-மணிசங்கர் அய்யர் எம்.பி |
மத்திய திட்டக்குழுவில் உள்ளவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம் என்பதை மட்டுமே மூல மந்திரமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதை எப்படி அமல் செய்வது , அதன் பலனை யார் அனுபவிப்பது என்பதில் எல்லாம் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இதன் விளைவாகவே நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வளர்ச்சியாக இல்லாமல், பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களாக கொழுக்கும் வளர்ச்சியாக உருவெடுத்து விட்டது. இப்போதுள்ள அரசின் திட்டங்களால் எந்த அளவுக்கு விரைவாக வளர்ச்சியை எட்டுகிறோமோ அந்த அளவுக்கு விரைவான ஏற்றத்தாழ்வையும் அடைகிறோம். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வரும் அதே வேளையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதே வேகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பொருளாதார ஆலோசகராக இருக்கும் எஸ்.ஆர்.டெண்டுல்கர் போன்றவர்களுக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம்தான் முக்கியமே தவிர, அனைத்து தரப்பினரும் அடையும் வளர்ச்சியில் அக்கறை இல்லை. |
Monday, August 30, 2010
பணக்காரர்களை கொழுக்க வைக்கும் வளர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment