Friday, January 30, 2009

உலக முதலாளித்துவத்தைப் புரட்டிப் போட வேண்டும் தென் அமெரிக்க தலைவர்கள் சூளுரை

அமேசான் நதிக்கரை யில் ஒரு லட்சம் மக்கள் கூட் டத்தில் உலக முதலாளித் துவத்தைப் புரட்டிப் போடு வோம் என்று தென் அமெ ரிக்காவின் சோசலிஸ்ட் தலைவர்கள் முழக்கமிட் டனர். அவர்களுடைய முழக்கமும், மக்களின் ஆதரவு முழக்கங்களும் அமேசான் காடுகளில் எதிரொலித்தன.

ஆண்டுதோறும் டேவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப் புக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக சோசலிசப் பெருமன்றம் நடத்தி வரும் இயக்கத்தில் தென் அமெரிக்காவின் ஐந்து ஜனாதிபதிகள் கலந்து கொண்டனர். வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ், பிரே சில் ஜனாதிபதி லூலா, ஈகு வேடர் ஜனாதிபதி ராபேல் கோர்ரியா, பொலிவியா ஜனா திபதி ஈவோமொரால்ஸ் மற்றும் பராகுவே ஜனாதிபதி பெர்னாண்டோ லூகோ ஆகியோர் மேடைக்கு வந்த போது கூட்டத்தினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

உலகில் உள்ள இடது சாரிகள் பதுங்கு குழிகளை விட்டு வெளியேறும் தரு ணம் வந்துவிட்டது. அவர் கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கூற வேண்டும். ஆக்ரோஷ மான அரசியல் தத்துவத்தை அவர்கள் உலகெங்கும் எடுத் துச் செல்ல வேண்டும் என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் முழக்கமிட்டார்.

இடதுசாரிகள் முன்னேறி வருகிறார்கள் என்பதை ஒபாமா வெற்றி சுட்டுகிறது. நாற்பது ஆண்டுக ளுக்கு முன் மார்டின் லூதர் கிங்கைச் சுட்டுக் கொன்ற நாட்டில் ஒரு கறுப்பர் ஜனா திபதியாவார் என்று கற்பனை கூடப் பண்ண முடியாது. ஒபாமாவின் வெற்றி மாற்றத்தைக் காட்டுகிறது. நாம் விரும்பும் வேகத்தில் இல்லாவிட்டாலும் மாற் றம் ஏற்படுகிறது என்று பிரேசில் ஜனாதிபதி லூலா தம் உரையில் குறிப்பிட் டார்.

கூடியிருந்த மக்களுக்கு பொலிவிய ஜனாதிபதி வீர வணக்கம் செலுத்தினர். உங் கள் முன்னே நான்கு ஜனாதிபதிகள் (லூலா தவிர) உள் ளனர். இதுஉங்களைப் போன்றவர்களின் போராட்டம் இல்லை என்றால் இவர்கள் இங்கு கூடியிருக்க மாட்டார் என்று மொரால்ஸ் குறிப்பிட்டார்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத குருவாக முன்பு இருந்த பராகுவே ஜனாதிபதி பெர்னாண்டோ லூகோ லத்தீன் அமெரிக்கா மாறி வருகிறது. வடக்கும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் வலு வானவை என்று கூறிய பொருளாதார கொள்கை கள் தோற்றுவிட்டன என்று முழக்கமிட்டார்.

உலகப் பொருளாதார அமைப்பை எதிர்த்து உலக சோசலிசப் பெருமன்றம் நடத்திய பேரணி 6 மணி நேரம் நடைபெற்றது. பேர ணியின் முடிவில் அனைத்து ஜனாதிபதிகளும் உரையாற் றினர்

1 comment:

சந்திப்பு said...

ஒற்றை உலகை வடிவமைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் - பன்னாட்டு பெரும் முதலாளித்துவத்திற்கு எதிரகாவும் இதுபோன்ற மாற்று பொருளாதாரக் கொள்கையுடன் கூடிய இடதுசாரி அரசுகளின் கூட்டமைப்பு எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு ஒளிக்கீற்றாய் தோன்றியுள்ளது. இதுபலப்பட வேண்டும். இதில் பல ஜனநாயக நாடுகளும் இணைந்துக்கொள்வது மிகச் சிறப்பானது.