Tuesday, June 2, 2009

எண்ணெய்க் கிணறுகளோடு ‘ஷெல்’ உறிஞ்சிய உயிர்கள்

உலக முதலாளித்துவச் சுரண்டல் தாகத்தில் சின்னஞ்சிறு நாடுகளின் வளம் மட்டுமல்ல, மனித நேயம், மனித உரிமை என்பதெல்லாமும் கூட உறிஞ்சப்படும். மேற்கு ஆப்பிரிக்காவில், எண்ணெய் வளம் மிக்க நைஜீரியா நாட்டில் புகுந்த ஒரு அமெரிக்க நிறுவனம் எந்த அளவுக்கு அங்கே சுரண்டலின் 

உச்சத்துக்கே போனது என்பதைக் காட்டுகிற ஒரு செய்தி இந்த உண் மையை உணர்த்துகிறது..

அமெரிக்காவின் பெரிய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனம் ஷெல். நைஜீரிய மக்கள், பிரிட் டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து தமது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது 1958ல் அந்த நாட்டுக்குள் நுழைந்த ஷெல் நிறு வனம், 1960ல் விடுதலைக்குப் பிறகும் அங்கே தனது உறிஞ்சலைத் தொடர்ந்தது. தற்போது அங்கே 90க்கு மேற்பட்ட எண்ணெய்க் கிணறுக ளைத் தன் வசம் வளைத்துப் போட்டிருக்கிறது.

நெடுங்கால காலனியாதிக்கத்தின் பரிசாக வறுமை, மிகப்பெரும் ஊழல் ஆகிய வைதான் அந்த மக்கள் கண்டது. மாறிமாறி வந்த ராணுவ ஆட்சிகள் மக்களை அடக்கி இப்படிப்பட்ட அந் நிய நிறுவனங்களைப் பாதுகாத்தன. ஜனநாய கம் மீட்கப்பட்ட பிறகும் இந்த நிலைமைகள் தொடர்கின்றன. ஷெல் நிறுவனத்தின் லாபப் பசிக்காக நைஜீரியாவின் எண்ணெய் வளம் உறிஞ்சப்படுவது மட்டுமே பிரச்சனை அல்ல, அடிப்படையான இயற்கை வளங்கள் அழிக் கப்படுகின்றன, எரியும் எண்ணெய்க் கிணறு வாயுக்களால் சுற்றுச் சூழல் சாம்பலாகிறது என் பதை மனித உரிமைப் போராளிகள் வெளிப்படுத் தினார்கள். குறிப்பாக ஓகோனி என்ற 

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சூறையா டப்படுகிறது என்ற உண்மையை அவர்கள் உல கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். விழிப்படைந்த ஓகோனி மக்கள் ஷெல் நிறு வனத்தை வெளியேற்றவும், அத னிடம் பறி கொடுத்த தங்களது வாழ்க்கையை மீட்கவும் போராடினர்.

போராடியவர்களை ஒடுக்க ஷெல் நிறு வனம் அவர்கள் மீது எத்தனையோ போலி யான வழக் குகளைத் தொடுத்தது. அடியாட் கள் மூலம் தாக் குதல் நடத்தியது. இதற் கெல்லாம் அதிகார வர்க் கத்தினர் கூச்சமே இல்லாமல் ஒத்துழைத்தனர். உச்சமாக 1995ல் பத்திரிகையாளரும் மனித உரி மைப் போராளியுமான கென் சாரோ வைவா உள் ளிட்ட 9 பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.

அந்தப் படுகொலை நடந்த 14 ஆண்டுகளுக் குப் பிறகு, ஷெல் நிறுவ னத்தின் மீதான வழக்கு நியூயார்க் சிறப்பு நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்தக் கட்டத்தை அடைவதற்கே ஷெல் நிறுவனம் ஏற்படுத்திய பல முட்டுக்கட் டைகளைத் தாண்டவேண் டியிருந்தது.

வழக்கின் தீர்ப்பு எப்படி அமையும் என்ற வினாவுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண் டும். ஆனால், பன்னாட்டு நிறுவனங் களுக்காக உள்நாட்டு சட்டங்களை வளைப்போர் உரிய பாடம் கற்பார்களா? ஒரு ஷெல் நிறுவனம் அல்ல - அரசியல் செல் வாக்கையும் ஏற்படுத் திக்கொண்டு சட் டத்தை வளைப்பது என்ப தற்கு போபோர்ஸ், என்ரான், சிறு குளிர்பான நிறு வனங்கள் அனைத்தையும் விழுங்கிய கோக், பெப்ஸி என்று எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து விரட்டப் பட்ட இதே ஷெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பினாமி பெயர்களில் மறுபடி வந்துகொண்டிருக்கின்றன.

அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு - குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு - கேள்விகேட்க ஆளில்லை என்ற வாய்ப்பை உருவாக்கித்தர தயங்காத ஆட்சியாளர்கள் கண்ணில் இந்தச் செய்தி படாமல் இருக் கலாம். விழிப்படைந்த மக்கள் இயக்கங் கள்தான் மூடிக்கொண்ட அந்தக் கண்க ளைத் திறந்துவிட முடியும்.

3 comments:

Unknown said...

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இருப்பது சீனா.சூடானில்
எண்ணெய் வளம் இருப்பதால் அங்கு
அரசின் இன ஒழிப்பிற்காக ஆதரவாக
இருப்பது சீனா.இலங்கையில் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் வழங்குவது சீனா.பதிலாக சீனா காலுன்ற வசதியாக துறைமுகம் கட்ட
அனுமதிப்பது மகிந்த ராசபக்சே.

இடதுசாரி நண்பர்கள் இவை குறித்து
ஏன் வாய்திறப்பதில்லை. இன்று உலக
மூலவளங்களை குறி வைத்து சர்வாதிகார அரசுகளுக்கும், ராணுவ
ஆட்சிகளுக்கும், மகிந்த போன்றவர்களுக்கும் ஆதரவாக இருக்கும் சீனாவையும் உங்களால்
ஏன் விமர்சிக்க முடிவதில்லை.
அமெரிக்கா,பன்னாட்டு நிறுவனங்கள் என்ற மட்டில் உங்கள் விமர்சனங்கள்
நின்றுவிடுவதேன். உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால் தமிழர் இன ஒழிப்பிற்கு துணை போன, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக
நின்ற சீனாவை கண்டித்து முதலில்
எழுதுங்கள். ஷெல்லை விமர்சிப்பதும், அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்ற பூச்சாண்டிகளை காட்ட வேண்டாம்.தோழர்களே நீங்கள் யார் பக்கம்- சீனாவின் பக்கமா இல்லை தமிழர் உரிமையின் பக்கமா?. ஷெல் அன்று செய்ததற்கும்
இன்று சீனா செய்வதற்கும் வேறுபாடு
இல்லை. இதையாவது நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா.சிபிஎம் கட்சி சீனாவை
விமர்சிக்க தயங்குவது ஏன்?.

ராஜ நடராஜன் said...

//உலக முதலாளித்துவச் சுரண்டல் தாகத்தில் சின்னஞ்சிறு நாடுகளின் வளம் மட்டுமல்ல, மனித நேயம், மனித உரிமை என்பதெல்லாமும் கூட உறிஞ்சப்படும்.//

1. இடுகையின் இந்த வார்த்தைகள் உண்மைதான்.

2. முதலாளித்துவம் மட்டுமல்ல கம்யூனிசமும் ஒரு சுத்த வடிகட்டின அயோக்கியத்தனம் என்பது மாதிரி புரிதலை தந்தது சமீபத்து சீனா,ரஷ்யாவின் சுயநல நிலைப்பாடு.இருநிலைகளில் முதலாளித்துவமே சரி ஓட்டை உடைசலா இருந்தாலும்.(ரஷ்யாக்காரனை இனி குற்றம் சொல்ல முடியாதுல்ல.அவன் தான் கம்யூனிசம் வேண்டாமுன்னுட்டு ஓடிட்டானல்லவா? அதுக்குப் பதிலா கியூபாவ சேர்த்துக்குங்க.சேகுவராவின் பெயருக்கே களங்கம் விளைவித்து விட்டது கியூபா)ரெண்டு வரிதான் சொல்லணூமின்னு நினைச்சேன்.ஆனா வார்த்தைகள் வந்து இன்னும் கொட்டுது.மன்னிக்கவும்.

3.உங்களைப் போன்ற வோர்டு வெரிபிகேசனை எடுக்காதவங்களுக்குத்தான் இடுகை ஒண்ணு போட்டிருக்கேன்.வீட்டாண்ட வந்து பாருங்க!

விடுதலை said...

thanks for ur comments see the link both of u got some news

எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

http://inioru.com/?p=2859