Sunday, January 18, 2009

பல லட்சம் கோடி டாலர் காண்ட்ராக்ட்டுகளை கைப்பற்ற திட்டம் பன்னாட்டு அணுசக்தி கம்பெனிகள் டில்லியில் முற்றுகை

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்த ஒப்புக் கொண்டு புஷ் நிர்வாகத் திடம் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டு கொடுத்ததன் விளைவாக, இந்தியாவில் பல லட்சம் கோடி டாலர் பெறுமான மின்சார வியாபாரத்தை நடத்த அமெரிக்க நிறுவ னங்கள் உள்ளிட்ட பல் வேறு பன்னாட்டு அணு மின் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வரத் துவங்கியுள்ளன.


இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்திய நாட்டின் அணுசக்தி துறையையும், பாதுகாப்பு இறையாண்மையையும் அமெரிக்காவின் காலடி யில் சமர்ப்பிக்கும் விதமாக இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டை மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தியது. இந்த உடன்பாட்டின் அடிப் படையில் இந்தியாவிட மிருந்து பல லட்சம் கோடி டாலர் பெறுமான அணு உலை, அணு எரிபொருள் மற்றும் அணுமின் உற்பத்தி ஆகியவற்றுக்கான பெரும் காண்ட்ராக்ட்டுகளை கைப்பற்ற பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் இந்திய அரசை நிர்ப்பந் தித்து வருகின்றன.

ஏற்கெனவே பிரான்சின் அரேவா என்னும் அணு சக்தி நிறுவனம் இந்தியா வுக்கு இன்னும் சில மாதங் களில் 300 டன் யுரேனியம் சப்ளை செய்வதாகக் கூறி பெரும் காண்ட்ராக்ட்டை கைப்பற்றியுள்ளது. இது தவிர, தலா 1,600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகளை இந்தி யாவில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையையும் அரேவா நிறுவனம் நடத்தி வருகிறது.

பிரிட்டன்

இந்நிலையில், பிரிட் டன் அயல்துறை மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் லார்டு பீட்டர் மண்டேல் சன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு திங்களன்று இந்தியா வருகிறது. இக்குழு மும்பை மற்றும் புனேயில் அணுசக்தி வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய வர்த் தகத்துறை அமைச்சர் கமல் நாத் மற்றும் இதர அமைச் சர்களை சந்தித்து பேச உள்ள பீட்டர் மண்டேல் சன், இந்திய தொழில் வர்த் தக கூட்டமைப்பின் கூட் டத்திலும் பேசுகிறார். இவ ருடன் வரவுள்ள பிரிட்ட னின் மிகப்பெரும் தனியார் பன்னாட்டு அணுசக்தி நிறு வனங்களுக்கு, இந்தியாவி லிருந்து பெரும் காண்ட் ராக்ட்டுகளை பெற்றுத் தர பீட்டர் மண்டேல்சன் பேச் சுவார்த்தை நடத்துகிறார்.

கனடா

இந்நிலையில், கனடா நாட்டின் சர்வதேச வர்த்த கத்துறை அமைச்சர் ஸ்டாக் வெல் டே, 5 நாள் பயண மாக திங்களன்று இந்தியா வருகிறார். அவருடன் கனடா அணுசக்தி லிமிடெட், எஸ் என்சி லவாலின் அணுசக்தி நிறுவனம் மற்றும் காமேகோ கார்ப்பரேசன் ஆகிய பெரும் நிறுவனங்களின் பிரதிநிதி கள் வருகின்றனர். மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தை சந்தித்துப் பேசும் இவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச திட்டமிட் டுள்ளனர். இந்த சந்திப்பு களின் போது இந்தி யாவில் தங்களது அணுசக்தி வியா பாரத்தை துவக்கவும், இந்தி யாவிலிருந்து பெரு மளவில் லாபத்தை கொண்டு செல்ல வும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பயணம் குறித்து கனடா தலைநகரில் செய்தி யாளர்களிடம் பேசிய ஸ்டாக்வெல் டே, இந்தியா வில் அடுத்த சில ஆண்டு களில் 30 முதல் 40 அணு உலைகள் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என் றும், கனடாவின் பெரும் நிறுவனங்களுக்கு மிகப்பெ ரும் வியாபார வாய்ப்பு இந் தியாவில் காத்திருக்கிறது என்றும் கூறினார். இது தவிர, கனடாவின் அணு உலை தயாரிப்பான காண்டு வகை அணு உலைகளை இந்தியாவுக்கு விற்கவும் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பன்னாட்டு அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் வரையறையின்றி புகுந்து, கொள்ளை லாபம் அடிக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு அனைத்து வித மான ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கியுள்ள நிலையில், இந்திய பெரும் முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தங்களது லாபத்தையும் சமன் செய்து கொள்ள தீவிரமாக முயற் சித்து வருகின்றனர்.

மொத்தத்தில், இந்த அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அணு மின் உலைகளை இன்னும் சில ஆண்டுகளில் துவக்க இருக்கின்றன. இதன் அடுத் தடுத்த விளைவுகளாக, இந் தியா முழுவதும் மின்சார உற்பத்தி முற்றிலும் பெரும் நிறுவனங்களின் வசம் ஒப் படைக்கப்படுவதற்கான பேராபத்து காத்திருக்கிறது என்று தேசபக்த அணுசக்தி துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் அணு உலைகள்

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு பெரும் நிறுவனமான வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி, இந்தியாவில் பல லட்சம் கோடி டாலர் அளவிற்கு அணுசக்தி வியாபாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டி ருப்பதாக, மும்பை வந்துள்ள அந்நிறுவனத்தின் இயக்குநர் ராபர்ட் பியர்ஸ் பிடிஐ செய்தி நிறுவனத் திடம் தெரிவித்தார்.

பிரபல பன்னாட்டு நிறுவனமான தோஷிபா குழுமத்தைச் சேர்ந்த வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி, இந்தியா முழுவதும் பெரும் எண்ணிக்கை யில் அணு உலைகளை அமைக்கவும், அணு உலை அமைப்பதற்கான கருவிகள் உற்பத்தி மற்றும் சேவை கள், பராமரிப்பு மற்றும் அணு உலை வடிவமைப்பு ஆகிய துறைகளில் தீவிரமாக இறங்க திட்டமிட்டிருப்ப தாகவும் ராபர்ட் பியர்ஸ் தெரிவித்தார்.

தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்தில், இந்தியாவின் பல இடங்களில் அணு உலைகளை அமைக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் அதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட எல் அண்டு டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே அணுசக்தி உடன்பாட்டில், 10 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட் டுமே காண்ட்ராக்ட்டுகள் கொடுக்க வேண்டுமென்று மன்மோகன் சிங் அரசை அமெரிக்க புஷ் நிர்வாகம் நிர்ப்பந்தித்தது என்பது நினைவு கூரத்தக்கது.

No comments: