உலகில் சமூக நலனைவிட, சுற்றுச்சூழல்பாதுகாப்பைவிட, மக்களின் வாழ்க்கைதரத்தைவிட உலகமயமாக்கல் உலகம் முழுவதும், தனியார்துறைகளை ஊக்குவிப்பதும், வனிக வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியதுவம் அளிக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.
இந்த கருத்தியிலை மக்கள் மனங்களில் திட்டமிட்டு விதைக்கப்பட்டது. ஆனால் முதலாளித்துவத்தையோ!, உலமயமாக்கல் கொள்கையையோ! நியாயப்படுத்த எந்த சிரமங்களையும் செய்யவேண்டிய அவசியமே இல்லை.
பணக்கார முதலீட்டாளர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் அரசு திட்டங்களைவிட ஏதோ ஒரு விதத்தில் மேலானவை என்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்படுகிறது.
இதற்கென்றே உறுவாக்கப்பட்ட "உலகவங்கி, சர்வதேச நிதியம், போன்ற சர்வதேச நிறுவனங்களும் இதே கருத்தை வலியுறுத்திக் தனியார்மயத்திற்கும், தாராளமயத்திற்யும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தண்ணீர், சுகாதாரம், போன்ற அத்தியாவசியத்தேவைகளை இன்றுவரை அரசால் நிர்வகிக்கப்பட்தை தனியார்மயபடுத்துவதில் வெற்றி பெற்று அதன் மூலம் கோடிக்கணக்கா ஏழை எளிய மக்களை குடிதண்ணீருக்கும் , அடிப்படை சுகாரா நலனுக்கும் பிச்சை எடுப்பவர்களாக மாற்றி அலையவைத்ததோடு பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுவருவதுதான் உலகமயமாக்கலின் வெற்றி.
No comments:
Post a Comment