Friday, August 8, 2008

உலகமயம் உலகமயம் என்றவார்த்தையைக் கேட்டிருப்பீர்கள் பயமின்றி இருந்திருப்பீர்கள், இனி அவ்வாறு இருக்கமுடியாது.


சிறு கடை நடத்துபவர்களைக் சிதறடிக்க வருகிறது- பலசரக்கு கடைகளை இந்தியாவின் பார்தி குழுமத்துடன் இணைத்து வால்மார்ட் எனும் அமெரிக்க கம்பெனி பாழ்படுத்த வருகிறது.


நகர நெரிசல்களில் இருந்து விலகி 20-30கி.மீ தூரத்தில் பல ஏக்கர் பரப்பளவில் கடை அமைத்து மிக மிக குறைந்த விலையில் பல இலவசங்களை அறிவித்து மளிகை மற்றும் இதர பொருட்களை விற்க வர இருக்கிறது, இதனால் உள்ளுர் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு வேலை இல்லாதவர்கள்pன் பட்டியலில் இனி சிறுகடை நடத்துபவர்களும் வர இருக்கிறார்கள். நம்மூர் கடைகள் காணாமல் போனபிறகு அறிமுக விலைகளும் இலவசங்களும் காணாமல் போகும்.
காலத்தே விழித்துக் கொண்டால் விரட்டியடித்திடலாம் வாருங்கள்.

No comments: