மிகவும் பகட்டுடனும் ஆடம்பரத்துடனும் நடத்தப்பட்ட உலக பொருளாதார அமைப்புக் கூட்டம் படாடோபமின்றி பிரகாச மின்றி ஸ்விட்சர்லாந்து நாட்டின் டேவோஸ் நகரில் புதனன்று (ஜனவரி 28) கூடு கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து பேசவிருந்த ஏ-பட்டியல் வங்கிகளின் எண்ணிக்கை வெட்டப்பட்டுள்ளது. பல நிதி நிறுவனங்கள் தங்களுடைய கேளிக்கை செலவினத்தைக் குறைத்துள்ளன. விலை உயர்ந்த கடல் உணவுகள் இல்லை. சீஸும் ஹேமும் அதற்குப் பதிலாக வழங்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டில் மெர்ரில்லின்ச் வங்கி தலைவர் ஜான்தாய்ன் உரையாற்ற இருந்தார். அந்த வங்கி திவாலானதால் மெர்ரில்லின்சை பேங்க் ஆப் அமெரிக்கா விலைக்கு வாங்கியது. அதை யடுத்து அவர் பதவி விலகி னார். இவர் உலகப் பொருளாதார அமைப்பின் எதிர் காலம் பற்றி பேசவிருந்தார்.
சிட்டி குழும தலைமை நிர்வாகி விக்ரம் பண்டிட் கூட்டத்துக்கு வரவில்லை. இக்கூட்டங்களில் பிரதான இடம் வகித்து வந்த லேமன்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் முடங் கிவிட்டதால் இம்முறை இடம் பெறவில்லை. வால்ஸ்டீரிட்டில் இருந்து வரும் சிறிய குழுவுக்கு ஜேபி மோர்கன் நிறுவனம் தலைமை வகிக்கிறது.
வரவேற்புச் செலவு 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய உணவு விடுதியில் இரண்டு நிகழ்ச் சிகளைப் பொறுப்பேற்று நடத்திய ஒரு வங்கி இம்முறை ஒரு நிகழ்வுடன் நிறுத்திக் கொண்டது என்று சென்ட்ரல் ஸ்போர்ட் ஹோட்டல் பொது மேலாளர் மார்க் டெமிஸ் கூறினார்.
புனிதமானவர்களில் புனிதமானவர் என்று கூறிக் கொண்டு கடந்த காலங்களில் பொருளாதாரம் பற்றி அருளுரை ஆற்றி வந்த பலரின் தொண்டைகள் இப்போது கட்டிக் கொண்டு திணறுகின்றன. ஐந்து நாள் நடைபெறும் இக்கூட்டத் தில் சீன தலைவர் வென்ஜி யாபவ்வும், ரஷ்ய பிரதமர் புடினும் பிரதான இடம் பெறு வார்கள். இவர்களுடன் ஜப்பானின் டாரோசூசோ, ஜெர் மனின் ஏஞ்சலா மெர்க்கெல் மற்றும் பிரிட்டனின் பிரவுனும் அழியும் பொருளாதாரங் களை எவ்வாறு மீட்பது என் பது குறித்து உரையாற்று வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment