மேலாதிக்கத்தை விரிவுபடுத்தவும், தலையீடுகளை தக்க வைத்துக் கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது முயற்சி களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாக தென்கொரிய படைகளுடன் இணைந்து அமெரிக்கா நான்கு நாள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது வழக்கமான ராணுவப் பயிற்சி என்று கூறியுள்ளது. இந்தப் பயிற்சியில் அமெ ரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய அணுசக்திக் கப்பல் பங்கேற்றுள்ளது. 20க்கும் மேற்பட்ட அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும், 200க்கும் மேற் பட்ட போர் விமானங்களும் இந்தப் போர் ஒத்தி கையில் பங்கேற்றன. ஏன் இந்த அணுஆயுத கப் பல்களின் மிரட்டல் என்று வடகொரியா எழுப்பி யுள்ள கேள்விக்கு அமெரிக்கா தரும் பதில் என்ன தெரியுமா? கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத மற்ற பிரதேசமாக மாற்ற அமெரிக்கா உறுதி ஏற் றுக் கொண்டுள்ளதாகவும் அதற்காகவே இத்த கைய ஒத்திகைகள் நடப்பதாகவும் அது பசப்புகிறது.
இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக வும், அது உலகுக்கே அச்சுறுத்தல் என்றும் கூக் குரல் எழுப்பி அந்த நாட்டை மயான பூமியாக மாற்றிவிட்டார்கள். அரக்கத்தனத்தை அரங்கேற் றிவிட்டு பேரழிவு ஆயுதம் எதுவும் அங்கு கிடைக்கவில்லை என்று அமெரிக்காவும், அதன் கூட்டாளி பிரிட்டனும் வெட்கமின்றி அறிவித்தன.
இராக்கைப் போன்று “தீய அச்சு” என்று வட கொரியாவை அமெரிக்கா நீண்ட காலமாக சீண்டி வருகிறது. வடகொரியா தீய சக்தியாக நீடிக்கிறது என்று கடந்த வாரம் இப்பகுதியில் பய ணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தன் பங் கிற்கு சேற்றை இறைத்து விட்டுப்போனார்.
தென்கொரிய யுத்தக்கப்பல் ஒன்றை வட கொரியா மூழ்கடித்துவிட்டதாக கடந்த இரண்டு மாத காலமாக தென்கொரியா புகார் கூறி வரு கிறது. அதற்கு அமெரிக்காவும் சொல்லி வைத் தாற்போல் பின்பாட்டு பாடி வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு வடகொரியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டு செய்யும் வஞ்சகப் பிரச் சாரம் இது என்று வடகொரியா இடித்துரைத்துள்ளது.
வரலாற்றில் அமெரிக்காவையும், அதன் அடி மைக் கூட்டாளிகளையும் முறியடித்து மகுடம் சூடிய நாடு வடகொரியா. தனது தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்க ஏகாதிபத்தி யம் வடகொரியாவுக்கு எதிராக தொடர்ந்து பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. பொரு ளாதாரத்தடை, உணவுப் பொருட்களுக்குத்தடை என பல மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வட கொரியா மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது. தடைகளைத் தகர்த்தெறிந்து வளர்ச்சிப்பாதை யில் வடகொரியா கம்பீரமாக நடைபோடுகிறது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அமைதியையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத் தும் விதத்தில் இருநாடுகளிடையே நல்லுறவு வளர அண்மைக்காலத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கொரிய தீபகற் பத்தில் அமைதி ஏற்படக் கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. இதற்காக தென் கொரியாவைத் தனது கைத்தடியாக வைத்துக் கொண்டு பதட்டத்தை உருவாக்குவதில் அமெ ரிக்கா தலைப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக சோசலிச பதாகையை உயர்த்திப்பிடித் துள்ள கொரிய மக்கள் அமெரிக்காவின் யுத்த மிரட்டல்களுக்கு உரிய பதில் தருவார்கள் என்பது உறுதி.
Friday, July 30, 2010
அமெரிக்காவின் அணுஆயுத மிரட்டல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment