Saturday, January 17, 2009

100,000,000,000,000 டாலர் நோட்டு!

ஒன்றிற்குப்பிறகு 14 பூஜ்யங்களைப் போட்டுக் கொண்டு எவ்வளவு வருகிறது என்று பாருங்கள்.

இந்த நோட்டைதான் ஜிம்பாப்வே வெளியிட்டுள்ளது. 100 டிரில்லியன் டாலர் என்று அழைக்கப்படும் இந்த நோட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் வெறும் 300 டாலர்தான்.

பணவீக்கம் கடுமையாக எகிறியிருக்கும் ஜிம்பாப்வே ஏற்கனவே பில்லியன் டாலர்களை வெளியிட்டிருந்தது. சாப்பிடக்கூட கட்டுக்கட்டாக நோட்டுகளை தூக்கிக் கொண்டு மக்கள் அலைந்த படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜிம்பாப்வேயின் மத்திய வங்கி, வங்கிகளிலிருந்து தங்கள் பணத்தை மக்கள் எடுத்துக் கொள்ளும் வகையில்
இந்தப் புதிய நோட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். முதலில் 10 டிரில்லியன் டாலர் நோட்டு புழக்கத்தில் வரும். அதன்பிறகு 100 டிரில்லியன் டாலர் நோட்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற சமயத்தில் பிரிட்டன் நாணயமான பவுண்
டுக்கு இணையானதாக ஜிம்பாப்வே டாலர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

vasu said...
This comment has been removed by the author.
vasu said...

எப்படி ஜிம்பாப்வே சரிந்தது என்று சற்று விளக்கமாக எழுதலாமே