ஏழை - பணக்காரர்கள் இடையே காணப்படும் பெரும் இடைவெளியை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவரும், மாநி லங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யர் கூறி னார்.
இந்தியாவில் ஐ.நா.வின் ஆயிரம் மேம்பாடு இலக்கு நிலைபாடு குறித்த நிகழ்ச்சி தில்லியில் நடந்தது. இதில் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் போன்ற அரசின் பெரும் திட்டங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் நிலையை பிரதிபலிப்பதாக பங்குச் சந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று கருதும் மத்திய அரசு, அதனை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
உயர் கல்வித் துறையில் அரசின் வலியுறுத்தல் குறித்து எச்சரித்த மணிசங்கர் அய்யர், துவக்கநிலை கல்வியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதே கருத்தை காங்கிரஸ் கட்சியின் இன்னொரு தலைவர் திக்விஜய் சிங்கும் வலியுறுத்தியிருந்தார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் திரிபுராவில் 36.6 சதவீத குடியிருப்பு மக்களே 100 நாட்கள் பணிப் பலன் பெற்றுள்ளனர். வறுமையில் உள்ளவர்கள் அதிகம் வாழும் உத் தரப்பிரதேசத்திலும், மத்தியப்பிரதேசத்திலும் 14 சதவீதம் பேர் மட்டுமே 100 நாள் பணிப் பலன் பெற்றனர். சத்திஸ்கர் மாநிலத்தில் 8 சதவீத ஏழைகளை மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் அடைந்துள்ளது என்றும் மணிசங்கர் தெரிவித்தார்.
Wednesday, September 15, 2010
ஏழை - பணக்காரர் இடைவெளியை களைய உரிய நடவடிக்கை இல்லை: மணிசங்கர் அய்யர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment