வல்லான் வகுத்ததே வாய்க்காலாய் ஞாலம்
பொல்லாங்கு கிழைக்கும் உலகமயம்.
திரைகடலோடியும் திரவியம் தேடாது
திரைகடல் கடந்தும் தேசமடகு.
சுதேசித் தொழில்கள் பலிகெண்டு வளரும்
விதேசி நச்சு விருட்சம்.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்கி
தாமரை இலைநீராய் உலகமயம்.
உழைப்பவர் நலனுக்கு உலைவைக்கும் உழைப்பை
சுரண்டுவோர் நலம்காக்கும் உலகமயம்.
உள்ளோர்க்குச் செல்வமும் எளியோர்க்கு வறுமையும்
உலகமயம் ஈந்திடும் உணர்.
உலகமயம் உழைப்பை உருக்குலைத்தலால் அஃதே
உழைப்போரின் வாழ்க்கைப் பகைவன்.
மக்கள் நலன்கருதா கொள்கை வகப்போர்
மக்கள் அல்லர் மாக்களே.
அனைத்தும் தனியார்க் கர்ப்பணம் செய்தபின்
அரசின் பணியிங்கு யாதுள.
உண்ணல் உடுத்தல் உறைதல் மாந்தருக்கு
திண்ணம் ஆக்கிடா உலகமயம்.
-பெரணமல்லூர் சேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment