உலக உற்பத்தியில், இரண்டாம் உலகப் போர் காலத்திற்குப் பின் முதன் முறையாக மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டி ருப்பதாக, உலக வங்கி மிகவும் தெளி வாகப் பதிவு செய்திருக்கிறது. உலக வங்கி ஏற்கனவே உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் -3 சதவீதம் என்ற அள வுக்கு வீழ்ச்சி இருந்ததாக மதிப்பிட்டி ருந்தது. அதனை இப்போது -1.7 சதவீத மாக மாற்றி அமைத்திருக்கிறது. கடந்த 12 மாதங்களில் சீனா (7.5 சதவீதம்) மற்றும் இந்தியா (5.5 சதவீதம்) ஆகிய இரு நாடு கள் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச் சியைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் நிதிநிலைமையைச் சரி செய்வதற்காக சுமார் 2.3 டிரில்லியன் டாலர்கள் அரசாங்கத்தால் உட்செலுத் தப்பட்டபோதிலும் கூட, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி -2.6 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. அதைப்போலவே, அனைத்து முதலாளித்துவ ஜி-8 நாடு களும் எதிர்மறை வளர்ச்சி விகிதங்க ளையே கண்டிருக்கின்றன. ஜெர்மனி -6.2, பிரான்ஸ் -3.0, இத்தாலி -5.1, ஜப்பான்-6.0, இங்கிலாந்து -4.2, கனடா -2.3, ரஷ்யா -6.5. வளர்ந்துவரும் பொருளாதார நாடுக ளான பிரேசில் -1.3 சதவீதம், மெக்சிகோ -7.3 மற்றும் ஏசியான் நாடுகள் -0.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன.
உலக வங்கியின் கூற்றின்படி, 2009 இல் சுமார் 100 மில்லியன் மக்கள் முழு மையாக வறுமையின் பிடிக்குள் தள்ளப் படுவார்கள். 2015 வாக்கில் சுமார் 2.8 மில் லியன் குழந்தைகள் இறக்க நேரிடலாம். சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த ஆண்டு மட்டும் 50 மில்லியனுக்கும் மேற் பட்ட எண்ணிக்கையில் வேலையற் றோர் எண்ணிக்கையை நிரப்பிட வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பிரகடனம் செய்திருக்கிறது. உண்மையான மதிப்பீடு என்பது நிச்சயம் இதைவிட அதிகமாகும். ஏனெனில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தன் மதிப்பீட்டை அரசாங்கங்கள் அனுப்பி வைத்திடும் புள்ளிவிவரங்க ளின் அடிப்படையிலேயே கணக்கிடு கிறது. பல அரசாங்கங்கள் புலம்பெயர்ந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களின் வேலையிழப்புகளைக் கணக்கில் கொண்டுவருவதில்லை. அமெரிக்கா வில் மட்டும், வேலையற்றோர் எண்ணிக் கை 10 சதவீதத்தை நெருங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு 16 சதவீதமாகும். வேலையற்றோர் குறித்து எண்ணிக்கையில் சொல்வதானால் அது 7 மில்லியனைத் தாண்டிவிட்டது.
2009 செப்டம்பர் 15 அன்று வாஷிங்டன்போஸ்ட்-ஏபிசி இதழ் வெளியிட் டுள்ள விவரம் இது. அமெரிக்க அரசாங் கம், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்திட்ட மீட்பு உதவிகள் அனைத்தும் அந்நிறுவனங்கள் தங்களுடைய நிதி நிலை அறிக்கையை அழகுபடுத்திக் கொள்ள உதவியதே தவிர, உண்மையான பொருளாதாரத்தை உயர்த்தி, மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்திட உதவ வில்லை. அரசாங்கம் அளித்திடும் திட் டங்கள் எல்லாம் எப்போதும் மக்களின் நலனில் அக்கறை காட்டுவதற்குப் பதி லாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத் தையே குறிக்கோளாகக் கொண்டிருக் கின்றன.
உலகப் பொருளாதார நெருக்கடி ஏற் பட்டு ஓராண்டு கழிந்துவிட்ட நிலையில், இந்நெருக்கடியிலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து ஏராளமான புத்தகங்கள் வெளியாகிவிட்டன. இது ஒரு சராசரி நெருக்கடிதான் என்றும், இதன் விளை வாக சொத்துக்களின் விலைகள் கூர்மை யாக வீழ்ந்திருக்கிறது என்றும், வீடுக ளின் விலைகள் சராசரியாக 36 சதவீதம் கடந்த ஆறு ஆண்டுகளில் வீழ்ச்சி யடைந்திருக்கிறது என்றும் அவற்றில் கூறப்பட்டிருக்கின்றன. மேலும் வேலை யில்லாத் திண்டாட்டம் கடந்த நான் காண்டுகளில் சராசரியாக ஏழு சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. ‘சராசரி’ நெருக்கடியின் வர லாறு இதுதான். உண்மையில் ஏற்பட்டி ருக்கிற நெருக்கடி என்பது சராசரியை விட மோசமானதாகும். இத்தகு சூழ்நிலை யில் ஏற்பட்டிருக்கிற உலகப் பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை அளிப்பதெல்லாம் வீணான வேலையாகும்.
ஆயினும் அத்தகையதோர் நம்பிக் கையை அளித்திட பிரதமரும் திட்டக் கமி ஷனும் முயல்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தி லிருந்து 5.5 சதவீதமாகக் குறைந்துவிட் டது. 2009ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொழில் வளர்ச்சி வெறும் 0.3 சதவீதம்தான். 2008ஆம் ஆண்டு இதே முதல் காலாண்டில் இது 6 சத வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 செப்டம்பரில் 10.4 சதவீதமாக இருந்த ஏற்றுமதி, 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் -33.2 சதவீதமாகக் குறைந் திருக்கிறது. 2009 இறுதிக்குள் அமைப்பு ரீதியான தொழில் பிரிவுகளில் மட்டும் 30 லட்சம் வேலைகள் இழக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி சார்ந்த தொழில் பிரிவுகளில் ஏற்கனவே சுமார் 12 லட்சம் வேலைகள் இழக்கப் பட்டுவிட்டன. முறைசாராத் தொழில் பிரிவுகளில் வேலையிழப்புகள் என்பது இன்னும் அதிகமாகும். மேலும் வெளி நாடுகளிலிருந்து - அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து - வேலை யிழந்து நாட்டிற்குத் திரும்பிக் கொண்டி ருப்போர் எண்ணிக்கை பல லட்சங் களாகிக் கொண்டிருக்கிறது.
உலகின் மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் செய்ததுபோலவே, இந்திய அரசாங் கமும் அறிவித்துள்ள ஊக்குவிப்புத் திட் டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே அவை தங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவியிருக்கின்றனவேயொழிய, நாட்டில் வேலைவாய்ப்பினைப் பெருக்கி, உண் மையான பொருளாதாரத்தை ஊக்குவித் திட உதவவில்லை. உலகப் பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா கணிச மான அளவிற்குக் காப்பாற்றப்பட்டதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று, ஐமுகூ-1 அரசாங்கம் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளவிருந்த நிதித் தாராளமய நடவடிக்கைகளை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியதேயாகும். நாட்டின் பொருளாதார நிலை ஸ்திரப்பட வேண்டு மானால் பொது முதலீட்டை அதிகரித்து, வேலைவாய்ப்புக்களைப் பெருக்குவதன் மூலமே நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்திட முடியும்.
ஆனால் இதைச் செய்வதற்கு அரசு முன்வரவில்லை. மாறாக, பட்ஜெட்டைப் பரிசீலித்தோமானால், பல்வேறு வரிச் சலுகைகள் மூலமாக சுமார் 4.18 லட்சம் கோடி ரூபாய்க்கு கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட் டிருக்கின்றன. இவ்வாறு அறிவித்ததோடு மட்டுமல்லாமல், கார்ப்பரேட் வரியின் மீதான சர்சார்ஜையும் ரத்து செய்திருக் கிறது. வருமான வரி உச்சவரம்பை மேலும் உயர்த்தி 10 ஆயிரம் கோடி ரூபாய் அள விற்கு சலுகை அளித்திருக்கிறது. இவ் வாறு 4.28 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வர வேண்டிய தொகையை அரசாங்கம் கைகழுவிவிட்டது. இதற்கு அரசுத்தரப் பில் கூறப்படும் விளக்கம், இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூலதன வாய்ப்பை அதிகரித்துக் கொடுத்தோமா னால் அதன்மூலம் அவை தங்களுடைய நடவடிக்கைகளை விரிவாக்கி, பொருளா தாரத்தை ஊக்கப்படுத்திடும் என்பதா கும். ஆனால், அரசின் விளக்கத்தில் அடிப்படை தவறு ஒன்றிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களை நுகரக் கூடிய வகையில் மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரித்திடாமல், மூலதனப் பெருக்கம் மட்டுமே பொருளாதாரத்தை ஊக்குவித்திடாது. மாறாக, இந்தத் தொகை நம்நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டுவதற்காக நேரடி பொது முதலீட்டில் போடப்பட்டிருந்தால், அதன் மூலமாக வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டு, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, அதன் மூலமாக பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டிருக்கும். ஆயினும், முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் நடைபெறுவதுபோலவே இங்கும் அர சாங்கமானது கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு உதவித் திட்டங்கள் மற்றும் ஊக்கு விப்புத் திட்டங்களை அமல்படுத்தி, அவர் களை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முனைகிற அளவிற்கு, பொது முதலீட்டை அதிகப்படுத்துவதன் மூலம் மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.
எனவே, பொது முதலீடுகளை அதிகப் படுத்தக்கூடிய வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியமைத்திட வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்திட வேண்டியது அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி
Saturday, September 26, 2009
முதலாளித்துவத்தின் தாக்குதல்
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
அமெரிக்காவின் மாபெரும் நிதி ஜாம்பவானான லேமேன் சகோதரர்கள் 2008 செப்டம்பர் 15 அன்று நிர்மூலமடைந்து ஓராண்டு கழிந்துவிட்டது. இந்த உலக ஜாம்பவானுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பது அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட திவால் நிலைமைகள் மற்றும் 1930களில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றையெல்லாம் விட பெரிதாகும். இந்தத் தடவை இவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பது இவர்களோடு மட்டும் நின்றுவிடாமல் உலக அளவிலேயே நிதிச் சந்தையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தின. உலகில் இதுவரை எப்போ தும் இல்லாத அளவிற்கு மிக மோசமான அளவில் பொருளாதார மந்தத்திற்குக் காரணமாக அமைந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment