Wednesday, January 7, 2009

சச்சினின் ஜீவன் ஆஸ்தா!

25, 30 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் 

விளையாடியவர்கள் தற்கால ஆட்டக்காரர்களைப் 

பார்த்து பொறாமைப்படும் விஷயம் ஒன்று உண்டு. தலையில் 

அடிபடாமல் ஹெல்மெட் போட்டுக்கொண்டு விளையாடுவது

தான் அது. லில்லி, தாம்சன், மால்கம் மார்ஷல், ராபர்ட்ஸ் என்று புயல்

வேகப் பந்து வீச்சாளர்களையெல்லாம் நமது கவாஸ்கர் உள்ளிட்ட 

அனைத்து அணிகளின் ஆட்டக்காரர்களும் பாதுகாப்பு கவசம்

இல்லாமல் தான் எதிர் கொண்டனர். 

தற்கால ஆட்டக்காரர்களில் சிறந்த வீரர் என்று கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், ஹெல்மெட் என்ற பாதுகாப்பு கவசம் மட்டும் இல்லாமல் தனது எதிர்காலத்திற்கும் தேவையான பாதுகாப்பு கவசத்தை அணிவதில் கவனம் செலுத்தியுள்ளார். வருவாய்க்

காக அவிவா என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றிய அவர், 

தனது பணத்தை பாதுகாப்பாக எல்ஐசியில் முதலீடு செய்துள்ளார்.ஒருமுறை விமானத்

தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது பணிப்பெண் கோக் குளிர்பானத்தை அளித்தபோது அதைக் குடிக்க மறுத்துவிட்டார். காரணம் கேட்டபோது, பெப்சிக்காக 

தான் விளம்பரத்தில் தோன்றும்போது வேறொரு நிறுவனத்தின் குளிர்பானத்தைக் 

குடிப்பது சரியாக இருக்காது என்று கூறினார். 

ஆனால் தான் ஈட்டிய பணம் என்று வரும்போது பாதுகாப்பான இடத்தைத்தேடியுள்

ளார். தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் எல்ஐசியின் “ஜீவன் ஆஸ்தா” என்ற திட்டத்தில் அவர் 18 கோடி ரூபாயை முதலீடாகப் போட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர்தான் தனியார் அவிவா நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராவார். 

அவரே பொதுத்துறை எல்ஐசிதான் பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்ற 

இடம்என்று முடிவு செய்துள்ளார். அவிவாவிடம் பணம் வாங்கிக்

கொண்டு விளம்பரத் தூதுவரான சச்சின், 18 கோடி ரூபாய் 

கொடுத்து பொதுத்துறை எல்ஐசிக்கு விளம்பரம்(!) 

தந்துள்ளார். களத்திற்கு வெளியேயும் “ஹெல்மெட்

டின்” அவசியத்தை நன்றாகவே 

உணர்த்தியுள்ளார்

1 comment:

vasu said...
This comment has been removed by the author.