முதலாளித்துவம் மீண்டும் தலை தூக்கும். அவ்வாறு தலைதூக்கினால் அதற்கு நாம் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும். 1929ல் ஏற்பட்ட பெருமந் தம் பாசிசத்தை உருவாக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய ஏகாதிபத்திய உலகமய மாக்கல் முழுமையாக சுற்றிவந்துவிட் டது. எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத் திக் கொண்டாலும் முதலாளித்துவம் சுரண்டலை தன்னுள் அடக்கியது என்பதும், நெருக்கடி இல்லாமல் இருக்காது என்பதும் தெளிவாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மேம்படுத்தப் பட்ட கட்சித்திட்டம் இவ்வாறு கூறு கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி யில் சர்வதேச அளவிலான சக்திகள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக நின்றா லும், புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் மூலமாக உற்பத்திச் சக்திகளை மேம்படுத்திக் கொண்டாலும் ஒடுக்குமுறை, சுரண்டல் மற்றும் அநீதி யைக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு நெருக்கடிகளை எதிர்நோக்கியே உள்ளது. முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்றுதான் உள்ளது. அது சோசலிசம்தான்.

நவம்பர் புரட்சியின் இந்த 91வது ஆண்டு நிறைவில், அதன் அனுபவங்கள் மற்றும் சிதைவிலிருந்து சரியான பாடங் களை கற்றுக் கொண்டும் சோசலித் திற்கான போராட்டத்தை நாம் முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். வர்க்கப் போராட்டங்களை கூர்மைப்படுத்தி புரட் சிகர மக்கள் இயக்கத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். முதலாளித்துவம் நிலைத்து நிற்கும் என்பது வெறும் வாய்ப்பந்தல்தான் என்பதையே தற்போது எழுந்துள்ள நெருக்கடி காட்டுகிறது.

No comments: