Thursday, January 29, 2009

77 சதம் பேருக்கு தினசரி வருமானம் ரூ.20! * முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.1 லட்சத்து நான்காயிரம் கோடி * கேரள அமைச்சர் ஒப்பீடு

தையல் கலைஞர்கள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாகர்கோவி லில் நடைபெற்றது. கேரள தொழிற்துறை அமைச்சரும், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவருமான பி.கே.குருதாசன், மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

நமது நாட்டில் 39 கோடி முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். இது மொத்த தொழிலாளர்களில் 83 சதவீதம் ஆகும். இவர்களை பாதுகாக்க வேண்டிது அர சின் கடமை. அரசு, வாரியம், ஆலோச னைக்குழு போன்றவற்றை மட்டும் அறி வித்துள்ளது. பொருளாதார ரீதியாக மேம் படுத்த ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை.

2002 ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற தொழிலாளர் மாநாட் டில் நானும் கலந்து கொண்டேன். அப் போது அரசால் தொழிலாளர் சட்டம் குறித்து கொண்டுவரப்பட்ட நகலை பிஎம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங் களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் எதிர்த்தன. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நகலை முன்வைத்து சட்டமாக்கியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்த்தது. நாமும் மாற்று ஆலோசனை யை முன்வைத்தோம்; ஏற்றுக் கொள்ள வில்லை.

2007 ம் ஆண்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், 77 சதவீதம் பேர் தினசரி ரூ. 20 வருமானம் உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு இலட்சத்து நான்காயிரம் கோடி ரூபாய். அவரது சகோதரர் அனில் அம் பானியின் சொத்து மதிப்பு, 86 ஆயிரம் கோடி ரூபாய். சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகியும் குடியிருக்க வீடில்லாமல் தொழில் இல்லாமல் ஏராளம் பேர் உள்ளனர். மத்திய அரசு அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆறரை கோடி பேர் உள் ளனர். கேரளாவில் இதில் சரிபாதி உள் ளனர். தமிழகத்தில் தையல் கலைஞர் களுக்கு பென்ஷன் கேட்கிறோம். கேரளா வில் மாதம் பென்ஷன் ரூ.860 ரூபாய், விபத்து நிதி ரூ. 2 இலட்சம் வழங்கு கிறோம். கயிறு, தோட்டம், 45 இலட்சம் முறைசாராத் தொழிலாளர்களின் உரிமை களை சீரழித்து, முதலாளிகளுக்கு சலு கை வழங்கிய கேரள காங்கிரஸ் அரசு மாறிய பின்பு தொழிலாளர்களின் உரிமை களை மீட்க பலகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அவரது மலையாள உரையை சிஐடியு மாநில நிர்வாகி விக்ரமன் தமிழில் மொழிபெயர்த்தார்.

அ.சவுந்தரராசன்

சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் பேசுகையில்:

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந் துள்ள நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 6 இலட்சம் பேர் வேலை யிழப்பு, விலைவாசி ஏற்றம் என நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஏழை மக்களுக்கு வாழ்வுரிமை தருவதற்கு பதிலாக, பொங்கல்பரிசு என பிச்சை போடுகிறது தமிழக அரசு. அப்படி யென்றால் 365 நாட்களுக்கும் வழங்க வேண்டி யிருக்கும்.

60 இலட்சம் பேரை நலவாரியத்தில் உறுப்பினர்களாயிருக்க வேண்டும். பல காரணங்களைச் சொல்லி பல விண்ணப் பங்கள் நிராகரிக்கப்படுகிறது. 30 இலட் சம் பேருக்கு வீடு கேட்டால், 3 இலட்சம் பேருக்கு வீட்டுமனை வழங்கியதாக கூறு கிறார்கள். மனு கொடுத்தது 30 இலட்சம் பேர் என்பதை கூற மறுக்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முறை சாரா தொழிலாளர்களுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேற்குவங்கத்தில் ரூ. 60 கோடியாகும்.

அரசு நம்மை கண்டுகொள்ளவில்லையென்றால் பெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றார்.

No comments: