உ ன்னதமானதாகக் காட்டப்படும் உலகமயமாதல் என்ற சுதந்திரமான, ஜனநாயகமான, நாகரிக சமூக அமைப்பில், மனிதர்கள் சுயசிந்தனையற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்ட மந்தைக் கூட்டமே. இங்கு பண்ணை அடிமைகளாக, பண்ணை மந்தைகளைப் போல் வாழவே கற்றுக் கொள்கின்றோம். சமூக அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும் ஒருங்கே கொண்ட காட்டுமிராண்டிகளாக மனிதர்களை மாற்றுவதில்தான் உலகமயமாதலின் வெற்றி அடங்கியுள்ளது.
இதையே உலகமயமாதலின் நாகரிகமாக நாம் வரித்து கொண்டுள்ளோம். உலகமயமாகும் உன்னதமான நாகரிக உலகின் ஏழ்மையும் மனித அவலங்களும் நாளுக்குநாள் பெருகி வருகின்றது. கிடைக்கின்ற புள்ளிவிபரம் ஒன்று 1820இல் இருந்தைப் போல் அல்லது பல மடங்கு மோசமானதாக இருப்பதை உறுதி செய்கின்றது. இந்த நாகரிகமான, உன்னதமான உலகமயமாதல் சமூக அமைப்பில் ஒரு நிமிடத்துக்கு பசியால் மட்டும் 17 பேர் உலகில் கொல்லப் படுகின்றனர். அதாவது நாள் ஒன்றுக்கு பசியால் 24,000 பேர் வீதம், வருடம் 86 லட்சம் பேர் கொலை செய்யப்படுகின்றனர். இவை சிலர் அனுபவிக்கும் தனிமனித சுதந்திரம் மற்றும் தனிமனித ஜனநாயகத்தின் விளைவுகள். மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படையான தடுப்பு மருந்தை, உன்னதமான உலகமயமாதலின் ஏகபிரதிநிதிகள் மக்களுக்கு மறுப்பதால், வருடம் 5.5 கோடி பேர் கொல்லப்படுகின்றனர். அதாவது நிமிடத்துக்கு 95 பேர் கொல்லப்படுகின்றனர். ஐந்து வயதுக்கு உட்பட்ட 1.2 கோடி குழந்தைகளை, துடிதுடிக்க, மூலதனம் என்ற சுதந்திர ஜனநாயகத்துக்காகவும் சுதந்திரத்தின் வெற்றிக்காவும் வருடாந்தரம் பலியிட்டுக் கொன்று புதைக்கின்றனர்.
மனிதர்களின் அடிப்படையான சமூகத் தேவைகள் சிலரின் நலன் சார்ந்து மறுக்கப்படுவதால், வருடாந்தரம் கோடிக்கணக்கான மக்கள் இயற்கையாகவே கொல்லப்படுகின்றனர். இவை இயற்கை மரணங்கள் அல்ல. ஆனால் அப்படித்தான் இன்றைய சமூகக் கட்டமைப்பு நியாயப்படுத்தி, நீடிக்கின்றது. மூலதனம் நடத்தும் இந்த மனிதப்படுகொலைகளை, கௌரவமான முறையில், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் இவற்றை எல்லாம் இயற்கை மரணங்களாக முத்திரை குத்திப் புதைக்கின்றனர். இவை எல்லாம் உலகெங்கும் ஜனநாயகபூர்வமாக மக்களின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் மேற்பார்வையின் கீழ், அன்றாடம் நடக்கின்றது. இந்த மனிதப் படுகொலைகளை நடத்தும் அரசுகளை, ஜனநாயகம் என்ற பெயரில் மக்களின் பெயரில் மூலதனம் தெரிவு செய்கின்றது. மனிதனின் அடிப்படைத் தேவையை மறுக்கும் உலக பன்னாட்டு மூலதனத்தின் சூறையாடும் உலகளாவிய ஜனநாயகக் கொள்கையால்தான், வருடாந்தரம் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரை மூலதனத்துக்காக பலியிடுகின்றனர். உலகமயமாதல் என்னும் மூலதனக் குவிப்புக் கொள்கையால், நேரடியாக வருடாந்தரம் பல்வேறு காரணங்களால் கொல்லப்படும் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் சுதந்திரமான உயிர்வாழும் உரிமையை இட்டு, இந்த ஜனநாயகத்தைப் போற்றும் யாரும் அக்கறைப்படுவதில்லை. மரணங்களை இயற்கையானதாகக் காட்டி வக்கரித்து கிடக்கின்றனர்.
மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்
இப்படி மக்களைக் கொன்று புதைத்து உருவாகியுள்ள பணக்காரக் கும்பலே, உலக நாகரிகத்தின் உயர் சின்னங்களாகப் பவனிவருகின்றனர். இப்படி 1998இல் உலகில் உருவானவர்களில் முதல் மூன்று செல்வந்தர்களின் சொத்து 48 நாடுகளின் தேசிய வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. 1999 ஐ.நா அறிக்கை ஒன்றின்படி அடிப்படை சுகாதாரம், சத்துணவு, அடிப்படைக் கல்வி, குடிநீர், இனப்பெருக்கம் சார்ந்த சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த 4,000 கோடி டாலர் தேவை என்று கூறுகின்றது. உலகில் அதிக செல்வம் வைத்திருந்த 200 பேரின் சொத்தில் ஒரு சதவீதத்தைக் கொண்டு, அதாவது 700 கோடி டாலரைக் கொண்டு உலகம் முழுவதும் ஆரம்பக் கல்வியைப் புகட்டமுடியும். 200 செல்வந்தர்களின் செல்வத்தில் ஐந்து சதவீதத்தைக் கொண்டு அனைத்து அடிப்படையான சமூகத் தேவையையும் உலகம் முழுக்க பூர்த்தி செய்யமுடியும். இதன் மூலம் வருடாந்தரம் மூலதனத்தின் வெறியாட்டத்துக்கு இரையாகும் பத்து கோடி மக்களின் உயிரையும் கூட நாம் காப்பாற்ற முடியும். உண்மையில் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வழி என்ன என்பதை, இது இலகுவாக எடுத்து இயம்புகின்றது. மனித துயரங்கள் ஏற்படுத்தும் அவலங்களின் பட்டியல் நீண்டவை. அதை பின்னால் தனியாக விரிவாகப் பார்ப்போம். இந்த மனிதர்களின் துயரத்துக்கு காரணமானவர்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்ன என்பதை, முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.
2004இல் உலகிலேயே அதிக நுகர்வை நுகர்பவர்களும், உலக மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்களும் உலக செல்வத்தில் 86 சதவீதத்தை தனதாக்கி நுகரும் ஜனநாயகமே இன்று உலகமயமாதலாக உள்ளது. உலக மக்கள் தொகையில் அடியில் உள்ள 20 சதவீதமான ஏழைகள் உலக செல்வத்தில், வெறுமனே ஒரு சதவீதத்தையே நுகர்கின்றனர். இதுவே இன்றைய நாகரிக அமைப்பால் பீற்றப்படும் ஜனநாயகம். இதுவே இன்றைய சுதந்திரத்தின் இரத்தக் கொப்பளிப்பு. இதுவே இன்றைய உலகமயமாதல். இதற்கு அரசியல் ரீதியான வேறு விளக்கம் எதுவும் கிடையாது.
மக்களைப் பட்டினி போட்டு, உயிர் வாழ்வதற்கான அவசியமான அடிப்படைகளை எல்லாம் கொள்ளையிட்டு, கொன்று போடும் உலகமயமாதல் அமைப்பில் சிலர் நலன் மட்டுமே பாதுகாக்கப் படுகின்றது. அந்த வகையில் 2001இல் உலகளவில் பத்து லட்சம் டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்துடைய மக்கள் விரோதிகளின் எண்ணிக்கை 71 லட்சமாக இனம் காணப்பட்டது. இது 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. 2001இல் இந்த மனித விரோதிகளின் தனிப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 26,20,000 கோடி (2.62 லட்சம் கோடி டாலராகும்) டாலராக இருந்தது. 2003இல் பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்தை உடைய மக்கள் விரோதக் கும்பல் முன்பைவிட பெருகியுள்ளது. இந்த வகையில் 77 லட்சம் பேர் உலகில் இனம் காணப்பட்டுள்ளனர். இது 2002யைவிட 5 லட்சம் அதிகமாகும். உலகமயமாதலில் பணக்காரக் கும்பல் பெருகுவதுடன், அவர்களின் சொத்துக்கள் குவிகின்றன. இதை அன்றாடம் இழப்பவர்கள் உலகில் உள்ள பரந்துபட்ட மக்கள் கூட்டங்களே.
2003இல் உலக மொத்தப் பணக்காரர்களில் 32 சதவீதம் பேர் அமெரிக்காவில் இருந்தனர். இதுவும் சென்ற வருடத்தை விட 13.6 சதவீதம் அதிகமாகும். 13.6 சதவீத அதிகரிப்பு 850 கோடி டாலரை பிரதிநிதித்துவம் செய்கின்றது. 3 கோடி டாலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் எண்ணிக்கை 70,000 பேராவர். இது 2002இல் 58,000 மட்டுமே. 1975இல் அமெரிக்காவில் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான வருமானம் உடையோர் 4,500 பேர் மட்டுமே இருந்தனர். 1979இல் அமெரிக்க லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். இன்று இவை பல பத்து லட்சமாகி விட்டது.
இந்த சமூகவிரோதக் கும்பல்கள், உலக மக்களின் செல்வங்களைக் கவருவதும், அதை தனிப்பட்ட தனிமனிதனின் சொத்தாக்குவதும், இன்றைய நாகரிக அமைப்பின் சுதந்திரம் மட்டுமின்றி இதுவே ஜனநாயகமாகவும் உள்ளது. இதைப் பாதுகாக்கவும், பெருக்கவும் உருவான நவீன வடிவமே உலகமயமாதலாகும். பணக்கார சமூக விரோதக் கும்பல்களின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத்தில் நாம் இன்று வாழ்கின்றோம். அவர்களின் நலன்கள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில்தான் நாம் உயிர் வாழ்கின்றோம். இது சூக்குமமான இணைப்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் மக்களை அடிமைப்படுத்தி, கொள்ளையிட்டு கொழுக்கும் சமூகவிரோதக் கும்பலைச் சேர்ந்த 475 முன்னணி உலக பணக்காரக் கும்பல்களின் தனிப்பட்ட சொத்து, 1999இல் உலகில் அடிநிலையில் உள்ள 50 சதவீதமான மக்களின் வருடாந்தர வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரின் வருமானம், உலக மக்களில் அடிநிலையில் உள்ள 57 சதவீதம் பேரின் வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. எவ்வளவு கேவலமான ஒரு சமூக அமைப்பில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்காவில் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் 1989இல் 13 பேர் மட்டும் தான். இது 1996இல் 149 யாக உயர்ந்தது. உலகமயமாதல் மட்டுமின்றி, உலகமே எப்படி எதற்காக சுற்றுகின்றது என்பதையே இது நிர்வாணமாக்குகின்றது.
1997இல் முதல் பணக்காரனின் தனிப்பட்ட சொத்து 26 வறிய நாடுகளின் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. அதேநேரம் முதல் 200 பணக்காரக் கும்பலின் சொத்து அடிநிலையில் உள்ள 40 சதவீதமான உலக மக்களின் வருமானத்துக்கு நிகரானதாக இருந்தது. 1994க்கும் 1998க்கும் இடையில் உலகின் முதல் 200 பணக்காரர்களின் சொத்து 44,000 கோடி டாலரில் இருந்து 1,00,000 கோடி டாலராக அதிகரித்தது. அதாவது இது உலக மக்கள் தொகையில் 41 சதவீதமானவர்களின், அதாவது 246 கோடி மக்களின் மொத்த வருமானத்துக்குச் சமமாக இருந்தது. முதல் 4 பேரின் தனிப்பட்ட சொத்துக்கள் 48 வறிய நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாக இருந்தது. 1998 ஐ.நா அறிக்கை ஒன்றில் உலகில் உள்ள முதல் மூன்று பணக்காரனின் சொத்து, 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டியது. ஆப்பிரிக்காவின் சகாராப் பகுதியின் வருமானத்தை விட உலகின் முதல் 15 பணக்காரர்களின் சொத்து அதிகமாக இருந்தது. தெற்காசிய நாட்டு மக்களின் சொத்தை விட முதல் 32 பணக்காரரின் சொத்துக்கள் அதிகமாக இருந்தது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சமநிலைத் தன்மை என்ன என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. உலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் தனிமனித சுதந்திரம், தனிமனித ஜனநாயகம் என்ற அடிப்படையில், அனைத்தையும் தனிப்பட்ட தனிநபர்களின் சொத்தாக்குகின்றனர். சமூகத்தின் சுதந்திரம், சமூகத்தின் ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் போதுதான், உலகமயமாதலின் சுதந்திரம், ஜனநாயகம் என்பதே உயிர் வாழ முடிகின்றது. அந்த உலகமயமாதல் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தமதாக்கி அனுபவித்து கொழுக்கும், உலகில் தனிப்பட்ட சொத்தைக் கொண்ட முதல் 200 தனிப்பட்ட பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் எப்படி அதிகரித்து வருகின்றது எனப் பார்ப்போம்.
1990 46,300 கோடி டாலர்
1991 51,400 கோடி டாலர்
1992 51,500 கோடி டாலர்
1993 52,300 கோடி டாலர்
1994 58,700 கோடி டாலர்
1995 67,800 கோடி டாலர்
1996 77,400 கோடி டாலர்
1997 79,800 கோடி டாலர்
1998 87,900 கோடி டாலர்
1999 1,00,000 கோடி டாலர்
2004 1,28,800 கோடி டாலர்
1990 உடன் ஒப்பிடும் போது உலகமயமாதல் மூலம், 1999இல் தனிப்பட்ட நபர்களின் சொத்துக் குவிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1990யை 2004யுடன் ஒப்பிடும் போது இது மூன்று மடங்காகி உள்ளதை உலகமயமாதல் பளிச்சென்று வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்படி சொத்துக் குவிப்பு ஏற்படும் போது, யாரோ நிச்சயமாக அதை இழந்தேயாக வேண்டும். இந்த பணக்காரக் கும்பலிடம் சொத்துக்களை இழப்பது உலக மக்கள் தான். இதற்கென்று வேறு வழி எதுவும் கிடையாது. அதாவது மக்களின் அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களையும் ஒட்டச் சுரண்டுவதே, உலகமயமாதலின் இலட்சியமாகி விட்டதையே இது ஒளிவுமறைவின்றி எடுத்துக்காட்டி விடுகின்றது. உலகமயமாதலில் செல்வம் மிகப்பெரிய பணக்காரக் கும்பலிடம் குவிந்து வந்ததையும், வருவதையும் புள்ளிவிபரங்களே சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவி விடுகின்றது. 1994இல் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை எடுத்து ஆராய்ந்தால், 2004 முதல் 200 பணக்காரர்களின் மொத்தச் சொத்தை விட, நான்கே நான்கு நாடுகள் மட்டுமே அதிக வருமானத்தைப் பெற்று இருந்தன. இதை 1994யுடன் எடுத்து ஆராய்ந்தால் ஏழு நாடுகள் மட்டுமே, முதல் 200 பணக்காரக் கும்பலின் சொத்துக்களைவிட அதிக தேசிய வருமானத்தைப் பெற்று இருந்தன. இதுவே, இன்றைய உலகமயமாதலின் வெட்டுமுகம்.
செல்வம் தனிப்பட்டவரிடத்தில் குவியும் போது ஏழைகள் பெருக்கெடுக்கின்றனர்.
செல்வங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய தனிப்பட்ட நபர்களிடம் எப்படி எங்கிருந்து குவிகின்றது? உலகமயமாதல் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இது ஒரு அடிப்படையான கேள்வியாகும். இதை ஒவ்வொருவரும் கேட்காத வரை உலகமயமாதலைப் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தனிப்பட்ட ஒருவனிடம் குவிகின்ற போது, மற்றவன் நிச்சயமாக அதை இழக்கவேண்டும், இழந்தேயாக வேண்டும். இது பணம் குவிதலில் உள்ள அடிப்படையான ஒரு இயங்கியல் விதி. இதை எடுப்பாகவும் இயல்பாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியாதவகையில், சூட்சுமமாகவே உலகம் காட்சியளிக்கின்றது. பணம் என்பது வெறுமனே வெற்றுத் தாள்களைக் (பேப்பர்களைக்) கொண்டவையல்ல. மனித உழைப்பை குறிப்பதற்கான அளவுகோலை அடிப்படையாகக் கொண்டே, பணத்தாள் அச்சடிக்கப் படுகின்றது. பணம் என்பது அதாவது செல்வம் என்பது உழைப்பை அளவுகோலாகக் கொண்டு அளக்கப்படுகின்றது. எவ்வளவு பணம் குவிந்து கிடக்கின்றதோ, அந்தளவுக்கு மக்களின் உழைப்பை சுரண்டிக் குவித்துள்ளனர் என்பதே இதன் அர்த்தம்.
மார்க்ஸ் தனது ஆய்வில் ""வாழ்க்கைச் சாதனங்களுக்குச் சொந்தக்காரன் அங்காடியிலே உழைப்பாற்றலை விற்க வரும் பாட்டாளியைச் சந்திக்கும் போதுதான் முதலாளித்துவம் உயிர் பெற்றெழுகின்றது'' என்றார். முதலாளித்துவம் எப்படி உயிர் பெறுகின்றதோ, அதேபோல்தான் செல்வம் குவியும் போது உழைக்கும் மக்கள் அதை இழந்தேயாக வேண்டும். இப்படி இருக்கும் போது தனிப்பட்ட முதல் 200 பணக்காரர்களின் சொத்துக்கள், எப்படி அவர்களின் சொந்த, தனிப்பட்ட உழைப்பில் இருந்து குவிய முடியும். உலகளாவிய மக்களை வரைமுறையின்றி சூறையாடிய போதே, கடந்த 10 வருடத்தில் தனிப்பட்டவர்களின் சொத்துக்கள் இரட்டிப்பாகியது. 15 வருடத்தில் இதுவே மூன்று மடங்காகியது. அதாவது மனித சமூகத்தின் அடிப்படையான சமூகத் தேவைகள் மறுக்கப்படும் போதே, சொத்துக் குவிப்பு நிகழ்கின்றது. உலகளவில் மனித உழைப்பை வரைமுறையின்றி சூறையாடப்படும்போது, அது தனிநபர்களிடம் பல மடங்காகவே குவிகின்றது. இவை உலகளவில் பரந்த தளத்தில் நடக்கின்றது. பணம் குவிந்து செல்லும் போது, ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் அதிகரிக்கின்றது. இதையே சுதந்திரமான உலகமயமாதல், தனது ஆன்மாவாகக் கொண்டு தனது சொந்த ஆணையில் வைக்கின்றது. பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளியை ஆராயும் போது, இவை அதிர்ச்சிகரமான உண்மைகளாக வெளிப்பட்டு நிர்வாணமாகி விடுகின்றது.
1820 1 பணக்காரனுக்கு 3 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1870 1 பணக்காரனுக்கு 5 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1913 1 பணக்காரனுக்கு 11 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1950 1 பணக்காரனுக்கு 35 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1970 1 பணக்காரனுக்கு 40 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1973 1 பணக்காரனுக்கு 44 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1990 1 பணக்காரனுக்கு 60 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1992 1 பணக்காரனுக்கு 72 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1997 1 பணக்காரனுக்கு 727 ஏழைகளே உலகில் இருந்தனர்.
2001 1 பணக்காரனுக்கு 845 ஏழைகளே உலகில் இருந்தனர்.
எப்படி உலகம் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக மாறி வருகின்றது என்பதையே ஒளிவுமறைவின்றி இவை எடுத்துக் காட்டுகின்றது. உழைக்காதவன் உழைக்கும் மக்களுக்கு எதிராக குவிக்கும் செல்வத்தின் அளவையே இது எடுத்துக்காட்டுகின்றது. இதனடிப்படையில் 2004இல் உலகமயமாதலின் கீழ் பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில் உள்ள இடைவெளி, மேலும் பல மடங்காகி இருக்கும் என்ற உண்மையை, பணக்குவிப்பு எடுத்துக்காட்டி விடுகின்றது. நாம் சில உண்மைகளை விரும்பியோ அல்லது விரும்பாவிட்டாலும் கூட புரிந்து கொண்டேயாக வேண்டும். மக்களிடையே செல்வம் பரவிக் கிடந்த நிலை என்பது, ஜனநாயகம் சுதந்திரத்தின் பெயரில் எப்படி படிப்படியாக மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு வருகின்றது என்பதையே, மேலே உள்ள அடிப்படைத் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. நவீன சுதந்திரம், ஜனநாயகம் என்பது பணம் சிலரிடம் குவிவதையும், ஏழைகள் பெருகி வருவதையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு உலகமயமாதல் என்பது தேசிய எல்லைகளை சுதந்திரமாகக் கடந்து சென்று பணக்குவிப்பை வேகப்படுத்துகின்றது. உலகளவில் ஏழைகள் பெருகி வருவதையும், மக்கள் விரோத புல்லுருவிக் கூட்டம் ஒன்று உருவாகி வருவதையும், அவர்கள் மக்கள் மேல் வக்கரித்து எப்படி உருவாகின்றனர் என்பதையுமே இவை எடுத்துக் காட்டுகின்றது. இந்த வக்கிரமான நிலையை மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், இதன் விளைவை மேலும் நெருக்கி நுணுக்கமாகவே பார்க்கமுடியும். உலகில் ஏழை மற்றும் பணக்காரர்களின் எண்ணிக்கை
1820 26.7 கோடி பணக்காரனுக்கு 80.10 கோடி ஏழைகள் இருந்தனர்.
1950 7.08 கோடி பணக்காரனுக்கு 247.91 கோடி ஏழைகள் இருந்தனர்.
1973 8.75 கோடி பணக்காரனுக்கு 385.09 கோடி ஏழைகள் இருந்தனர்.
1992 7.45 கோடி பணக்காரனுக்கு 536.64 கோடி ஏழைகள் இருந்தனர்.
1997 80.02 லட்சம் பணக்காரனுக்கு 583.68 கோடி ஏழைகள் இருந்தனர்.
2001 71.00 லட்சம் பணக்காரனுக்கு 600.30 கோடி ஏழைகள் இருந்தனர்.
1997இல் உலக மக்கள் தொகையில் 99.77 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர். இங்கு ஏழைகள் என்பது மத்தியதர வர்க்கத்தையும் உள்ளடக்கியது. மத்தியதர வர்க்கம் தனது சொந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் விளிம்பில் வாழ்பவர்கள். இவர்கள் அன்றாடம் உழைத்தால் தான், தமது வாழ்நிலையை தக்க வைக்கமுடியும் என்ற நிலையில் உள்ளவர்கள். இதற்கு இவர்களிடம் எந்த மாற்றும் கிடையாது. இவர்களை பணக்காரர்கள் என்று வரையறுக்க முடியாது. பணக்காரன் என்பவன் தேவைக்கு அதிகமாக சொத்துக் குவித்து அதில் ஆடம்பரமாக வாழ்பவன். இவன் உழைத்து வாழவேண்டிய அவசியமில்லை. உழைப்பைச் சுரண்டுவதே இவனின் சிறப்புப் பணியாக உள்ளது. இதற்கு மாறாக 0.23 சதவீதம் பேர் உலகின் அனைத்து செல்வத்தினதும் சொந்தக்காரராக இருந்தனர். இந்த சமூக விரோத புல்லுருவி வர்க்கத்தின் நலன்களே, இன்றைய சுதந்திரமும் ஜனநாயகமாகும். இதைத்தாண்டி யாரும் இதற்கு வேறு விளக்கம் தரவேமுடியாது. உண்மையில் சொத்துடமை மறுப்பும், சொத்துடமை குவிப்பும் உள்ளடக்கி சமூக அமைப்பை நியாயப்படுத்தி வக்கரிப்பதே ஜனநாயகத்தின் உயர்ந்தபட்ச கோட்பாட்டு விளக்கமாகும். பரந்துபட்ட மக்களுக்கு சொத்துரிமையை மறுப்பதே சுதந்திரத்தின் வரைவிலக்கணமாகும். இதை உலகளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்துவதே, உலகமயமாதலின் உள்ளடக்கமாகும்.
சமூக எதார்த்தம் உழைப்பவனுக்கு எதிராகவே பயணிக்கின்றது.
உலகமயமாதல் என்றால் என்ன என்ற பொருளை எதார்த்தம் நடைமுறையில் நிறுவுகின்றது. 1997க்கு பின் 100 கோடியை விட அதிக சொத்துடையவர்களின் சொத்து 66.4 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் மூலம் ஏழைகளின் அதிகரிப்பை உலகமயமாதல் இயல்பாகவே எடுப்பாக எடுத்து இயம்புகின்றது. ஏழைகளின் பிணங்களின் மேலான அஸ்த்திவாரத்தில்தான், நவீன உலகமயமாதல் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் வெட்டுமுகம் மிகவும் இழிவானது. 1960இல் உலகில் முன்னணி 20 சதவீத பணக்கார நாடுகளின் வருமானம், அடியில் உள்ள 20 சதவீதமான ஏழைநாடுகளை விட 30 மடங்கு அதிகமாக இருந்தது. இது உலகமயமாதலின் பண்பாக 1990இல் 60 மடங்காகியுள்ளது. உலகில் என்ன நடக்கின்றது என்பதை இது தெளிவாகவே நிர்வாணமாக்கி விடுகின்றது. 19891999க்கும் இடையில் ஒரு நபருக்கு 1.5 முதல் 1.8 சதவீதம் என்ற அளவில், உலகில் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இந்த பத்து வருடத்தில் 80க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்ததை விட குறைந்து வந்துள்ளது. 50 நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்றது.
நாம் இந்த உலகத்தின் சூட்சுமத்தைக் கடந்து, சில உண்மைகளை புரிந்து கொண்டேயாகவேண்டும். உழைப்பாளியின் சொந்த உழைப்பின் இழப்புதான், பெரும் பணக்காரக் கும்பலை ஒவ்வொரு கணமும் உருவாக்குகின்றது. பரந்துபட்ட உலக மக்களின் சொந்த இழப்புதான், தனி மனிதர்களை மிதப்பாக்குகின்றது. இந்த பணக்காரக் கும்பலின் கட்டமைப்பை கட்டிப்பாதுகாக்கும் சுதந்திரம்தான், ஜனநாயகமாகின்றது. இதற்கு வெளியில் எந்த விளக்கமும் இருப்பதில்லை. உலகளவில் கம்யூனிசம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதுகாப்பும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போலிக் கம்யூனிசமும் தகர்ந்தபோது, ஏழைகள் பெருகிச் சென்றதையே மேலே உள்ள தரவுகள் பளிச்சென்று உண்மைகளைப் போட்டு உடைக்கின்றது. இந்த தனிப்பட்ட சொத்துக் குவிப்பின் பின் உள்ள வக்கிரத்தை மேலும் விரிவாகப் பாப்போம்.
1982இல் உலகில் 100 கோடிக்கும் அதிகமாக தனிப்பட்ட சொத்தை வைத்திருந்தோர் 12 பேர் மட்டுமே. ஆனால் 2004இல் 587 பேராக அதிகரித்தது. 2005இல் இது 691யாக பெருக்கெடுத்துள்ளது. 1982 முதல் பணக்காரனின் சொத்து 200 கோடியாக இருந்தது. ஆனால் 1999இல் முதல் பணக்காரனின் சொத்து 8,500 கோடி டாலராகியது. 2003இல் முதல் பணக்காரரின் சொத்து 10,300 கோடி டாலராகியுள்ளது. உலகமயமாதல் எதைத்தான் இந்த உலகுக்கு உருவாக்கி கொடுக்கின்றது என்பதை இந்த பணக்கார வர்க்கத்தின் வெட்டுமுகம் தெட்டத் தெளிவாகவே எடுத்துக்காட்டுகின்றது.
இந்த சமூக விரோத செல்வக் குவிப்பு வெளிப்படுத்தும் வக்கிரம் விரிவான ஒன்று. 1997இல் 149 அமெரிக்கர்கள் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துக்களை வைத்து இருந்தனர். இது 1996இல் 96 பேர் மட்டுமே. 2000ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடையவர்களின் மொத்தச் சொத்து 1,10,000 கோடி டாலராக இருந்தது. இது 1999 உடன் ஒப்பிடும் போது 10,000 கோடி டாலராக அதிகரித்திருந்தது. 1999இல் முதல் 200 மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் 200 கோடி டாலருக்கும் அதிகமாக இருந்தது. இவர்களின் மொத்தச் சொத்தின் பெறுமதி 1,00,000 கோடி டாலருக்கும் அதிகமாகும். இவர்களின் சொத்தை 1990 உடன் ஒப்பிடும் போது 53,700 கோடி டாலராக அதிகரித்தது. 2000ஆம் ஆண்டில் முதல் 400 பணக்காரர்களின் மொத்தச் சொத்துக்கள் 2,00,000 கோடி டாலராக இருந்தது. 2001இல் 538 பேர் 100 கோடிக்கு அதிகமான சொத்தைக் கொண்ட கொழுத்த மக்கள் விரோத, சமூக விரோதிகளாக இனம் காணப்பட்டனர். 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய 216 பேர் புதிதாக உருவாகியிருந்தனர். இவர்கள் 46 நாட்டைச் சேர்ந்தவர்கள். முதல் 500 பணக்காரரில் 271 மக்கள் விரோதிகள் அமெரிக்கராவர். இவர்களின் சராசரி சொத்து 320 கோடி டாலராக இருந்தது. அண்ணளவாக இது 1,72,160 கோடி டாலராகியது. இதை 2000 ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒரே வருடத்தில் 62,000 கோடி டாலராக அதிகரித்திருந்தது.
2002ஆம் ஆண்டில் 497 பேர் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடைய மக்கள் விரோத கும்பல் என்று இனம் காணப்பட்டது. இவர்களின் மொத்தச் சொத்து 1,56,555 கோடி டாலராகும். இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சற்றுக் குறைவுதான். ஆனால் 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 46,000 கோடியாக அதிகமாகும். அதாவது 2000ஆம் ஆண்டு நுகர்ச்சி வெறி சார்ந்த சந்தைக் கொண்டாட்டம் திடீர் அதிர்வை உருவாக்கியது. இது ஏற்படுத்திய வீக்கம் பின்னால் படிப்படியாக சீரடைவதை பிந்திய நிலைமை காட்டுகின்றது. 2002இல் புதிதாக 28 பேர் 100 கோடி டாலருக்கு சொந்தக்காரர்கள். அதேநேரம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சர்வதேச நெருக்கடிகளால், 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய பணக்காரர்களின் சராசரிச் சொத்துக்கள் 320 கோடியில் இருந்து 310 கோடி டாலராக வீழ்ச்சி கண்டது. மீண்டும் 2003இல் 48 பேர் புதிதாக 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடையோர் கும்பல் ஒன்று புதிதாக உருவாகியது. இதன் மூலம் 476 பேர் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய மக்கள் விரோதக் கும்பல் என்று இனம் காணப்பட்டது. இவர்களின் மொத்தச்சொத்து 1,40,000 கோடி டாலராகியது. அதாவது பிரிட்டனின் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமமானதாக இது இருந்தது.
தொடர்ச்சியாக 2004ஆம் ஆண்டில் 100 கோடிக்கு அதிகமான சொத்துடைய மக்கள்விரோதக் கும்பல் 587 பேர் இனம் காணப்பட்டனர். இவர்கள் மக்களைக் கொள்ளையிட்டு சேகரித்த மொத்தச் சொத்தின் பெறுமதி 1,90,000 கோடி டாலராக இருந்தது. 2002க்கும் 2004க்கும் இடைப்பட்ட இரண்டு வருடத்தில் உலக பணக்காரர்களின் மக்கள் விரோதச் சொத்து 50,000 கோடியாக அதிகரித்தது. இது 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 80,000 கோடி டாலராக அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 1997இல் இருந்த உலகளாவிய முதல் 200 பணக்காரரின் மொத்தச் சொத்துக்குச் சமமானதாக 2000க்கும் 2004க்கும் இடையில் வீங்கி வெதும்பி நிற்கின்றது. எங்கும் மனித இனத்தை நிர்வாணமாக்கி கொள்ளையடிப்பதன் மூலம் கொழுப்பு ஏறுகின்றது. இதுவே 2005இல் மேலும் வெம்பியது. மொத்தமாக 691 பேர் 100 கோடிக்கு அதிகமான சொத்தை குவித்தனர். இதன் மொத்தப் பெறுமானம் 2,20,000 கோடி டாலராகியது. 2004யுடன் ஒப்பிடும் போது 2005இல் 30,000 கோடி டாலரால் மிகப் பெரிய மக்கள் விரோதக் கும்பலின் சொத்துக்களின் பெறுமதி அதிகரித்தது. இதை 2000யுடன் ஒப்பிடும் போது 80,000 கோடி டாலரால் தனிப்பட்ட சொத்துக்கள் அதிகரித்தது. இதை இழந்தவர்கள் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள்தான்.
2004இல் அதிக சொத்து அதிகரிப்பு பெற்ற மக்கள் விரோதியான வாரன்புவ்பெகற் (ஙிச்ணூணூஞுண ஆதஞூஞூஞுtt) என்பவன், ஒரே வருடத்தில் 1,240 கோடி டாலரை புதிதாக தனது கணக்கில் சேர்த்துக் கொண்டான். இதன் மூலம் தனது தனிப்பட்ட சொத்தை 16,000 கோடி டாலராக்கினான். இலக்கியம் என்ற பெயரில் ஏச்ணூணூதூ கணிttஞுணூ ண்ஞுணூடிஞுண் எழுதி விற்ற ஒணிச்ணணஞு ஓச்tடடூஞுஞுண கீணிதீடூடிணஞ் என்ற மக்கள் விரோத எழுத்தாளர், (இவர் ஒரு பெண்) மக்கள் விரோத பணக்காரக் கும்பல் வரிசையில் 18வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் முன்னர் சமூக நல உதவிப்பணம் பெற்றே வாழ்ந்தவர். இவர் சிறுவர்களுக்கு வன்முறை சார்ந்த மனித விரோதக் கதைகளை எழுதிய பின்னரே, அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்த பணத்தைப் பிடுங்கியே முதல்தரமான கோடீஸ்வரரானவர். அத்துடன் இந்த குழந்தைக் கதைகள் மூலம் பண்பாட்டுச் சீரழிவுகளை உருவாக்கி, பலவிதமான பண்பாடுகளையும் அழித்தொழித்தவர். சுதந்திரமான இலக்கியமும், சுதந்திரமான சந்தையும் காதல் கொண்ட போது, கோடி கோடியாக மக்களின் உழைப்பைப் பிடுங்கி எடுத்தவர். இப்படியும் உலகின் செல்வங்கள், சிலர் கையில் குவிகின்றது, குவிந்து வருகின்றது.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய கும்பலை 2003ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2004இல் 64 பேர் புதியவர்கள். இதில் ருசியாவை எடுத்தால் 2003இல் 17 பேராக இருந்த எண்ணிக்கை, 2004இல் 25ஆக அதிகரித்துள்ளது. 2005இல் 36 பேராக மாறியுள்ளது. பணக்காரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு பின்னால் ருசியா புதிதாக இணைந்துள்ளது. கம்யூனிசத்தின் அடிப்படைகள் அனைத்தையும் துடைத்தெறிந்து கழுவேற்றிய பிறகு, ருசியப் பணக்கார வர்க்கத்தின் சொர்க்கம் களைகட்டி நிற்பதையே காட்டுகின்றது. உழைக்கும் மக்கள் தமது அடிப்படையான சமூக வாழ்வை இழந்து விடுவது துரிதமாகவே அரங்கேறிவிடும் போது, ருசியாவின் புதிய பணக்காரர்கள் உலகம் தெரிய வக்கிரமாகவே உருவாகிவிடுகின்றனர்.
2002இல் ருசியாவில் 10 லட்சம் தனிப்பட்ட முதலாளிகளும், 20 லட்சம் வர்த்தகர்களும், 6 லட்சம் நிலப்பிரபுக்களையும் கொண்ட ஒரு சமூக விரோதக் கும்பலே உருவாகியிருந்தது. இவர்கள் 14 கோடி மக்களின் தலைவிதியையே கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றனர். சராசரியாக மாத வருமானம் 140 டாலர் என்ற நிலைக்குள் ருசியா சரிந்து வீழ்ந்துள்ளது. 1991இல் மிகச் செல்வம் கொழித்த 10 சதவீதமானோரின் வருமானம், ஏழைகளை விட 4.5 மடங்கு அதிகமாகவே காணப்பட்டது. இது 2000இல் 14.3 மடங்காகியுள்ளது. ருசியாவில் உள்ள 2 சதவீத பணக்காரர்கள் நாட்டின் வருமானத்தில் 33.5 சதவீதத்தை பெறும் நிலைக்கு நாடு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. வறுமையில் உள்ள பத்து சதவீதத்தினர் வருமானமோ மொத்த தேசிய வருமானத்தில் 2.4 சதவீதம் என்ற அளவுக்கு ஏழ்மையை ஜனநாயகமாகியுள்ளது. 2001இல் ருசியாவில் வாழ குறைந்த பட்சம் ஒருவருக்கு மாதம் 55 டாலர் தேவை என அரசாங்கம் அறிவித்தது. ஆனால் ருசியாவில் வாழும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இதைவிடக் குறைவாகப் பெற்ற பரம ஏழைகளாகி உள்ளனர். 2005இல் ருசியாவில் 90 லட்சம் குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழ்வதாக யுனிசேவ் அறிவித்தது. இதே நிலையில் 2.98 கோடி மக்கள் வாழ்வதாக கூறுகின்றனர். ருசியா மீட்டதாகக் கூறும் ஜனநாயகம் இதுதான். இது எதிர்மறையில் 2003இல் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடைய 17 பேர் கொண்ட சமூக விரோதக் கும்பல் ஒன்றை உருவாக்கியது. ஜனநாயகம் என்பது சமூக விரோதிகள் உயிர்உள்ள ஆன்மாவாகியுள்ளதையே, தரவுகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உண்மையில் அரசு சொத்துக்களை சிலர் தமதாக்கியதன் மொத்த விளைவே இது. சோசலிச கட்டமைப்பில் இருந்த ருசியாவில் சட்டப்படி தனிச் சொத்துரிமை ஒழிக்கப்பட்டு இருந்தது. இன்று இந்த நாட்டில் நூறு கோடிக்கும், பல பத்து கோடிகளுக்கும் சிலர் சொந்தக்காரராக உள்ள நிலைமை, அந்த மக்களின் சொத்துக்களை திருடியதன் விளைவால் தான் ஏற்பட முடியும். இதைத் தான் ஜனநாயகம் என்றும், சுதந்திரம் என்றும் பீற்றுகின்றனர். இதுவே சீனாவிலும் நடந்து வருகின்றது. மக்களின் உழைப்பைத் திருடுவதே ஜனநாயகமாகியபோது, சொத்துக்குவிப்பே சுதந்திரமான ஜனநாயகப் பூங்காவாகியது.
இப்படி பூங்காவாகியதன் விளைவு பயங்கரமானது. 2004இல் ருசியாவில் முதல் 100 கோடீஸ்வரர்களின் சொத்து 14,000 கோடி டாலராகியது. முதல் 10 பணக்காரர்களின் சொத்து 400 கோடி டாலருக்கும் அதிகமாகியது. 1997இல் நான்கு பேர் மட்டும் தான் 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தனர். இது 2004இல் 36யாக மாறியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கும்பல் திருடிச் சேகரித்தச் சொத்து, அமெரிக்காவில் திருடிய அளவைவிடவும் அதிகமாகும். இந்த 36 பேரும் ருசிய மக்களிடம் திருடிய சொத்து, ருசியாவின் மொத்த வீட்டு உற்பத்தியில் 24 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. அதாவது மொத்த ருசியாவின் உள்நாட்டு வீட்டு உற்பத்தியான 45,800 கோடி டாலரில், இந்த 36 பேரின் சொத்து 11,000 கோடி டாலராக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் 100 கோடிக்கு அதிகமான மக்களின் உழைப்பை திருடிய 277 பேரின் சொத்து, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு வீட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தையே பிரதிநிதித்துவம் செய்தது. அதாவது அமெரிக்காவில் மொத்த வீட்டு உற்பத்தியான 11,00,000 கோடி டாலரில் இந்த 277 பேரின் சொத்து 65,100 கோடி டாலராக மட்டுமே இருந்தது. இப்படி மக்களின் உழைப்பை திருடும் திருட்டுக் கூட்டமே, உலகெங்கும் திருடும் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து அதிக திருடர்களைக் கொண்ட நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. இப்படி 52 பேர் உருவாகியிருந்தனர்.
இப்படி உலகெங்கும் உள்ள அதேநேரம் முன்னாள் சோசலிச நாடுகளில், திருட்டின் சதவீதம் தலை கீழ் தெரியாத அளவில் அதிகரிக்கின்றது. ருசியாவில் உள்ள 23 மிகப் பெரிய தொழில்துறை, மொத்த தொழில்துறை உற்பத்திகளில் 57 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இதன் மூலம் சிறு உற்பத்திகள் மீட்சிக்கு இடமற்ற நிலையை அடைந்துள்ளது. முன்பு அரசுகளின் சொத்தாக இருந்தவை, மிகக் குறுகிய காலத்தில் தனியார் சொத்தாகியது. கொள்ளைகளில் மிகவும் சிறப்பான எடுப்பான வடிவமாக இது காட்சியளிக்கின்றது. இது சீனாவிலும் நிர்வாணமாகிவிடுகின்றது.
சீனாவை எடுத்தால் இன்று புதிதாக உலகமயமாதல் சந்தையில் குதித்துள்ள சீனாவில் தனிப்பட்ட சொத்தை உடைய புதிய பணக்காரக் கும்பல் ஒன்று வேகமாகவே கொழுக்கத் தொடங்கியுள்ளது. 2003இல் 400 முன்னணி சீனப் பணக்காரர்களின் சொத்து 30,110 கோடி டாலராகியுள்ளது. சராசரியாக 70 கோடி டாலரைக் கொண்ட 400 பேரின் செல்வ இருப்பே இது. கம்யூனிசத்தை குழிதோண்டிப் புதைத்து, அதை அத்திவாரமாகக் கொண்டு கம்யூனிசத்தின் பெயரால் ஆட்சியில் உள்ள பாசிஸ்டுகளின் செல்வத்தைப் பெருக்கிக் குவிக்கின்றது. நவீன சீனா கம்யூனிசத்தைக் கைவிட்டு உலகமயமாதல் என்ற சந்தைக்குள் புகுந்தது முதலே, இது உருவாகி வளர்ந்து வருகின்றது. 2004இல் முதல் நூறு பேரின் ஆகக் குறைந்த சொத்து 14.1 கோடி டாலராக இருந்தது. இது 2003இல் 10 கோடி டாலராக மட்டுமே இருந்தது. 2002இல் 8.4 கோடி டாலராக இருந்தது. 2001இல் இது 6 கோடி டாலராக இருந்தது. 2000இல் 4.2 கோடி டாலராக இருந்தது. 1999இல் வெறும் 60 லட்சம் டாலர் மட்டுமே. இது மக்களின் உழைப்பையும், மக்களின் சொத்தையும் திருடிக் கொழுத்த முதல் தரமான பணக்காரக் கும்பலின் மாஃபியாத் தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது.
ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் ஜனநாயகம் வழங்கிய சுதந்திரத்தில் இடைவெளிகள் பாதாளமாகியுள்ளது. இதன் விளைவு சில துறைகளில் அப்பட்டமாகவே பிரதிபலிக்கின்றது. சீனா அரசு அறிக்கை ஒன்றில் ஒத்துக் கொண்டபடி வயது வந்த 7.1 சதவீதமான இளைஞர்களில், 22.1 சதவீதம் பேர் அதிக நிறையை உடையவராக மாறியுள்ளனர். அதாவது 2 கோடி பேர் இப்படி மாறியுள்ளனர். இந்த அளவு அமெரிக்காவுடன் ஒப்பீடும் போது அதிகரித்துச் செல்லுகின்றது. அமெரிக்காவில் நிறை அதிகரிப்பு 65 சதவீதமாக உள்ளபோது அதிக கொழுப்பு 35.5 சதவீதத்தாலேயே அதிகரித்து. இது சீனாவில் நிறை அதிகரிப்பு 1992ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 39 சதவீதத்தால் அதிகரிக்க, உடலின் கொழுப்பு 97 சதவீதத்தால் அதிகரித்து. சீனத் தலைநகரமான பீக்கிங்கில் 60 சதவீதமானவர்கள் அதிக நிறையுடையவராக மாறியுள்ளனர். இந்த கொழுப்பு உடையவர்களின் பிரதான உணவு அமெரிக்கா மக்டொனல் மற்றும் அமெரிக்காவின் பீசாவாக மாறியுள்ளது.
சோசலிச சமூகத்தில் மக்களின் உழைப்பு உருவாக்கிய சொத்துக்கள் தேசிய சொத்தாகவே இருந்தன. இதை களவாடவே உருவாக்கிய ஜனநாயகமும் சுதந்திரமும், மக்களின் சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்தாக்கினர். இதன் மொத்த விளைவையே மேலுள்ள வக்கிரம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. உலகமயமாதல் என்பது மக்களின் உழைப்பை திருடிக் குவிப்பதைத் தாண்டி, இதற்கு என்று வேறு அர்த்தம் எதுவும் எதார்த்தத்தில் கிடையாது.
பொதுவாக உலகில் மிகப் பெரிய பணக்காரரில் 10க்கு 8 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 2005இல் அமெரிக்காவின் முதல் 400 பணக்காரனின் சொத்து 1,00,000 கோடி டாலராகியுள்ளது. இது சென்ற வருடத்தை விடவும் 4,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏழைபணக்கார வீதத்தை 1997யை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது, மற்றொரு உண்மை அம்பலமாகிவிடுகின்றது. 1997இல் உலகில் இருந்த 80 லட்சம் உலக பணக்காரரில் 64 லட்சம் பேர் அமெரிக்காவில் இருக்க, மற்றைய நாடுகளில் மீதமான 16 லட்சம் பேர் எஞ்சிக் கிடந்தனர். சொத்துக் குவிப்பும் மக்கள் விரோத அமெரிக்காவை நோக்கி இருப்பதை மேலும் இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதனால் தான் அமெரிக்கா சொர்க்க உலகம் என்று நக்கிப் பிழைப்பவர்கள் கூறுகின்றனர். இதனால் பணத்துடன் சொர்க்கத்தை நோக்கி ஒடுகின்றனர். 1994இல் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை வைத்திருந்தவர்களில், மெக்சிகோவைச் சேர்ந்த 24 பேர் இருந்தனர். இது 2001இல் 13ஆக குறைந்தது. இது பணத்தைக் கொண்டு ஒரேநாளில் தப்பிஓடியது மட்டுமல்ல, சொத்துக் குவிப்பு அமெரிக்கா மற்றும் மேற்கு நோக்கி நகர்வதையே இது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.
உலகெங்கும் கொள்ளையடித்த பணத்துடன், சுதேசிய வேடமிட்டிருந்த பணக்காரக் கும்பல் அமெரிக்காவை நோக்கி வேகமாக ஒடுகின்றனர். குறைந்தபட்ச முதலீட்டைச் செய்யக் கூடிய சொத்துடையவருக்கான விசேட விசா வழங்கும் திட்டத்தைக் கூட, வருடாந்திரம் அமெரிக்கா நடைமுறைப்படுத்துகின்றது. இதனடிப் படையில் அமெரிக்கா வருடாந்தரம் 5 லட்சம் பேருக்கு விசேட விசாவை வழங்குகின்றது. இவை பெருமளவில் அமெரிக்க பொருளாதார நலனைச் சார்ந்ததாகவே கையாளப்படுகின்றது. 1998இல் இதை ஆராய்ந்தால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தனியார் உற்பத்தியில் உயரதிகாரிகள் என 40,000 பேருக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கியது. இதைவிட உயர்ந்த கல்வித் தரமுள்ளவர்கள் 40,000 பேருக்கும், வேலையில் உயர் தகுதியுடையவர்கள் 30,000 பேருக்கும் அமெரிக்கா விசா வழங்கியது. 5 லட்சம் டாலரை முதலீடு செய்யக் கூடியதும், தனிப்பட்ட ரீதியில் விசேட உற்பத்தி செய்யும் தனிநபர்கள் 10,000 பேருக்கும், 10 லட்சம் டாலர் முதலிட்டு 10 பேருக்கு வேலை வழங்கக் கூடியவர்களான 10,000 பேருக்கும் விசேட விசா வழங்கினர். இந்த முதலீட்டு விசா மூலம் குறைந்த பட்சம் 1,000 கோடி டாலரை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து நேரடியாகவே, அமெரிக்காவுக்குள் 1998இல் கடத்திச் சென்றனர். கொள்ளையடிப்பில் அறிவின் வளம், உழைப்பின் திறன், மூலதனம் என்ற அடிப்படையில் அமெரிக்கா வருடாந்தரம் 5 லட்சம் பேரை உள்வாங்குகின்றது. இதன் மூலம் அமெரிக்காவில் அறிவு குவிவதுடன், செல்வக் குவிப்பையும், உலகளாவிய சமூகச் சிதைவையும் உருவாக்குகின்றனர்.
உலகில் 100 கோடி டாலருக்கு அதிகமான, தனிப்பட்ட, தனிநபர் சொத்துடைய மக்கள் விரோதக் கும்பலை அதிகம் கொண்ட பிரதான ஏகாதிபத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் விரிவாக அவற்றை ஆராய்வோம். இப்புள்ளி விபரங்கள் எல்லாம் உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அட்டவணையில் உள்ள அனைத்துப் பெறுமானங்களும் கோடி டாலரில் உள்ளது.
100 கோடி டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்தை உடைய, உலகளாவிய, மக்கள் விரோத பணக்காரக் கும்பலின் சொத்துக்கள் கோடி டாலரில்
1.100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துக்களை வைத்திருந்தோர் எண்ணிக்கை
2. உலகில் முதல் பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள்
3.உலகில் முதல் பத்து பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள்
4.உலகில் முதல் இருபத்தி ஐந்து பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள்
5.100 கோடி டாலருக்கு அதிகமான சொத்து வைத்திருந்த பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள்
2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
1. 587 476 497 538 322 298 230 259 423
2. 4,660 4,070 5,280 5,870 6,000 9,000 5,100 3,800 1,850
3. 25,500 21,720 26,625 26,700 27,520 27,025 17,190 35,834 12,050
4. 46,970 38,850 45,500 47,400 45,610 43,110 42,660 51,960 21,860
5. 1,90,000 1,40,000 1,56,555 1,72,160 1,10,000 1,00,000 - - -
உலகில் 100 கோடி டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்துடையோர் எண்ணிக்கை 2004இல் 587 பேராக அதிகரித்துள்ளது. இது 1996இல் 423 ஆகவும், 1997இல் 259ஆகவும் இருந்தது. 2005இல் 100 கோடிக்கு அதிகமான சொத்துடைய 691 பேர் இனம் காணப்பட்டனர். இது 2004யை விட 104 பேர் அதிகமாகும். இவர்களின் மொத்தச் சொத்து 2,20,000 கோடி டாலராகியது. முதல் பணக்காரனின் சொத்து 4,650 கோடி டாலராகியது. முதல் பத்து பணக்காரக் கும்பலின் சொத்து 26,220 கோடி டாலராகியது. சொத்துக்கள் தனிப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து பெருகிச் செல்லுகின்றது. உலகளவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பொருளாதார நெருக்கடிகள், நவீன தொழில் நுட்பங்கள், நவீன நுகர்வுப் பண்பாடுகள், திடீர் களியாட்ட நுகர்வுவெறிக் கொண்டாட்டங்கள் அலை அலையாக உலகளாவிய சந்தையை உலுக்கியது, உலுக்கிவருகின்றது. இதன்போது சொத்துடைய வர்க்கம் மேலும் கீழுமாக உருண்டு ஒடியது. இது தேச எல்லையைத் தாண்டி அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது. உலகமயமாதல் மூலம் ஏகாதிபத்திய மூலதனப் பகை முரண்பாட்டை பின்தள்ள வைக்கும் உள்ளடக்கத்தினுள், ஏகாதிபத்தியங்கள் தன்னை மீள்நிர்மாணம் செய்து கொண்டது. உலகைச் சூறையாடுவதன் மூலம், மூலதனத்தின் செழிப்பை மீள் உருவாக்கம் செய்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய மூலதனங்கள் தனது சொந்த அதிர்வுகளில் இருந்து மீண்டன. இதன் மூலம் பணக்காரக் கும்பல் தனது சொந்தச் சரிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் செழிப்படைகின்றனர்.
இந்தச் செழிப்பை தக்கவைத்துக் கொண்டு மேலும் கொழுக்க மூலதனம் மிகவும் சூழ்ச்சித்திறன்மிக்க மக்கள்விரோத நடவடிக்கையை அடுக்கடுக்காக உலகெங்கும் எடுத்தது, எடுத்து வருகின்றது. மக்களின் சேமிப்புகளில் கைவைத்ததுடன், அதற்கு வழங்கிய வட்டிவீதத்தை படிப்படியாக, தொடர்ச்சியாகக் குறைத்தன. இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், பணக்காரக் கும்பலின் செல்வக் குவிப்பாகியது. இதேபோன்று ஓய்வூதியப் பணத்தையும் கூட கைவைத்ததன் மூலம், தேசிய அரசுகள் திவாலாகிவிட்டன. மக்களின் சேமிப்புக்களை எடுத்து மிக உயர்ந்த வட்டி விகிதத்தில் அந்த மக்களுக்கே கடன் கொடுத்து தேசங்களையே அடிமையாக்கி விடுகின்றனர். அத்துடன் உலகை உறிஞ்சிக் கொழுத்த மக்கள்விரோத பணக்காரக் கும்பலுக்குச் சாதகமாக முன்வைக்கும் வரிக்குறைப்பு, இயல்பில் பணக்காரக் கும்பலின் செல்வக் குவிப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடுகின்றனர். வரிக் குறைப்பின் பின்னுள்ள எதார்த்தம் என்ன எனப்பார்ப்போம்.
பணக்காரக் கும்பலுக்கு வழங்கும் சலுகைகளே உலகமயமாதலில் சட்டங்களாகின்றன
2000இல் அமெரிக்காவைச் சேர்ந்த 400 முன்னணி பணக்காரக் கும்பல் அரசுக்கு கட்டிய வரி 7,000 கோடி டாலராக மட்டுமே இருந்தது. இது 1992 உடன் ஒப்படும் போது இரண்டு மடங்காகியது. பணக்காரக் கும்பலுக்கு ஏற்படும் வரி மூலமான இழப்பை குறைக்க கோரும் உள்ளடக்கம்தான், உலகெங்கும் வரி குறைப்பிற்கான நடைமுறை சார்ந்த சட்டத் திருத்தங்களை செய்கின்றனர். சிறப்பு வரிச்சலுகைகளை அமுல் செய்கின்றனர். அதாவது பணக்காரன் கட்டும் வரியின் அளவைக் குறைப்பதே, அடிப்படையான ஜனநாயகமாகியுள்ளது. பணக்காரன் மேலும் பணக்காரனாவதை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட, வரி குறைப்பே இன்றைய உலகமயமாதல் வரிச் சட்டங்களாக உள்ளன.
இன்று ஐரோப்பாவில் பணக்காரர்கள் மீதுள்ள வரியைக் குறைக்கும் மறைமுகவழியாக, ஐரோப்பிய இணைவு சாதகமாக்கியுள்ளது. ஐரோப்பிய இணைவின் ஊடாக பணக்காரர் வரி குறைந்த நாட்டுக்கு, தமது சொத்துக்களை மாற்றி விடுகின்றனர். இதன் மூலம் செல்வத்தைக் குவிக்கின்றனர்.
இன்று ஐரோப்பாவில் பெரும் பணக்காரர் மீதுள்ள வரி
வரி பாரீஸ் லண்டன் புரூசல்ஸ் ஜெனிவா
மொத்த வரவு 30 லட்சத்துக்கு 13 லட்சம் 11 லட்சம் 20 லட்சம்
10 கோடி சொத்துக்கு 11 லட்சம் 0 0 -
கூடுதல் பெறுமதியுடைய
5 கோடிக்கு 1.3 கோடி 30 லட்சம் 0 4 லட்சம்
10 கோடி பரம்பரைச் 3.7 கோடி 1 கோடி 2.4 கோடி 50 லட்சம்
சொத்துக்கு
ஏற்றத்தாழ்வான ஐரோப்பிய வரிக் கொள்கை பணக்காரக் கும்பலுக்கு ஒவ்வொரு நாட்டிலும் சாதகமாகவே உள்ளது. இருந்த போதும் வரி குறைந்த நாட்டுக்கு செல்வத்தை நகர்த்துவதன் மூலம், ஐரோப்பிய இணைவு மேலும் சாதகமாக மாறியுள்ளது. இதைக் கடந்து பொதுவாகவே பணக்காரர் மீதுள்ள வரியைக் குறைக்க சட்டங்கள் முதல் வரிக் கொள்கைகள் அனைத்தும் உலகமயமாதலுக்கு இசைவாக மாற்றப்படுகின்றது. வரிக் குறைப்பால் ஏற்படும் அனைத்துவிதமான இழப்பும், மக்களின் முதுகின் மேல் சுமத்தப்படுகின்றது. உழைப்பின் அளவு கூட்டப்படுவதுடன், சமூக உதவித் தொகை மீதான வெட்டை பொதுவாக்குகின்றனர். மக்களின் மேலான பொது வரி அதிகரிக்கப்படுகின்றது. இன்று தமது சொந்த வருமானத்தை குறைத்துக் காட்டி, வரி கட்டுவதைத் தவிர்த்து பெரும் கொள்ளை அடிக்கும் வகையிலும் சட்டம் இசைவாக உள்ளது. பிரான்சில் தமது சொந்த வருமானத்தை மறைத்தால், அதற்கான குற்றப்பணம் வெறுமனே 1500 ஈரோக்கள் மட்டுமே. பணக்காரர் களின் மோசடிகளுக்கு இது மட்டுமே போதுமான அளவு உதவி செய்கின்றது. ஒருபுறம் மோசடிக்கு வசதியும் வாய்ப்பும், மறுபக்கம் வரி குறைப்பு என்ற நனவான உலகமயமாதலில் மக்கள் தமது வாழ்வின் அனைத்து சமூக அடிப்படைகளையும் இழக்கின்றனர்.
வரிக் குறைப்பு மூலம், படிப்படியாக தேசத்தில் உள்ள ஏழைகளுக்கு கிடைத்த அற்பசொற்ப வாழ்க்கையையும் பறிப்பதன் மூலம், பணக்காரனின் செல்வம் குவிகின்றது. தொடர்ந்தும் பணவீக்கம் மூலம் ஒரு செழிப்பான உலகத்தை உருவாக்கினர். சர்வதேச நாணயமாக டாலர் இருந்ததால் டாலரின் வீழ்ச்சியால், பெரும் பணக்காரக் கும்பலின் அசையாத சொத்துக்களின் பெறுமானத்தை உயர்த்திக் கொண்டனர். உலக பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய நிதி மூலதனங்கள் மீதான ஆதிக்கம் மற்றும் வாரி வழங்கும் கடன் மூலம் கிடைக்கும் வட்டி பணக்காரக் கும்பலை வக்கரிக்க வைக்கின்றது. பரந்த தளத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மீதான இழப்புகளை உருவாக்கி, அதை தனிப்பட்ட மக்கள் விரோதக் கும்பல் தமதாகக் குவிப்பதையே நாம் எதார்த்தத்தில் சந்திக்கின்றோம். இந்தக் கொழுத்த கும்பலின் சொகுசுகள் அனைத்து, உலக மக்களின் முதுகுத் தோலின் மேல் நிர்மாணம் செய்யப்படுகின்றது.
மறுபக்கத்தில் நவீனத் தொழில்நுட்பம் சந்தையை தன்வசப்படுத்தியன் மூலம், உலக மக்களின் சேமிப்புகளை உறிஞ்சத் தொடங்கியது. நுகர்வு வெறிச் சந்தைப் பொருளாதாரமாகிய பண்பு, சந்தை சதிராட்டம் போடுகின்றது. பணக்கார வர்க்கம் செல்வச் செழிப்பில் தலைகால் தெரியாது பணத்தைக் குவிக்கின்றது. ஏழைகள் உலகெங்கும் பெருக்கெடுத்து வருகின்றனர். உலகின் வர்க்க ரீதியான பிளவு அகலமாகி வருகின்றது. இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டை உலகமயமாதல் தற்காலிகமாக பின்தள்ளியுள்ளது. சொத்துக் குவிப்பு வர்க்கப் போராட்டத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஏழை பணக்காரப் பிளவு மேலும் துல்லியமாக அகலமாக்கி வருகின்றது. இது உலகளாவிய ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்.
தனிப்பட்ட சொத்துக் குவிப்புகள் சீராகவும் பாய்ச்சலாகவும் அதிகரிக்கின்றது.
1995இல் கம்ப்யூட்டர் துறையில் (தீடிணஞீணிதீண்) வின்டோஸ் 95யும், 98யும் ஏற்படுத்திய தாக்கம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் எழுச்சியும் தொடர்ந்த வீழ்ச்சியும் தனிப்பட்ட முதல் பணக்காரனின் தனிப்பட்ட சொத்துக்களைக் குறைத்த போதும், தொடர்ந்து அது சீராகி வருகின்றது. அதைத் தொடர்ந்து தொலைபேசியும், நவீன சந்தைக் களத்தில் சதிராட்டம் போடுகின்றது. வக்கரித்த நுகர்வு வெறியும், கவர்ச்சியும் ஏற்படுத்தும் தாக்கம் சந்தையையே தலைகால் தெரியாது வீங்க வைக்கின்றது. இது பற்றாக்குறையையும், தேக்கத்தையும் அடுக்கடுக்காக கொண்டு வருகின்றது. இதன் மூலம் பணக் கொழுப்பும், சமூகச் சிதைவும் ஏற்படுகின்றது. பணம் சிலரிடம் குவிவதையே, இது கூர்மையாக்குகின்றது. இவை சார்ந்து உலகமயமாதலின் உலகளாவிய போக்கு சீரடைந்த போது, உலகளாவிய பணக்காரர்களின் எண்ணிக்கை சீராக அதிகரிக்கின்றது. அவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் வேகமாக அதிகரித்து வருவதையே மேலே உள்ள அட்டவணை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இருந்தபோதும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள், சர்வதேச மாற்றத்தை உருவாக்கும்போது, நாடுகளுக்கு இடையிலான பணக்காரக் கும்பலின் சொத்துக்களின் வீழ்ச்சியை உருவாக்குகின்றது. குறிப்பாக ஜப்பான், ஜரோப்பா, அமெரிக்காவுக்கு இடையில் மூலதனத்தைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட மாற்றங்கள் பாரிய தன்மை கொண்டவை. இன்று ருசியாவும், சீனாவும் கூட இதற்குள் இணைந்துள்ளது. இது தனிப்பட்ட உலகப் பணக்காரர்களின் சொத்துக் குவிப்பில் அதிர்வைக் கொடுத்தது, கொடுத்து வருகின்றது. 2000ஆம் ஆண்டுப் பிறப்பை சந்தைக் கொண்டாட்டமாக்கிய போது, சந்தையில் ஏற்பட்ட வீக்கம் 2001இல் எதிர்மறையான தேக்கத்தையே உருவாக்கியது. 2001இல் டாலருக்கு போட்டியாக களமிறங்கிய ஈரோ நாணயத்தின் வருகையை அடுத்து, மீண்டும் உலகச் சந்தை தளும்பியது. 2001, 2002 உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்திய அதிர்வும், 2003இல் ஈராக் யுத்தம் ஏற்படுத்திய சர்வதேச அதிர்வும், மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்களையும் அதிர வைத்தது. இது உலகளாவிய பணக்காரர் களின் சொத்துக்களை குறைத்தது. ஆனால் 2004இல் இது மீட்சி பெறத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பணக்காரர்களின் சொத்துக்கள் குவிவதை, புதிய உலகப் பங்கீடு துரிதப்படுத்தியுள்ளது. பிரதான ஏகாதிபத்தியங்களை தனித் தனியாக ஆராயும் போது, மேலும் துல்லியமாக இதன் சூட்சுமத்தை இனம் காணமுடியும்.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத ஆஸ்திரேலிய பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டொலரில்:
1.மிகப்பெரிய ஆஸ்திரேலிய பணக்காரனின் சொத்து
2.மிகப் பெரிய ஐந்து ஆஸ்திரேலியபணக்காரர்களின் சொத்து
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
1. 500 420 250 250 250 380 370 320 240 180
2. 1220 1060 - - - - - - - -
ஆஸ்திரேலியாவில் 100 கோடிக்கு அதிகமான சொத்துடையவர்கள் 1996க்கும் 2003க்கு இடையிலான காலத்தில் ஐந்துக்கும் குறைவானவர்களே இருந்துள்ளனர். ஆனால் 2004இல் அது ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் விரோத பணக்காரக் கும்பல் உருவாகியுள்ளது. முதல் பணக்காரனின் சொத்து 1996 முதல் சீராக அதிகரித்த போதும், 2001 முதல் 2003இல் வீழ்ச்சி கண்டது. ஆனால் மீண்டும் 2005இல் இது பெருக்கெடுத்துள்ளது. செல்வத்தின் குவிப்பு முதல் பணக்காரனை மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாகவே நிலைமையை மாற்றி அமைத்துள்ளது. ஆஸ்திரேலியப் பணக்கார வர்க்கம் ஈராக் மீதான ஆக்கிரமிப்பில் வலிந்து காட்டிய ஆர்வம் முதல், நேரடியாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதன் மூலம், ஏகாதிபத்திய முரண்பாட்டில் தனது அணியை பலப்படுத்திக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பின் மூலம் மறுசீராக்கப்பட்ட உலகப் பங்கீட்டின் அடிப்படையில், தனிப்பட்ட சொத்துடையோர் வர்க்கம் தனது செல்வக் குவிப்பை உலகச் சந்தை ஊடாக உறுதி செய்து கொண்டனர். இங்கு 20 சதவீதமான பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 40 சதவீதத்தை செலவு செய்கின்றனர். அடியில் உள்ள 20 சதவீதமான ஏழைகள் நாட்டின் செல்வத்தில் 6 சதவீதத்தையே செலவு செய்கின்றனர். சமூகப் பிளவுக்கு இடையிலுள்ள இடைவெளி உலகளவில் மட்டுமல்ல, சொந்த ஏகாதிபத்திய நாட்டிலும் ஆழமாகி அகலமாகின்றது.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத கனடாப் பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டொலரில்
1.மிகப்பெரிய கனடாப் பணக்காரர்களின் சொத்துக்கள்
2.மிகப் பெரிய ஐந்து கனடாப் பணக்காரர்களின் சொத்துக்கள்
3.மிகப் பெரிய பத்து கனடாப் பணக்காரர்களின் சொத்துக்கள்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
1. 1790 1720 1400 1490 1640 1610 1190 1440 1100 740
2. 4200 3770 2870 2820 3090 3220 2320 - - 1580
3. 5550 4920 3810 3750 3990 4220 - - - -
கனடாவில் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய பணக்காரக் கும்பலின் சொத்துக்கள் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதையே அட்டவணை காட்டுகின்றது. 2001, 2002, 2003இல் பாதகமான நிலையே காணப்பட்ட போதும், 2004இல் இந்த பணக்காரக் கும்பல் மீளவும் பெருமளவில் உலகளவில் கொள்ளை அடிக்கத் தொடங்கியுள்ளது. கனடாவின் முதல் பணக்காரனின் சொத்து 1996ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்காகப் பெருக்கெடுத்துள்ளது. இது முதல் 5 பணக்காரனின் சொத்துக்கும் நிகழ்ந்துள்ளது. 1999ஆம் ஆண்டு வரை 100 கோடிக்கு அதிக சொத்துடைய 10 பணக்காரக் கும்பல் கனடாவில் இருக்கவில்லை. 2000ஆம் ஆண்டில் 10க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் உருவானது. முதல் பத்து பணக்காரனின் சொத்துக்கள் 2000க்கும் 2005க்கும் இடையில் 1,000 கோடி டாலரால் அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியாக அமெரிக்கா ஏகாதிபத்திய அணியில் நின்று, உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம், உலகை கொள்ளையிடவும் மறுபங்கீடு செய்யவும் பின்நிற்கவில்லை. இதன் மூலம் பணக்காரக் கும்பல் தன்னை தக்கவைத்து கொழுக்க முனைகின்றது.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத பிரெஞ்சுப் பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டாலரில்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
மிகப்பெரிய
பிரெஞ்சுப்
பணக்காரனின்
சொத்து 1720 1880 1450 1490 1560 1520 1390 1000 840 570
மிகப் பெரிய
ஐந்து பிரெஞ்சுப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 5330 4770 3210 3510 4300 4700 4250 2560 2740 2070
மிகப் பெரிய
பத்துபிரெஞ்சுப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 6820 6050 4200 4600 5900 6170 6180 3600 3040
1998, 2001, 2002, 2003இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பாதகமான நிலை காணப்பட்ட போதும், மீட்சி பெற்று வந்ததைக் காட்டுகின்றது. முதல் பணக்காரனின் சொத்து 1996க்கும் 2005க்கும் இடையில் ஒப்பிடும் போது 3 மடங்கு மேலாக அதிகரித்துள்ளது. முதல் ஐந்து மற்றும் பத்து பணக்காரனின் சொத்துக்கள் இரண்டு மடங்கிற்கு மேலாகப் பெருகியுள்ளது. மரபுரீதியாக 200 வருடங்களுக்கு மேலாக, காலனிகளை சூறையாடிக் கொழுத்த பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தில், உலகில் மிகப் பெரிய பணக்காரக் கும்பல் ஒன்று குவிந்து காணப்படுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஏகாதிபத்திய முரண்பாட்டில் எதிரணியில் நின்று தனது சொத்துக்களைப் பெருக்கிப் பாதுகாக்க முனைகின்றது. கடுமையான ஏகாதிபத்திய முரண்பாடுகளுக்கு இடையில், தன்னை தக்கவைக்க முனையும் எதிரணியில் முன்னணியில் நிற்கின்றது. இதற்காகவே ஒன்றுபட்ட ஐரோப்பா என்ற அடிப்படையில் போட்டி ஏகாதிபத்தியமாக தன்னை தகவமைக்கின்றது.
இந்த போட்டியில் மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளையடிக்க, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சூறையாடுவது அதிகரிக்கின்றது. பிரெஞ்சு தேச மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையானதும், தொடர்ச்சியானதுமான வீழ்ச்சியை காண்கின்றது. 1980இல் பிரான்சில் கிடைத்த மொத்த தேசிய வருமானத்தில் உழைப்பாளிக்கு கிடைத்தது 68.3 சதவீதமாக இருக்க முதலாளிக்கு கிடைத்தது 25.8 சதவீதமாகும். இதுவே 1996இல் முதலாளிக்கு 33.5 சதவீதமாக அதிகரிக்க, உழைப்பாளிக்கு கிடைப்பது 60.3 சதவீதமாக குறைந்து போனது. பிரான்சில் 1962இல் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான இடைவெளி 74 மடங்காக இருந்தது. இது 1975இல் 1000 மடங்காகியது. இது உலகின் பொதுவான எதார்த்தமாகியுள்ளது. ஏகாதிபத்தியம் உலக மக்களை மட்டுமல்ல, சொந்த நாட்டு மக்களையும் கூட அதிகமாகச் சுரண்டுவதன் மூலம் தான் கொழுக்கின்றது.
இதை மேலும் விரிவாகப் புரிந்து கொள்வோம். 1997இல் பிரான்சின் முதல் 500 பணக்காரரின் மொத்தச் சொத்து 10,290 கோடி ஈரோவாகும். இது 1996ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகமாகும். ஒரே வருடத்தில் தனது தனிப்பட்ட சொத்தை 500 பேர் கொண்ட பிரெஞ்சு பணக்காரக் கும்பல் 28 சதவீதத்தால் அதிகரிக்க வைத்துள்ளது என்றால், கொள்ளையடிப்பின் செழிப்பையே இது காட்டுகின்றது. தொடர்ச்சியாக 1999ஆம் ஆண்டில் முதல் 500 பணக்காரக் கும்பலின் மொத்தச் சொத்து 12,200 கோடி ஈரோவாகியது. இது 2000ஆம் ஆண்டில் 19,200 கோடி ஈரோவாகியது. 1996 உடன் ஒப்பிடும் போது தனிப்பட்ட சொத்துக் குவிப்பு, இரு மடங்கையும் கடந்து கொழுத்தது. இந்தத் தொகையை பிரான்சில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7,000 ஈரோப் படி பங்கிட முடியும். அதாவது இந்தத் தொகை பிரான்சின் வரவு செலவில் மூன்றில் இரண்டு பங்காகும். 2000ஆம் ஆண்டில் முதல் 15 பணக்காரக் கும்பலின் சொத்து மட்டும் 10,000 கோடி ஈரோவாக அதிகரித்தது. அதாவது இது முதல் 500 பணக்காரரின் சொத்தில் அரைவாசியாக இருந்தது. இந்த 15 பணக்காரனின் சொத்து பிரான்சின் வரவுசெலவில் மூன்றில் ஓன்றுக்கு சமமானதாகவும் இருந்தது. இது 1999இல் 6,000 கோடி ஈரோவாக இருந்தது. 1999க்கும் 2000க்கும் இடையில் 4,000 கோடி டாலரால் தனது தனிப்பட்ட சொத்தை முதல் 15 பணக்காரக் கும்பல் பெருக்கிக் கொண்டது.
1999இல் பிரான்சில் தனிப்பட்ட சொத்தையுடைய கோடீஸ்வரர்கள் 799 பேர் இனம் காணப்பட்டனர். பிரான்சின் முதல் பணக்காரப் பெண்ணின் சொத்து 1,082 கோடி ஈரோவாகும். ஐரோப்பாவில் பிரிட்டிஷ் ராணிக்கு அடுத்ததாக, மிகப் பெரிய பெண் பணக்காரியாவார். உலகில் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடைய 587 பேரில் 53 பேர் பெண்களாவர். இது எந்தவிதத்திலும் பெண் விடுதலையைத் தந்து விடுவதில்லை. ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் சுரண்டல் அமைப்பையே ஆணையில் கொண்டு உலகமயமாதலின் பாதுகாவலராக உள்ளனர். 1997இல் பிரான்சில் மக்களைக் கொள்ளையடிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளின் சம்பளம் 9,820 ஈரோ முதல் 32.94 லட்சம் ஈரோ வரை நீண்டு காணப்பட்டது. முதன்மை அதிகாரியின் செல்வச் செழிப்புக்காகவே, தொழிலாளி நாள் கணக்காக உழைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த கொடுப்பனவுக்காக ஒரு தொழிலாளி 10 நாட்கள் முதல் 3300 நாட்கள் உழைக்க வேண்டியிருந்தது.
பிரான்சில் மிகப் பெரிய சம்பளம் பெறும் 30000க்கு மேற்பட்டோரின் வருடாந்தர சம்பளம் 2 லட்சம் ஈரோவுக்கும் அதிகமாகும். இது சாதாரண தொழிலாளியின் அடிப்படைச் சம்பளத்தை விடவும் 20 மடங்கு அதிகமாகும். இப்படி உழைப்பைச் சுரண்டி உறியும் போது, செல்வத்தின் இருப்பிடம் வக்கரிப்பது எதார்த்தமாகி விடுகின்றது. உலகின் மக்களின் பாரம்பரியமான குடிவகைகளை அழித்துவரும் கொக்கோகோலா தலைவருக்கு, 2003இல் வழங்கிய வருடாந்தர சம்பளம் 15 லட்சம் கோடி டாலராகும். மக்களைச் சூறையாடிக் குவிக்கும் அவரின் திறமைக்கு 2003இல் அவருக்கு வழங்கிய ஊக்குவிப்புத் தொகை 30 லட்சம் டாலராகும். இப்படி உருவாகும் பணக்காரக் கும்பல், அதைப் பாதுகாக்கும் உயர் அதிகார வர்க்கம் உள்ளடங்கிய கும்பல் என்ற ஒரு சமூக அமைப்பின் கொழுப்பே, முதலாளித்துவத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சகோதரத்துவமாகும்.
அடுத்து 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய, மக்கள் விரோத ஜெர்மனிய பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டாலரில்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
மிகப்பெரிய
ஜெர்மனிய
பணக்காரர்களின்
சொத்து 1850 2300 2560 2680 2500 2000 1360 1170 1170 900
மிகப் பெரிய
ஐந்து ஜெர்மனிய
பணக்காரர்களின்
சொத்து 5820 6470 4810 6280 6560 5650 5010 3760 4910 3540
மிகப்பெரிய
பத்து ஜெர்மனிய
பணக்காரர்களின்
சொத்துக்கள் 9160 9580 7140 8510 9040 8250 8040 6310 7310 5620
மிகப்பெரிய
இருபத்தைந்து
ஜெர்மனிய
பணக்காரர்களின்
சொத்துக்கள் 15720 15370 13870 12840 13540 14160 14780 9710 11630
1997, 1998, 2002 2003ஆம் ஆண்டுகளில் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட நெருக்கடி, ஜெர்மனிய பணக்காரக் கும்பலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் மற்றைய ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் குறைவானதாகவே அமைந்தது. 100 கோடிக்கு மேல் அதிக சொத்துடைய 25 மேற்பட்ட கும்பலைக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியமாக, அமெரிக்காவுக்கு வெளியில் முதன்மை பெற்று நிற்கின்றது. தனிப்பட்டோரின் சொத்துக் குவிப்பு 1996ம் ஆண்டுக்கும் 2005க்கும் இடையில் ஒப்பிடும் போது, மேல் இருந்து கீழாக மடங்கின் தன்மை குறைந்து வருகின்றது. மிகப் பெரிய பணக்காரனின் சொத்து மடங்குகளால் அதிகரிக்க, கீழ் உள்ளவர்களின் சொத்துக்கள் அதை ஏற்படுத்திவிடவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு போட்டியாகவும், ஐரோப்பிய யூனியனுக்குள் பிரான்சையும் மீறி தலைமை தாங்கும் நாடாக உள்ளது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஈராக் ஆக்கிரமிப்புக்கு ஊடாக உலகைத் தனக்குச் சாதகமாக மாற்ற முனைந்தபோது, பிரான்சுடன் சேர்ந்து ஊசாலாட்டத்துடன் கூடிய தற்காப்பை மேற்கொண்டன. இதன் மூலம் பெரும் பணக்காரக் கும்பல் தமது சொத்துரிமையை பாதுகாக்க முனைந்தனர். எதிர்காலத்தில் அமெரிக்காவை எதிர்த்து நிற்க இராணுவ ரீதியான தற்காப்பு என்ற நிலையை நோக்கி தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
அடுத்து 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத இத்தாலியப் பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டொலரில்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
மிகப்பெரிய
இத்தாலிய
பணக்காரனின்
சொத்து 1200 1000 590 720 1030 550 400 700 490 500
மிகப்பெரிய
ஐந்து
இத்தாலிய
பணக்காரர்களின்
சொத்துக்கள் 4340 2730 2180 2350 2860 3240 1480 1440
மிகப்பெரிய
பத்து
இத்தாலிய
பணக்காரர்களின்
சொத்துக்கள் 5320 3700 2860 3160 3740
1998, 1999, 2002, 2003ஆம் ஆண்டுகளில் இத்தாலிய மூலதனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி பணக்காரரின் இழப்பால் ஏற்பட்ட சரிவை புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகின்றது. 2001க்கு பின்னால் இத்தாலிய மூலதனம் உலகமயமாதல் ஊடாக மூலதனக் குவிப்பு ஈடுபட்டதையும், 100 கோடி டாலருக்கு மேற்பட்ட சொத்துடைய புதிய பிரிவுகள் உருவானதைக் காட்டுகின்றது. 1996 உடன் ஒப்பிடும் போது 2005இல் தனிப்பட்ட பணக்காரனின் சொத்து இரண்டு மடங்குக்கு மேலாக மாறியதைக் காட்டுகின்றது. ஐரோப்பிய யூனியனுக்குள் இத்தாலி இருந்த போதும், உலகை பங்கிடும் போட்டியில், அமெரிக்காவுக்கு சார்பாக நடந்து கொண்டது. இத்தாலியின் மிகப்பெரிய பணக்காரனே, இத்தாலியின் பிரதமராக இருக்கின்றான். ஈராக் ஆக்கிரமிப்பில் பங்கு கொள்வதன் மூலம், தனது தனிப்பட்ட செல்வச் சேகரிப்பு குவிவதை அடிப்படையாக கொண்டு, அமெரிக்க ஆக்கிரமிப்பாளனுடன் கூடி கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளான். குறிப்பான அவனின் தனிப்பட்ட நலன்கள், ஐரோப்பாவில் ஒரு முரண்பாட்டை கூட உருவாக்கியது. இத்தாலியின் பிரதமரும், இத்தாலியின் மிகப்பெரிய பணக்காரனுமான இவன், இத்தாலிய மக்களை மட்டுமல்ல, உலகத்தையே சூறையாடுவதில் தனது குறிப்பான நலனை முதன்மைப்படுத்துவதில் இருந்தே அனைத்து முடிவுகளையும் சர்வதேச ரீதியாக எடுக்கவும் பின்நிற்கவில்லை. தனது தனிப்பட்ட சொத்துக்கள் தொடர்ந்தும் பெருகுவதை அடிப்படையாக கொண்டே, இத்தாலிய மக்களின் மேலான சட்ட திட்டங்களையும், முடிவுகளையும் தனிப்பட்ட ரீதியில் இன்றைய பிரதமர் கையாளவும் தயங்கவில்லை.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத ஜப்பானியப் பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டாலரில்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
மிகப்பெரிய
ஜப்பானியப்
பணக்காரர்களின்
சொத்து 580 690 500 860 830 1940 780 570 800 920
மிகப்பெரிய
ஐந்து ஜப்பானியப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 2650 2810 2440 2450 3240 4780 3050 2380 2670 2700
மிகப்பெரிய
பத்து ஜப்பானியப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 4680 4450 3650 3820 5270 7050 4990 3690 3640 4220
மிகப்பெரிய
இருபத்திஐந்து
ஜப்பானியப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 7490 5920 8510 10910 7930 7240
ஒப்பீட்டளவில் அமெரிக்க, ஐரோப்பிய பணக்காரக் கும்பலுக்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்கடியை விட, ஜப்பானிய பணக்காரக் கும்பலுக்கு பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய மூலதனம் தொடர்ச்சியாகக் கடும் நெருக்கடியை சந்திக்கும் போது, தனிப்பட்ட சொத்தையுடைய வர்க்கம் ஆட்டம் காண்பது அதிகரிக்கின்றது. மற்றைய ஏகாதிபத்தியங்கள் அனைத்தும், ஜப்பானிய வீழ்ச்சியில் மிதப்பதைக் காணமுடியும் உலகச் சந்தை கைமாறும் நிகழ்ச்சிப் போக்கை இது அழகாகவே எடுத்துக் காட்டுகின்றது. 1996க்கு முன் 100 கோடி டாலருக்கு மேல் தனிப்பட்ட சொத்துடைய 25திற்கும் மேற்பட்ட பணக்காரக் கும்பல் செழித்து இருந்தது. இவர்கள் 1997, 1998 இல் திடீரெனக் காணாமல் போàர்கள். 1999, 2000, 2001, 2002இல் மீண்ட போதும், 2003, 2004இல் மீண்டும் காணாமல் போய்விட்டனர். 2005இல் மீட்சி பெறுகின்றனர். 1996இல் பணக்காரக் கும்பல் கொண்டிருந்த சொத்தின் நிலையை தொடர்ந்தும் 2004இல் காப்பாற்ற முடியாது ஊசலாடுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய மூலதனங்கள் நெருக்கடியைச் சந்தித்த போது, ஜப்பான் மிதப்பாக முனைந்ததையும், ஜப்பான் நெருக்கடியைச் சந்திக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய மூலதனங்கள் மிதப்பாகியதையும் காட்டுகின்றது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் தொடர்ச்சியாகவே, சர்வதேச நெருக்கடியை ஆணையில் நிறுத்தியிருப்பதை துல்லியமாகவும் எடுப்பாகவும் இது எடுத்துக் காட்டுகின்றது. நுகர்வும், சந்தையின் இடமாற்றமும் பணக்காரக் கும்பலின் வீழ்ச்சியையும், செழிப்புகளும் இடம் மாறியதைக் காட்டுகின்றது. ஜப்பானிய ஏகாதிபத்திய பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள், ஒப்பீட்டளவில் மற்றைய ஏகாதிபத்திய பணக்காரர்களின் சொத்தைவிட பெறுமதியில் குறைந்ததாக உள்ள அதே நேரம், அது பகிரப்பட்டும், செறிந்தும் காணப்படுகின்றது.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத பிரிட்டிஷ் பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டாலரில்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
மிகப்பெரிய
பிரிட்டிஷ்
பணக்காரனின்
சொத்து 630 870 750 670 650 550 490 290 250 410
மிகப் பெரிய
ஐந்து பிரிட்டிஷ்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 2320 2420 1810 1770 1570 1740 1530 980 960 1220
மிகப்பெரிய
பத்து பிரிட்டிஷ்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 3510 3480 2550 2530 2340 2630 2180 6640
மிகப்பெரிய
பிரிட்டிஷ்
இருபத்திஐந்து
பணக்காரர்களின்
சொத்துக்கள் 5080 6640
உலகை நீண்ட பல காலமாக காலனியாக சூறையாடி பிரிட்டிஷ் பணக்காரக் கும்பல் இன்று சந்திக்கும் நெருக்கடிகளைக் கடந்தும் பெரும் பணக்காரக் கும்பலாகவே உள்ளனர். பிரிட்டனில் உள்ள தனியார் சொத்தில் 75 சதவீதத்தை 5 சதவீதமானோரே சொந்தமாக வைத்திருந்தனர்.
இன்று ஜப்பானிய நெருக்கடியைப் போல் பிரிட்டிஷ் மூலதனமும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றது. பிரிட்டிஷ் மூலதனம் சந்திக்கும் சர்வதேச நெருக்கடி பிரிட்டிஷ் பணக்காரர்களின் நிலையை தடம்புரள வைக்கின்றது. 1997, 1998, 2001ஆம் ஆண்டுகள் பிரிட்டிஷ் மூலதனம் கடுமையாகவே ஆட்டம் கண்டது. 1998, 1997 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமான சொத்துடைய பத்துக்கு மேற்பட்ட பணக்காரக் கும்பலின் எண்ணிக்கை பிரிட்டனில் வீழ்ச்சி கண்டது. பத்துக்கு மேற்பட்ட கும்பலின் சொத்து 1996 உடன் ஒப்படும் போது 2004இல் அரைவாசியாக குறைந்து போயுள்ளது. முதல் பணக்காரன் மற்றும் முதல் ஐந்து பணக்காரர்களின் சொத்துக்கள் இரட்டிப்பான போதும், கடும் நெருக்கடி ஊடாகத்தான் தன்னைத் தக்கவைக்க முடிகின்றது. அமெரிக்காவுடன் கூடிய சர்வதேச சந்தையைக் கைப்பற்றவும், மீளவும் பகிரவும் கோருகின்றது. ஈராக் யுத்தம் மூலமே மீட்சி காணத் துடிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் உலக ஆதிக்கத்துக்கான அமெரிக்காவுக்கு போட்டியான நிலைப்பாடுகள் பலவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவதுடன், அமெரிக்கா சார்பு நிலையைத் தக்கவைக்கின்றது.
ஈராக் யுத்தத்தின் அடிப்படையே ஏகாதிபத்திய முரண்பாடுகள் தான். ஈராக்கில் யுத்தம் தொடங்கு முன்பே, அமெரிக்கா மற்றும் அமெரிக்கச் சார்பு அல்லாத பிற ஏகாதிபத்தியங்களுடன் ஈராக் செய்திருந்த அன்னிய ஒப்பந்தின் மொத்தப் பெறுமானமே 1,10,000 லட்சம் கோடி டாலராகும். இதைக் கைவிட மறுத்தபோதே யுத்தமும், யுத்தயெதிர்ப்பு நிலைப்பாட்டை சில ஏகாதிபத்தியங்கள் கையில் எடுத்தன. ஐ.நாவுக்கான ரஷ்ய அதிகாரி அமெரிக்காவின் யுத்தத் தயாரிப்பு பற்றி வெட்டவெளிச்சமாகவே தமது ஏகாதிபத்திய நிலைப்பாட்டை கூறிவிடுகின்றார். ""எமது அரசாங்கத்தின் கவலையெல்லாம், ஈராக்கிற்கும் பிற நாடுகளின் கணக்கற்ற நிறுவனங்களுக்குமிடையே உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ஓரங்கட்டப்பட்டு, அமெரிக்க நிறுவனங்கள் புகுந்து அந்த ஒப்பந்தங்களை பெருமளவில் கைப்பற்றிக் கொள்ளுமோ என்பதுதான்... ஆம்! என்று நீங்கள் கூறினால், அது அமெரிக்காவின் எண்ணெய்க் கொள்ளையாகவே இருக்கும்'' இது தான் ஈராக் யுத்தத்திற்கான அடிப்படையும், எதிர்ப்பிற்கான அடிப்படையுமாகும். யார், ஈராக்கை, எப்படிக் கொள்ளை அடிப்பது என்பதிலேயே இவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதில் இருந்தே அமைதி வழிக் கொள்கையும், யுத்த வழிக் கொள்கையும் அவர்களுக்கு இடையில் தெரிவாகியது.
இதையே எதிர்மறையில் சி.ஐ.ஏ இயக்குனர் ஒருவர் தெளிவாக்கி விடுகின்றார். ஈராக்கில் எண்ணெய்க் கம்பெனிகளையும், அதன் மூலமான ஆதாயங்களையும் பிரெஞ்சும் ரஷ்யாவும் பெற்றிருக்கின்றன. ஈராக்கில் ஒரு நாகரீகமான ஆட்சி அமைவதற்கு அவர்கள் உதவுவார்களேயானால், அமையப் போகும் புதிய அரசாங்கமும் அமெரிக்க நிறுவனங்களும் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் என்பதை நாங்கள் எல்லாவகையிலும் உறுதிப் படுத்துகிறோம். இதை அவர்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டும் கொள்ளை அடிக்கத் தடையாகவுள்ள யுத்த எதிர்ப்பைக் கைவிடக் கோரும் அமெரிக்கா, வெளிப்படையாகவே மற்றைய ஏகாதிபத்தியத்திடம் உலகை அமைதியாக கெடுபடியின்றி தன்னிடமே விட்டுக்கொடுத்து பங்கிடக் கோருகின்றது. மறுபக்கத்தில் ஈராக்கில் அமெரிக்காவால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட பொம்மைக் கைக்கூலிகள், இதையே அழகாக எலும்புகளுக்காக வாலாட்டிய போது கூறிவிடுகின்றனர். ஈராக் எண்ணெய்க் கிணறுகளில் அமெரிக்கக் கம்பெனிகளுக்குப் பெரும் புதையல் கிடைக்கும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான மோதல் மூலம், மக்களை சுரண்டிக் கொழுப்பதன் மூலம் தான், தனிப்பட்ட சொத்துக்களை வரைமுறையின்றி குவிக்கின்றனர்.
யுத்தத்தின் மூலம் தனது மூலதனத்தைப் பாதுகாக்கவே பிரிட்டிஷ் பணக்காரர்கள் முனைகின்றனர். உலகமயமாதல் என்ற போக்கில் அமெரிக்க மூலதனம் கொண்டுள்ள உலக ஆதிக்கத்தை, ஒன்றிணைந்த ஐரோப்பா, கடுமையான எதிர்ப்பின் ஊடாகவே தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைகின்றது. இந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள முக்கியமானதும், மிகப் பலம் பொருந்திய மூலதனத்தைக் கொண்ட பிரிட்டனின் நிலைப்பாடு, சர்வதேச ரீதியாக சந்தையை கைப்பற்றுவதில் ஒரு தடைக்கல்லாகவே உள்ளது. இது வெற்றிகரமாக பிரிட்டனின் நலன்களை பூர்த்தி செய்ய முடியாத போதும், அமெரிக்க நலன்களுக்குச் சாதகமாகவுள்ளது.
100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை உடைய மக்கள் விரோத அமெரிக்கப் பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் கோடி டாலரில்
2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996
மிகப்பெரிய
அமெரிக்கப்
பணக்காரர்களின்
சொத்து 4650 4660 4070 5280 5870 6000 9000 5100 3640 1850
மிகப்பெரிய
ஐந்து
அமெரிக்கப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 14820 15050 12400 15730 16620 18060 19200 16650 11481 5420
மிகப்பெரிய
பத்து
அமெரிக்கப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 23690 24220 20110 25420 25710 25470 25510 21850 15931 7850
மிகப்பெரிய
இருபத்திஐந்து
அமெரிக்கப்
பணக்காரர்களின்
சொத்துக்கள் 39360 38580 33310 38330 40400 36850 31820 22980 23201 12030
உலகில் அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடு அமெரிக்காவே. 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடையோரில் அரைவாசி பேருக்கு மேல் அமெரிக்கர்களே. 2000, 2001, 2002, 2003களில் அமெரிக்கா மூலதனம் உலகச் சந்தையில் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இந்த மீட்சிக்கு ஈராக் யுத்தம் அவசியமாகியது. யுத்த பொருளாதாரம், உலகை மிரட்டி அடிபணிய வைக்கும் சந்தைப் பொருளாதாரம் என்ற விரிந்த தளத்தில் அமெரிக்கா மூலதனம் களமிறங்கியுள்ளது. 1996உடன் 2005யை ஒப்பிடும் போது பணக்காரக் கும்பலின் சொத்துக்கள் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் 400 பணக்காரக் கும்பலின் தனிப்பட்ட மொத்தச் சொத்துக்களின் பெறுமானம் 1,20,000 கோடி டாலராகும். இது 1999இல் 1,00,000 கோடி டாலராக மட்டுமே இருந்தது. அமெரிக்காவில் உள்ள முதல் 400 பணக்காரரின் சொத்து 2002க்கும் 2003க்கும் இடையில் 10 சதவீதத்தால் அதிகரித்தது.
ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன
தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான். 1979இல் அமெரிக்கா லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாகும். மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். 1996இல் 13 லட்சம் பேர் லட்சாதிபதிகளாக இருந்தனர். இவர்கள் அமெரிக்கச் சனத் தொகையில் ஒரு சதவீதம் பேராவர். இவர்கள் அமெரிக்க நிலத்தில் 22 சதவீதத்ததை வைத்திருந்தனர். படிப்படியாக மக்களை சூறையாடுவதன் மூலம், கோடீஸ்வரர்கள் பெருக்கெடுக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்துடைய சமூக விரோதிகள் எண்ணிக்கை 1995இல் 1.19 லட்சமாகியது. இது 1998இல் 2.75 லட்சமாகியது. இந்த மூன்று வருடத்தில் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடையோர், இரண்டு மடங்கையும் தாண்டிக் கொழுத்துள்ளனர். இதே மூன்று வருடத்தில் அமெரிக்காவில் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் 10 லட்சம் பெறுமதியுடைய மாடமாளிகைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தால் அதிகரித்தது. மேல் இருக்கும் உயர் வர்க்கத்தின் படிநிலைக் கட்டமைப்பு செல்வக் குவிப்பு மேல் நோக்கி நகர்த்துகின்றது. கீழ் உள்ள சமூகக் கட்டமைப்பின் படிநிலையில் செல்வம் படிப்படியாக அகன்று விடுகின்றது. செல்வம் மேலும் கீழுமாக, நேர்எதிர்வீதத்தில் நாள் தோறும் மறுபங்கீட்டைச் செய்கின்றது.
இதன் விளைவு மேல்நோக்கி கொழுக்க, கீழ்நோக்கி ஏழைகளின் புதைகுழிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள 14 ஆயிரம் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவில் அடிநிலையில் உள்ள 2 கோடி குடும்பங்களின் மொத்த வருமானத்துக்குச் சமமானதாகும். இது சமூகப் பிளவின் வீச்சையே எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் 1999இல் அமெரிக்காவில் இருந்த முதல் 400 பணக்காரரின் சொத்தின் பெறுமானம் 1,00,000 கோடி டாலராக இருந்தது. இது முந்திய வருடத்தில் 73,800 கோடி டாலராகவே இருந்தது. இந்த அதிகரித்த தொகையில் ஐந்தில் ஒன்றைக் கொண்டு, அதாவது 4,800 கோடி டாலரைக் கொண்டு அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 15 சதவிகிதத்தினரின் வறுமையை அகற்றி, அவர்களை வறுமைக் கோட்டின் எல்லைக்குக் கொண்டு வரமுடியும். மறுபக்கத்தில் அமெரிக்காவில் பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்க, ஏழைகளின் கூலி வீதம் குறைவது அதன் அடிப்படை விதியாகின்றது. 1998இல் அமெரிக்காவின் உண்மைக் கூலிவீதம், 1973இல் இருந்ததை விட 7 சதவீதம் குறைவானதாகியது. அமெரிக்காவில் வசதி உள்ளவனை விட ஏழை மக்கள் நோய்க்கு உள்ளாவது ஏழு மடங்கு அதிகமாகும். 2000க்கு முந்திய பத்தாண்டுடன் ஒப்பிடும் போது, அமெரிக்காவில் வறுமை 50 சதவீகித்தால் உயர்ந்துள்ளது. 1980க்கும் 1985க்கும் இடையில் கல்விக் கட்டணம் 256 சதவீதம் உயர்ந்தது. அதேநேரம் குடும்பத்தின் வருமான உயர்வு 95 சதவீதம் மட்டுமே. இது கூட அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிபரமே. ஆனால், இந்த 95 சதவீதத்தை மேல் இருந்து கீழாக ஆராயும் போது, வருமானம் குறைந்து வருமான அதிகரிப்புக்கு பதில் குறைவே ஏற்படுகின்றது.
உண்மையில் அமெரிக்காவில் என்ன நடக்கின்றது. அமெரிக்க மக்களின் 90 சதவீதமானவர்களின் சொத்தைவிட ஒரு சதவீதம் பணக்காரக் கும்பலின் சொத்து அதிகமாகும். 1967க்குப் பின் பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து, 1997இல் 46 சதவீதம் உயர்ந்தது. அதே நேரம், ஊதியம் 14 சதவீதமே உயர்ந்தது. 1996இல் அமெரிக்காவில் மேலே உள்ள 20 சதவீதத்தினர் ஒட்டு மொத்த அமெரிக்க வருமானத்தில் 46 சதவீதத்தை நுகர்ந்த போது, கீழே உள்ள 20 சதவீகித்தினர் அமெரிக்காவின் ஒட்டு மொத்த வருமானத்தில் 1.8 சதவீதத்தையே நுகர்ந்தனர். அமெரிக்கா என்ற சொர்க்க பூமியில், 2003இல் அமெரிக்காவில் 90 சதவீதமான கீழ்மட்ட மக்களின் வருமானத்தை விட, 400 மிகப் பெரிய பணக்காரர்களின் வருமானம் 15 மடங்காக அதிகரித்தது. சொர்க்கம் யாருடையது என்பதையே, தரவுகள் தெளிவுபடுத்தி விடுகின்றது.
1962இல் அமெரிக்காவில் அடிமட்டத்தில் வாழ்ந்த 90 சதவீதமான மக்களின் வருமானம் மொத்த தேசிய வருமானத்தில் 69 சதவீதமானதாக இருந்தது. இது 1992இல் 59 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. பணக்காரனின் செல்வம் அதிகரித்துச் சென்றதையே இது சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. அமெரிக்காவில் ஒரு சதவீதமான செல்வந்தர்களிடம் குவியும் பணத்தின் அளவு, ஆண்டுக்கு 70,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. செல்வக்குவிப்பு பிரமிப்பான எல்லையை தொடர்ந்தும் கடந்து செல்லுகின்றது. 100 கோடிக்கு அதிக சொத்து வைத்திருந்த முன்னணி அமெரிக்க பணக்காரரின் சொத்துக்கள் 1997க்கும் 1999க்கும் இடையில் சராசரியாக 94 கோடி டாலராக அதிகரித்தது. மறுபக்கத்தில் 19831995க்கும் இடையில் அடியில் இருந்த அமெரிக்க மக்களின் சொத்துக்கள் 80 சதவீதத்தால் குறைந்து போனது. இதுவே ஒரு சுதந்திரமான ஜனநாயகமான இந்த சமூக அமைப்பின் உள்ளடக்கமாகும்.
இந்த பணக்காரக் கும்பல் உருவாக்கமே, மக்களின் மந்தைத் தனத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்கின்றது. உலகின் முதல் பணக்காரனின் சொத்து (தீடிணஞீணிதீ சேர்ந்த ஆடிடூடூ எச்tஞுண்) வின்டோஸ் மென்பொருளின் வருகையுடன் தொடங்கியது. கடந்த 10 வருடமாக உலகின் மிகப் பெரிய மக்கள் விரோதியாக ஆடிடூடூ எச்tஞுண் நீடிக்கின்றான். ஆடிடூடூ எச்tஞுண் குவித்த செல்வம், 1999இல் உச்சத்தை எட்டி பின் சீராகி வருகின்றது. வின்டோஸ் சர்வதேச ரீதியாக நவீன கணினி அறிவியல் தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உலகில் மிகப் பெரிய பணக்காரன் தனது சொத்தைத் தக்கவைக்க முனைகின்றான். சர்வதேச ரீதியாக அமெரிக்க நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றமும் வின்டோஸ்சின் அராஜகத்துக்கு எதிராக தீர்ப்புகளையும், அபராதங்களையும் விதித்தபோதும், தொழில்நுட்ப ரீதியான கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாக கணினியில் கட்டுப்படுத்துவதன் மூலமே, உலகில் முதல் பணக்காரன் கொழுத்து நிற்கின்றான். உலகில் அறிவியல் தொழில் நுட்பத்தைத் தமது தனிப்பட்ட சொத்தாக்கியதன் மூலம், உற்பத்தி மீதான கட்டுப்பாட்டைத் தனிமனிதச் சொத்தாக்கி உலகையே சூறையாடுகின்றனர். தனிமனிதனை நோக்கி, செல்வத்தின் பெரும் பகுதி இப்படி வரைமுறையின்றி திரளுகின்றது. உழைப்பின் ஆற்றலையும், உழைப்பின் திறனையும், தனிமனிதர்கள் தமது தொழில் நுட்பம் மூலம் வரைமுறையின்றி சூறையாடுவதால், எங்கும் செல்வக் குவிப்பில் அராஜகம், மக்களுக்கு எதிராகத் தலைவிரித்தாடுகின்றது.
செல்வக்குவிப்பின் ஏற்றயிறக்கம் சர்வதேச பொருளாதார ஏற்றயிறக்கத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகவே இருந்தது, இருந்து வருகின்றது. சர்வதேச நெருக்கடிகள் ஏற்படுத்தும் ஏகாதிபத்திய முரண்பாட்டை, உலகமயமாதல் ஊடாக அமைதியாகவே நகர்த்த முனைகின்றது. மூலதனங்களுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரக் கும்பல், சொத்து இழப்பை அனுமதிக்கும் எந்த ஒரு நிலையையும் சகித்துக் கொள்வதில்லை. இதில் இருந்து மீள அனைத்துவிதமான மக்கள் விரோத வழிகளையும் கையாள்வதில் வக்கிரமாகவே செயலாற்றுகின்றது. இந்த வகையில்
1.வன்முறை சார்ந்த யுத்தம் மூலமான பங்கீட்டைச் செய்தல் ஒரு வடிவமாகும். ஈராக் நெருக்கடி கூட ஏகாதிபத்திய பங்கீட்டையே கோரியது. ஏகாதிபத்தியங்கள் ஈராக் யுத்தத்தில் காட்டிய எதிர்ப்பும், ஆதரவும் கூட இதற்கு உட்பட்டதே.
2.சர்வதேச ரீதியான பொருளாதார நெருக்கடியை அடுத்து, பணக்காரக் கும்பலின் சொத்திழப்பைத் தடுக்க உலகளவில் மக்களின் சேமிப்பு மீதான வட்டிக் குறைப்பு ஒரு குறிப்பான தாக்குதலாக இருந்தது. வட்டிக் குறைப்பின் மூலம் பெரும் மூலதனங்கள் திடீர் லாபத்தைப் பெற்றன. வட்டியைக் குறையக் கொடுத்ததன் மூலம், செல்வம் திடீரெனக் குவிந்தது. பரந்துபட்ட மக்கள் பெரும் சொத்திழப்பைச் சந்தித்தனர். வட்டியைப் பெறும் மூலதனம் மிகக் குறைவாகச் செலுத்தியதன் மூலம், மக்களின் சேமிப்புகளுக்குக் கிடைத்த வட்டி திடீரெனக் குறைந்து போனது. இதில் கிடைத்த லாபம் சில தனிப்பட்ட நபர்களிடம் குவிந்தன. உதாரணமாக அமெரிக்காவில் மக்களின் சேமிப்புக்கு வட்டியைக் குறைத்த போது, 8.4 கோடி மக்களுக்கு வட்டிப் பணமாக கிடைக்க வேண்டிய 4,000 கோடி டாலரை இழந்தனர். ஆனால் மூலதனம் இதை நேரடியாகவே தனதாக்கியது.
3.அண்மையில் ஏற்பட்ட டாலரின் பெறுமதி இழப்பு, தனிப்பட்ட பணக்காரனின் அசையாத சொத்துக்களின் பெறுமதியை உயர்த்தியது. இதன் மூலம் தனிப்பட்ட பணக்காரனின் சொத்துக்கள் திடீரென உயர்ச்சி பெற்றன.
4.உலகளவில் வரிக்குறைப்பு, நடைமுறை ரீதியான செயல் பூர்வமான செல்வக் குவிப்பின் ஒரு நினைவுபூர்வமான வடிவமாகியுள்ளது. கீழ் உள்ளவர்கள் வரி கட்டவே முடியாத வறுமையில் உள்ள போது, மேல் உள்ளவர்களிடம் பணம் குவியும் போது வரிக் குறைப்பு என்பது செல்வக் குவிப்புக்கு மேலும் இசைவானதாகி வருகின்றது. ஏழைகள் உள்ளடக்கிய நுகர்வின் மேலான பொதுவரியை உயர்த்துவதன் மூலம், வருமானம் மீதான வரியை குறைப்பது உலகளாவிய ரீதியில் செல்வக் குவிப்பின் மற்றொரு அடிப்படையாக உள்ளது.
5.உலகளவில் நிதி மூலதனம் பரவிப் பாய்வதால், பின்தங்கிய நாடுகளில் இருந்து ஏகாதிபத்தியம் நோக்கித் தாவும் பணத்துக்கு வரைமுறையற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் செல்வத்தின் இருப்பு மேலும் சிலரை நோக்கிக் குவிந்து வருகின்றது. வரிகள் அற்றதும், சலுகைகளைக் கொண்டதுமான நிதியின் ஊடுருவல், பெரும் தனிப்பட்ட கும்பலின் பணக்குவிப்பை துரிதமாக்குகின்றது.
6.மக்கள் விரோத பணக்காரக் கும்பலின் நிதி, நிதிச் சந்தையைக் கட்டுப்படுத்துவதால், தேசிய நிதியாதாரங்களை தமது தனிப்பட்ட சொந்த நிதியாதாரங்களாக கைமாற்றுகின்றனர்.
பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதால் கொழுப்பேறும் அதிகாரவர்க்கம்
இந்த அமைப்பைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்களும், அதைக் கையாளும் நீதிபதிகள் கூட பெரும் பணக்காரக் கும்பலே. 1997இல் புதிதாக நியமிக்கப்பட்ட 25 நீதிபதிகளின் சராசரியான தனிநபர் சொத்து, 18 லட்சம் டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்காவில் உள்ள நீதிபதிகளில் 34.1 சதவீதம் பேர் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான சொத்துடைய பணக்காரக் கும்பலே. பொதுச் சட்ட திட்டங்கள் பணக்கார நலன்களைத் தாண்டி, எதையும் மக்களுக்காக வழங்குவதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
இப்படி செல்வம் குவிவது என்பது தனிப்பட்ட நபர்களிடம் வரைமுறையின்றி வக்கரித்து வருகின்றது. உலகமயமாதல் இதையே தனது சொந்த ஆணையில் வைக்கின்றது. உலகை மிஞ்சும் பெரும் பணக்காரக் கும்பலை உருவாக்கி அதைப் பாதுகாக்க முனைகின்றது. இதை உருவாக்கிப் பாதுகாக்கும் அரசு தலைவர்கள் முதல், நாட்டை ஆளும் வர்க்கங்கள் பெரும் செல்வத்தின் சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றனர். இதற்குள் 100 கோடிக்கும் அதிகமான சொத்துடைய பிரிவுகளும் அடங்கும். ஆளும் பிரிவுகள் பணக்காரக் கும்பலாக இருப்பது, இன்றைய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் இரத்தக் கொப்பளிப்பாகியுள்ளது. 2000ஆம் ஆண்டில் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலஸ்கோனி உலக பணக்காரக் கும்பலில் 29 இடத்தில் இருந்ததுடன் 1,030 கோடி டாலருக்குச் சொந்தக்காரனாக இருந்தான். இவன் 1997இல் 700 கோடி டாலருக்கு மட்டுமே சொந்தக்காரனாக இருந்தவன். இவனின் சொத்து 1998இல் 800 கோடி டாலராகியது. 2004இல் இவனின் சொத்து 1,000 கோடி டாலராகியது. 2005இல் 1200 கோடி டாலராகியுள்ளது. இவனே இத்தாலியின் மிகப் பெரிய பணக்காரனுமாவான்.
இந்த உலகையே உலகமயமாக்கி சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் கூட கோடீஸ்வரர்கள் அல்லது லட்சாதிபதிகள்தான். 2004இல் உலகை அடக்கியாளும் பிரதானமான ஏகாதிபத்தியத்தைச் சோந்த ஜி7 நாட்டு தலைவர்களின் தனிபட்ட சொத்துக்களின் விபரங்களைப் பார்ப்போம்.
இத்தாலிய பிரதமரின் சொத்து 1200 கோடி டாலர் (2005 இல்)
கனடா பிரதமரின் சொத்து 22.5 கோடி டாலர்
அமெரிக்க ஜனாதிபதியின் சொத்து 1.5 கோடி டாலர்
பிரான்ஸ் ஜனாதிபதியின் சொத்து 90 லட்சம் டாலர்
பிரிட்டிஷ் பிரதமரின் சொத்து 30 லட்சம் டாலர்
ஜப்பானிய பிரதமரின் சொத்து 20 லட்சம் டாலர்
ஜெர்மனிய பிரதமரின் சொத்து 10 லட்சம் டாலர்
இவர்கள் அனைவரும் உலகப் பணக்காரர் பட்டியலில் உள்ளவர்களே. உலகமயமாதலை பாதுகாக்கும் இந்தக் கும்பல், மக்களின் வாக்குரிமையில் அதிகாரத்துக்கு வருகின்றனர். இன்றைய ஜனநாயகம் என்பது பணக்காரக் கும்பலுக்கு மட்டுமானதே. பணக்காரர் மட்டும் அல்லது பணக்காரருக்கு சேவை செய்து பிழைக்கக் கூடியவர்கள் மட்டுமே இந்த ஜனநாயகம் மூலம் அதிகாரத்துக்கு வரமுடியும். மக்களால் தேர்ந்து எடுத்து அதிகாரத்துக்கு வந்ததாகக் கூறுபவர்களே தமக்குத்தாமே எடுத்துக் கொள்வது என்பது, ஒரு அடிப்படைச் சம்பளம் பெறும் தொழிலாளியை விட (அடிநிலைத் தொழிலாளி சராசரியாக 12000 ஈரோவையே வருடம் பெறுகின்றான்) பல மடங்காகும். இது 25 மடங்கு வரை செல்லுகின்றது. பிரதான ஏகாதிபத்தியங்களில் ஆளும் வர்க்கம் தாம், தமக்கே எடுத்துக் கொள்ளும் கொள்ளையின் அளவைப் பார்ப்போம்.
பிரதமர் மந்திரிகள்
பிரிட்டன் 2,60,000 ஈரோ 1,90,000 ஈரோ
அமெரிக்கா 2,11,800 ஈரோ 1,83,200 ஈரோ
பெல்ஜியம் 1,80,000 ஈரோ 1,50,000 ஈரோ
ஜெர்மனி 1,74,884 ஈரோ 1,39,944 ஈரோ
பிரான்ஸ் 1,22,000 ஈரோ 91,500 ஈரோ
இத்தாலி 1,05,500 ஈரோ 80,500 ஈரோ
சட்டபூர்வமாக அவர்கள் கூறும் ஜனநாயகத்தின் ஊடாக சம்பளமாக பெறுவது இவை. ஆனால் இதை விட பற்பல சலுகைகள், மானியங்கள், வசதிகள் என பலவற்றைத் தாமே தமக்கு எடுத்துக் கொள்கின்றனர். இதை எடுத்துக் கொள்வதையே தமது ஜனநாயகம் என்கின்றனர். இவர்கள் தான் ஒரு தொழிலாளியின் சம்பளம் அதிகம் என்று கூறுவது மட்டுமின்றி, அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கான உரிமையை, மக்கள் தமது வாக்கு மூலம் தமக்குத் தந்துள்ளதாகக் கூறும் வக்கிரம் தான் இன்றைய ஜனநாயகமாக உள்ளது.
2003இல் அமெரிக்கா செனட் சபைக்கு தேர்ந்தெடுத்த 100 பேரில் குறைந்தபட்சம் 40 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். சிலர் பல பத்து கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள். இந்த 40 பேரில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 22 பேரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் கோடீஸ்வரராக இருந்தனர். அமெரிக்க ஜனநாயகம் என்பது இரண்டு கோடீஸ்வரக் கும்பலுக்கு இடையிலான போட்டியே ஒழிய வேறு ஒன்றுமல்ல. உலகை எப்படி அடக்கியாள்வது என்பதும் இதற்கு உட்பட்டதே. அதிகுறைந்த சொத்துடைய 40வது கோடீஸ்வரரின் சொத்து 11.1 கோடி டாலராகும். இரண்டாவது பெரிய பணக்கார செனட்டரான ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஜோன் கெரியின் சொத்து 16.4 முதல் 21.1 கோடி டாலராகும். இவருக்கு 75 பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவர் மனைவிக்கு (ஏஞுடிணத் ஞிணிட்ணீச்ணதூ) இரண்டு பரஸ்பர நிதி நிறுவனங்களும் சொந்தமாக இருந்தன. இவை எல்லாம் அவர் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளவையே. கணக்கில் காட்டப்படாத நிதிகள் முதல் விதிவிலக்குகள் கூட உண்டு. இதைவிட அமெரிக்காவின் செனட்டர்களின் வருமானம் பற்றிய தகவல் தெரிவிக்கும் சட்டமூலத்தை தெளிவில்லாத வகையில் தமக்குத்தாமே ஓட்டையாகவே தயாரித்துள்ளனர். இதன் மூலம் சொத்துக்களை முழுமையாகக் காட்டுவதில்லை. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி தனது சொத்தை 3.52 லட்சம் என குறைந்தளவிலும் கூடியளவு 38 லட்சம் என்றே அறிக்கை செய்திருந்தார். ஆனால் பல இடங்களில் கணவர் பற்றி உரையாற்றிய போது, அதற்குக் கட்டணமாகப் பெற்றதே 90 லட்சம் டாலர். வாழும் வரலாறு என்ற தனது நூலுக்கு மட்டும் 80 லட்சம் டாலரைப் பெற்று இருந்தார். இருந்த போதும் இவர் செனட்டருக்கான கோடீஸ்வரர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு ஊதியம் மட்டும் 1.55 லட்சம் டாலராகும். இங்கு தலைமையில் இருப்பவர்களுக்கு சம்பளம் 1.72 லட்சம் டாலராகும். செனட்டைக் கடந்து பாராளுமன்றத்தில் உள்ள 435 பேரில் பலர் கோடீஸ்வரர்கள். அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் முதல் பல சொத்துக்களின் அதிபதிகளாகவும் பங்காளியாகவும் உள்ளனர்.
இதே போன்று 2004இல் உலகின் ஆட்சி பீடங்களில் இருந்த அரசர்கள் மற்றும் கௌரவ அரச பரம்பரையைச் சேர்ந்த சிலரின் சொத்து விபரங்களைப் பார்ப்போம்.
சவுதி மன்னன் 2500 கோடி டாலர்
ஐக்கிய எமிரட் மன்னன் 2000 கோடி டாலர்
பு×ண்டி (புரூனே) மன்னன் 1430 கோடி டாலர்
துபாய் மன்னன் 1000 கோடி டாலர்
லிசெஸ்தெயின் மன்னன் 220 கோடி டாலர்
தாய்லாந்து பிரதமர் 140 கோடி டாலர்
பிரிட்டிஷ் மகாராணி 66 கோடி டாலர்
நெதர்லாந்து மன்னர் 26 கோடி டாலர்
பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியாக
இருந்த அராபத் 20 கோடி டாலர்
பணக்காரக் கும்பலின் வாழ்க்கை முறைமை
சமூக விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது.
இப்படி உலகை ஜனநாயகத்தின் பெயரிலும், சுதந்திரத்தின் பெயரிலும் ஆளுகின்ற பலர் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் இருக்கின்றனர். இந்த ஆளும் வர்க்கமும், அதைச் சுற்றி உள்ள அதிகாரவர்க்கமும் கூட பெரும் பணக்காரக் கும்பலானதே. இந்தக் கும்பல் ஏழை மக்களின் நலனையிட்டு ஒரு நாளும் ஒரு கணமும் சிந்திக்கப் போவதில்லை. மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் எனின், தமது சொந்தச் செல்வத்தின் இழப்பை அங்கீகரிக்க வேண்டும். எந்தப் பணக்காரனாவது தனது சொந்த சொத்து இழப்பை அங்கீகரிக்க போவதில்லை. உதாரணமாக உலகின் முதல் பெண் பணக்காரியான பிரிட்டிஷ் அரியணையில் இருக்கும் எலிசபெத் தனது உடைக்காக மட்டும் வருடம் 8.7 லட்சம் இலங்கை ரூபாவையும், பூக்களுக்கு வருடம் 5.2 லட்சம் இலங்கை ரூபாவையும் செலவு செய்கின்றார். இதை அவர் இழக்கத் தயாராக இருப்பதில்லை. மாறாக பச்சை இடவும், தமது சமூக அந்தஸ்துக்காக குறைந்த பட்சம் தமது செல்வத்தில் ஒரு சில சில்லறைகளை வீசியெறிவதன் மூலம், பெரும் கொள்ளைகளை அடிப்பதே இன்றைய ஜனநாயகம் மட்டுமின்றி இதை நியாயப்படுத்துவதுமே இன்றைய நவீன அரசியலுமாகும். மூலதனத்துக்கு சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் ஏழ்மையைப் பெருக்குவது அரசுகளின் பொதுக் கொள்கை. இதற்குக் கூலியாகவே தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் சதையுள்ள கொழுப்பு மூலம் மக்களை அடக்கியாளுகின்றனர்.
இப்படிப் பல வழிகளில் பணக்காரக் கும்பலின் செல்வக் குவிப்பு என்றுமில்லாத போக்காகியுள்ளது. பணம் என்ற வகையில் அதை நோக்கி, உலகின் அனைத்தையும் இழுத்தெடுக்கின்றது. மக்கள் விரோதக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் சர்வதேச வருமானத்தில் மிகப் பெரிய ஒன்றாகி விட்டதால், அதைச் சுற்றியே ஒரு சமுதாய இருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பணக்காரக் கும்பலின் சொகுசு வாழ்க்கைக்கு ஏற்ற, மிகப் பெரிய வக்கிரமான கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. இந்தச் செல்வத்தைக் கொண்டு, இந்தப் பணக்காரக் கும்பல் ஒரு வேளை சோற்றையும், ஒரு கறியையும் உண்டு வாழவில்லை. மாறாக இந்தப் பணத்தைக் கொண்ட நுகர்வு என்பது, கவர்ச்சிகரமான, இழிவான பண்பாட்டை அடிப்படையாக கொண்ட வக்கிரத்தால் தன்னை அலங்கரிக்கின்றது.
மக்கள் விரோத பணக்காரக் கும்பலின் ஆடம்பரமான வக்கிரத்துக்கு ஏற்ற வகையில், உலகம் தலைகீழாகவே சுற்ற வைக்கப்படுகின்றது. குவியும் பணத்தைக் கொண்டு அவர்கள் வாழும் ஆடம்பரமான வாழ்க்கை மூடு மந்திரமாகவே எப்போதும் உள்ளது. அதை தனிமனித உரிமை என்ற பெயரில், சாயம் பூசி மூடப்படுகின்றது. இதை கண்டு கொள்வது, கேள்வி கேட்பது தனிமனித உரிமைகளில் தலையிடும் அநாகரிகம் என்ற கற்பிக்கப் படுகின்றது. பொதுவாகவே, சமூகத்துக்கு எதிரான தனிமனித வக்கிரங்கள் புனிதமாக்கப் படுகின்றன. எல்லோரும் தெரிந்து கொள்ள முடியாத, இரகசியமான, சூக்குமத்தால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பணக்காரக் கும்பல் உலகில் உள்ள அனைத்தையும் வாங்கி நுகரும் வக்கிரமான அனைத்துத் திறனைக் கொண்டதாக உள்ளது. சுதந்திரம், ஜனநாயகம் இதன் தாராளமான விரிந்த கடைகெட்ட எல்லையாக உள்ளது.
இந்தப் பணக்காரக் கும்பலின் வக்கிரங்கள் வக்கரிக்கும் போது, அவர்களின் நுகர்வுகள் சில சந்திக்கு வருகின்றன. சில உதாரணங்கள் மூலம் இதைப் பார்ப்போம். இந்தியாவைச் சேர்ந்த சஹாரா குருப் முதலாளியான சுப்ரஹ்டா ரோயின் இரண்டு பிள்ளைகளுக்கு 2004 பெப்ரவரி மாதம் திருமணம் ஒன்றை அடுத்தடுத்து நடத்தினர். அண்ணனின் திருமணக் கூத்துக்கு 1,500 வி.ஐ.பி.க்கள் உட்பட உலகிலேயே வக்கிரம் பிடித்த சமூக விரோதிகளான 5,000 பேர் கலந்து கொண்டனர். இந்திய மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளடங்கிய சமூக விரோதிகள் புடைசூழவே இவை நடைபெற்றது. இவர்களின் வருகைக்காக விசேட விமானங்கள், இலவச பயணங்களை நடத்தியது. லக்னோவ் இரண்டு ஹோட்டல்களின் எல்லா அறைகளும் இந்த பொறுக்கி கும்பலால் நிரம்பி வழிந்தது, 100 பென்ஸ் கார் அங்கும் இங்குமாக ஓடியது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல்காரர்கள் மூலம் சீன, இத்தாலி, லெபனான், மெக்சிகோ, மொங்கோலியா உணவு என்று பல விதமாக, கொழுப்பேறிய சமூக விரோதிகளின் வாயின் ருசிக்கு ஏற்ப விரும்பியவாறு பரிமாறப்பட்டது. பல வகையான விதவிதமான குடிபானங்கள் தனி. 4000 சொந்த ஊழியர்கள் உட்பட 7000 பேர் திருமண வேலைகளுக்கென அமர்த்தப்பட்டனர். இதை விமர்சிப்பதைத் தடுக்க, 1.40 லட்சம் ஏழைகளுக்கு ஒரு வாரம் தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டது. 101 ஏழைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இவரின் தம்பியின் திருமணம் பெப்ரவரி 14ஆம் திகதி நடைபெற்றது. இந்தக் கூத்துக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வருவதாக இருந்தது. இறுதியில் அவர் வரவில்லை. இவரின் திருமணத்துக்கான வரவேற்பு மண்டபத்தை அலங்கரிக்க 500 பேர் அமர்த்தப்பட்டனர். 10,500 சமூக விரோதிகள் திருமணத்துக்கான விசேட அழைப்பைப் பெற்றனர். இவர்களின் வருகைக்காக விசேட விமானப் பறப்புகள் ஒருபுறம், மறுபக்கத்தில் விருந்தினருக்கு அதிர்ஷ்ட லாபச் சீட்டு மூலம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 110 விதம் விதமான உணவு வகைகளை உற்பத்தி செய்ய, 1800 சமையல்காரர்கள் கூலிக்கு அமர்த்தப் பட்டனர். இந்த அரங்கைப் பாதுகாக்க 2000 பேர் கொண்ட பயிற்சி பெற்ற பாதுகாப்பு பிரிவு ஒன்று கூலிக்கு அமர்த்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கூலிக்கு மாரடிக்கும் இசைக் கலைஞர்கள், வாய்ச் சுவைக்காக பலவிதமான இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரகப் பொருட்கள் குவிக்கப்பட்டது. வாசனை மெழுகுவர்த்தியை 10 லட்சம் இந்தியா ரூபா செலவில், முன்னாள் நடிகையும் இன்னாள் முதலாளியாக உள்ள ஒருத்தி இறக்குமதி செய்து அன்பளிப்பாக வழங்கினார். இப்படி வாசனையைக் கக்கிய மெழுகுவர்த்திகளின் மொத்த எண்ணிக்கை 56,000 ஆகும். இந்தத் திருமணத்தை நடத்திய பணக்காரனின் சொத்து 370 கோடி பவுண்டுகளாகும். இந்தியா ரூபாவில் 65,800 கோடி ரூபாவாகும். இந்தத் திருமணத்துக்காக 2 முதல் 5 கோடி பவுண் வரை செலவாகியது. அதாவது 335 முதல் 885 கோடி இந்திய ரூபா செலவாகியது. தனிநபருக்கு 3,000 பவுண்டு வீதம், அதாவது ஒருவருக்கு 5.32 லட்சம் இந்தியா ரூபா செலவு செய்யப்பட்டது. இந்த பணக்காரனுக்கு 33,000 ஏக்கர் நிலம் மற்றும் வீடுகள் சொந்தமாக உள்ளது. 7 இலட்சம் ஊழியர்கள் இவரின் கீழ் வேலை செய்கின்றனர். தனிப்பட்ட விமானம், இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள், ஒரு ஞாயிறு செய்திப் பத்திரிகை என்று பல இவரிடம் உண்டு. இதைக் கொண்டு மக்களை அடக்கியாளவும், அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்தும் பண்பாடு தான், இது போன்ற பணக்காரனின் பண்பாடு.
உலக செல்வங்களையே தமதாக்கி அதையே நாகரிகமாக்கி விடும், தனிப்பட்ட சொத்துடைய வர்க்கத்தின் பிரதிநிதிகளின் ஆடம்பரங்களும், ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய வக்கிரத்தை உள்ளடக்கிய அவர்களின் வாழ்க்கை முறைக்கு இவைகள் ஒரு எடுத்துக்காட்டு. இந்தப் பணக்காரக் கும்பல் ஆபாசமாகவும் வக்கிரமாகவும் திண்டதைப் பேளும் போது, அதை சுத்தம் செய்யவே பெரும் தொகையைச் செலவு செய்பவர்கள். உலக மக்களை உலகமயமாதலூடாக சூறையாடிப் பெறும் பணத்தை, இந்த கும்பல் பெட்டியில் அடுக்கி வைப்பதில்லை. நுகர்வு வெறியினால் வக்கிரம் பிடித்துவிட, விதவிதமாக வக்கரித்து அலைகின்றனர். இந்த நுகர்வின் பொதுதன்மையைச் சுற்றி ஒரு உலகத்தையும், ஒரு சந்தையையும் கட்டமைக்கின்றனர். மூன்றாம் உலகநாடுகள் மேற்கு நோக்கி தமது உற்பத்தியை எப்படி ஒழுங்கமைத்து மேற்கு நாட்டவர்களுக்கு சேவை செய்கின்றனரோ, அதேபோன்று இந்த பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்யும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பாக உலகம் மாறிவருகின்றது. தனிப்பட்ட பணக்காரர்களின் சொத்தே பல உலக நாடுகளின் தேசிய வருமானத்தை மிஞ்சும் போது, அந்தப் பணத்தைச் சுற்றி உற்பத்தி முறையே மாறத் தொடங்கி விடுகின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பு இவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு வரையறைக்குள், உற்பத்தி முறைகளே மாற்றி அமைக்கப்படுகின்றது. அதாவது பணம் உள்ளவனின் தேவைக்கு ஏற்ற உற்பத்தி, என்பதே உலகமயமாதலின் அடிப்படை நிபந்தனை. பணத்தை அதிகம் செலவு செய்யத் தயாரான ஒரு வர்க்கத்துக்குத் தேவையான உற்பத்தியும், அதைச் சார்ந்த உழைப்புமே உலகமயமாதலாகும்.
இந்தப் பணக்காரக் கும்பலின் ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் சில மாதிரிகளைப் பார்ப்போம். 1999இல் பிரான்சில் மிகப் பெரிய பணக்காரக் கும்பல் 6 முதல் 12 கோடி ஈரோ பெறுமதியுள்ள 22,000 மாடமாளிகளை சொந்தமாக வைத்திருந்தனர். இதிலும் குறிப்பாக 10 முதல் 15 வீடுகள் மிகப் பெரிய அரண்மனைகளாகும். இதன் பரப்புகள் 20,000 முதல் 40,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டவை. பிரெஞ்சு பணக்காரக் கும்பல் எப்படி வக்கரித்து இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் பிரான்சில் வீடுகளற்ற நிலையில், வீதியில் வசிப்போர் எண்ணிக்கையோ 5 லட்சமாகும். இதைவிட மோசமான அடிப்படை வசதிகளற்ற நிலையில், வீடுகள் தேடியபடி 20 இலட்சம் குடும்பங்கள் வாழ்கின்றனர்.
பிரெஞ்சு பணக்கார வர்க்கம் அரண்மனைகளில் வாழ்கின்றனர் என்றால், இதுவே உலக பணக்காரரின் பொது ஒழுக்கமாக உள்ளது. இது போன்ற வீடுகளில் ஒன்று, உலகிலேயே அதியுயர் விலைக்கு அண்மையில் லண்டனில் விற்பனையாகியது. இதன் பெறுமதி 7 கோடி பவுணாகும். அதாவது இலங்கை பணத்தில் 1,245 கோடி ரூபாவாகும். இதை வாங்கியவன் இந்தியரான லஷ்மி மித்தலாவான். 12 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த வீடு, பொதுவான வீடுகளை விட 55 மடங்கு பெரியவை. அந்த வீட்டின் வாகன இருப்பிடத்தில் 20 கார்கள் நிறுத்த முடியும். இவனின் தனிப்பட்ட சொத்து 1996இல் 150 கோடி டாலராக இருந்தது. ஆனால் 2004இல் உலகில் 62வது பெரிய பணக்காரனானதுடன், இவனின் தனிப்பட்ட சொத்து 620 கோடி டாலராகியது. 2005இல் இவனின் சொத்து திடீர் வீக்கம் கண்டது. தனிப்பட்ட சொத்து 2,500 கோடி டாலராகியது. அத்துடன் உலகில் மூன்றாவது மிகப் பெரிய பணக்காரனானான். இவனுக்கு லண்டனில் மற்றொரு வீடு உள்ளது. இதன் பெறுமானம் 90 லட்சம் பவுண்ட்டாகும். அதாவது 160 கோடி இலங்கை ரூபாவாகும். இது போன்று 1997இல் கொங்கொங்கில் 6.27 கோடி பவுணுக்கு மற்றொரு வீடு விற்பனையாகியது.
வீடுகள் தான் இப்படி என்றால் அதிர்ஷ்ட எண் என்ற ஒன்றை வாங்கவும், இந்தப் பணக்காரக் கும்பல் தண்ணியாக செலவு செய்யத் தயங்குவதில்லை. சீனாவைச் சேர்ந்த பணக்காரன் ஒருவன், அதிர்ஷ்ட எண் என்ற ஒன்றை வாங்க, 10 கோடி இலங்கை ரூபாவை செலவு செய்துள்ளான். இவற்றை மனித சமுதாயத்தின் ஒழுக்க விதியாகக் காட்டுவதே இன்றைய ஜனநாயகமும் சுதந்திரமுமாகும்.
இந்தத் திமிர் பிடித்த சொகுசு வாழ்க்கைக்கு பின்னால், உண்மைகள் அதிர்ச்சிகரமானதாகவே எதார்த்தத்தில் உள்ளது. 1987 டாலர் பெறுமதியை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்தால் 1970க்கும் 2000க்கும் இடையில் ஒப்பிடும் போது உலகளவில் சராசரி தலா வருமானம் 2,900 டாலரில் இருந்து 3,600 டாலராக அதிகரித்தது. சராசரியாக 25 சதவீதத்தால் இது அதிகரித்தது. ஆனால் வறிய நாடுகளில் இது 287 டாலரில் இருந்து 245 டாலராகக் குறைந்துள்ளது. அதாவது சராசரியாக வருமானம் 15 சதவீதத்தால் குறைந்துள்ளது. 1975க்கும் 1997க்கும் இடையில் ஏகாதிபத்திய நாடுகளின் சாராசரி வருமானம் வருடத்துக்கு 12,598 டாலரில் இருந்து 19,283யாக அதிகரித்தது. ஏழை நாடுகளின் உள்ளே புகுந்து பார்த்தால், ஏழ்மையின் வக்கிரம் மனித துயரங்களால் வக்கரித்து கிடக்கின்றது. நமீபியாவை எடுத்தால் 5 சதவீதமான வெள்ளையர்கள் நாட்டின் 70 சதவீதமான செல்வத்தை நுகரும் அதேநேரம், 55 சதவீதமான கறுப்பர்கள் கஞ்சிக்கே வழியற்ற கையேந்தி வாழும் ஏழைகளாக உள்ளனர். இது சுதந்திரம் பெற்ற நமீபியா சுதந்திரத்தினதும், ஜனநாயகத்தினதும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
இதற்கு மாறாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் வக்கிரம் தெவிட்டத் தயங்குவதில்லை. உலகில் அதி உயர் கட்டணத்தை அறவிடும் தங்கு விடுதியின் (டணிtஞுடூ) ஒரு இரவுக்கான செலவு 33,243 டாலராகும். இது ஜெனிவாவில் உள்ள வின்சன் விடுதியாக உள்ளது. பணக்காரக் கும்பலால் உபயோகிக்கப்படும், உலகிலேயே அதிக செலவு உள்ள காரின் பெறுமானமோ 21 இலட்சம் டாலராக உள்ளது. இந்த பணக்காரக் கும்பல் தமது வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் பொருட்களின் ஒரு சிலவற்றின் விலைகளை ஆராயும் போது, அதன் வக்கிரத்தை எடுத்துக் காட்டுவனவாக உள்ளது. இந்தப் பணக்கார கும்பல் வீட்டுச் சுவரை அலங்கரிக்கப் பயன்படுத்தும் சுவருக்கு ஒட்டும் பேப்பரின் விலை 40,000 டாலராகும். இந்த மனித விரோதக் கும்பல் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டியின் விலையோ 2.5 லட்சம் டாலர்களாகும். இவர்கள் சமைக்காது அலங்காரமாகப் பாவிக்கும் வீட்டு அடுப்பு, 14 ஆயிரம் ஈரோவுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. இப்படி பற்பல. இந்தக் கும்பல் சுவைக்க பிரான்சில் விசேடமாகவும், குறைந்த பட்சம் விலையான 650 ஈரோ பெறுமதியான விசேட வைன்கள் 6,000 போத்தல் வருடாந்தரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. வக்கிரம் பிடித்த இந்த வர்க்கம் போடும் ஒரு காலணியின் (சாப்பத்தின்) விலை 2,500 ஈரோவாக (அண்ணளவாக 3 லட்சம் இலங்கை ரூபா) உள்ளது. இப்படி இந்த பணக்காரக் கும்பல், மனித அவலத்தின் மேல் வக்கிரமாகவே தன்னைச் சுற்றி ஒரு உலகத்தையே படைக்கின்றனர். உலக மக்களின் பணங்களின் மேல், அவர்களின் உழைப்பைப் பிழிந்து கிடைக்கும் இரத்தத்தைக் குடித்தே, இந்தப் பணக்காரக் கும்பல் சொக்கிக் கிடக்கின்றது. இதுவே உலகமயமாதலின் உயர்ந்த இலட்சியமாகவும், அதன் ஒழுக்கமாகவும், அதன் பண்பாடாகவும் உள்ளது.
இந்த வக்கிரமான ஒழுக்கம் சார்ந்த சொர்க்கத்ததைச் சுற்றியே, தனிநபர்களின் சமுதாயமாக உலகம் மாற்றப்படுகின்றது. இதில் தனிநபர்கள் கூட கவர்ச்சிகரமான சந்தைப் பொருளாகின்றனர். கவர்ச்சி சார்ந்த பாசிச வக்கிரமே, தனிநபர் கதாநாயகர்களை உருவாக்குகின்றது. மலட்டுத்தனமான சிந்தனைத் தளத்தில் மக்களை மந்தைகளாக்கி, தனிநபர்களைச் சுற்றி தனிநபர் பிம்பங்களைக் கட்டமைக்கின்றனர். இந்தத் தனிநபர் பிம்பங்கள் மக்களை மேய்க்கும் இடையர்களாகி விடுகின்றனர். அவர்கள் உலகமயமாதலின் சந்தையைக் கவர்ச்சியாக்கி, அதையே நுகர்வு வெறியாக்கி, மக்களை அடிமைப்படுத்தும் நபர்களாகி விடுகின்றனர். இந்த நபர்களின் தனிப்பட்ட விலையோ பல கோடிகளைத் தாண்டிவிடுகின்றது. உதாரணமாக உலகிலேயே அதியுயர் விலை கொண்ட மனிதர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் விளம்பரங்களில் தோன்றுபவராகவே உள்ளனர். இப்படித் தோன்றும் முதல் 10 நபர்களின் சராசரி விலை, 2003இல் 4.90 கோடி டாலராகும். இது 2002இல் 4.84 கோடி டாலராக இருந்தது. இப்படி கோடிக்கணக்கான பெறுமதியில் விலை போகும் நபர்கள், செய்யும் விளம்பரங்கள் உலக மக்களையே மலட்டு மந்தையாக்குகின்றது. இந்த மந்தைத் தனத்தில் மக்கள் சிக்கிவிடும் போது, மக்களின் உழைப்பை அவர்களே அறியாமல் பிடுங்கிவிடுவது உலகமயமாதலின் சந்தைவிதி. இதில் சில துளிகளை வீசியெறியும் போதே, கோடிக்கணக்கான விலையுள்ள உலகமயமாதலின் பிம்பங்கள் உருவாகின்றனர். இதன் மூலம் குறித்த ஒரு பொருளை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் வருடத்தில் ஒரு டாலர் லாபம் கிடைக்கும் வகையில் விற்றுவிட்டால், 600 கோடி டாலர் திடீரென்று ஒரு வருடத்துக்கு கிடைத்துவிடும். இது தனிப்பட்ட நபர்களின் சொத்தாகின்றது. இந்த உள்ளடக்கம் தான் உலகமயமாதல்.
இதன் மூலம் மனித சமூகத்துக்கு எதிராக, ஒரு சிலர் எப்படி வாழ்கின்றனர் என்பதின் எடுப்பான சிறப்பான வடிவம் தான் இது. சமூகத்துக்கு எதுவெல்லாம் மறுக்கப்படுகின்றதோ, அதை நுகர்வதும் அதைக் கொண்டு வக்கரிப்பதுமே செல்வச் செருக்கின் உயிர் உள்ள துடிப்பான ஆன்மாவாக உள்ளது. மூலதனம் என்ற நூலில் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் இருந்து எடுத்துக் காட்டுவது, இன்றும் இந்த பணக்காரக் கும்பலின் வக்கிரத்தைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வரிகளாகவே உள்ளது.
தங்கம், மஞ்சள் நிறமாய் மின்னும் தங்கம்!
அருமையும் பெருமையும் என்னென்ன செய்திடும்!
கறுப்பை வெள்ளையாக்கும், கெட்டதை நல்லதாக்கும்!
தவறென்றானதை சரியென்றாக்கிடும்!
இழிந்ததை சிறந்ததாய் உயர்த்தி வைத்திடும்!
கிழவனைக் குமரனாய், அஞ்சி நடுங்கும்
கோழையைத் தீரனாய் மாற்றி வைத்திடும்!
.. என்னே இது, விண்ணுறை தெய்வங்காள்!
அர்ச்சகரை, அடியாரை உம்மிடமிருந்தே கவர்ந்து கொள்ளுமே!
மல்லர்தம் தலையணை தட்டிச் செல்லுமே!
இம்மஞ்சள் அடிமை என்னென்ன செய்திடும்?
மதங்களைப் பிணைக்கும், சிதைக்கும்!
படுபாவிக்கும் அருள் பாலிக்கும்!
தொழுநோயென்றும் பாராது குலாவச் செய்திடும்!
கொள்ளையர் தம்மை அவையிலமர்த்தி,
பட்டமும் பாராட்டும் பெற்றுத் தந்திடும்!
வதங்கிய விதவையை மணவறையில் அமர்த்திடும்!
... வினை வைக்க வந்த மண்மகளே!
மனிதனைவர்க்கும் வாய்த்த விலைமகளே!
இங்கு பணம் தங்கமாக உள்ளது. எல்லாவிதமான சமூக விரோத வக்கிரங்களையும் செல்வம், தனது காலடியில் இருந்து உற்பத்தி செய்கின்றது. தனிநபர்களின் வக்கிரத்துக்காக மனித சமூகத்தையே தரம் தாழ்த்துவது, உலகமயமாதலின் உள்ளடக்கமாகும். மக்கள் கூட்டம் சிலருக்காக சேவை செய்யக் கோருவதை உலகமயமாதல் ஒழுக்கமாக, பண்பாடாகக் கட்டமைக்கப்படுகின்றது. மக்களின் சுயசிந்தனைத் திறனை முடக்குவது, அதை மலடாக்குவது உலகளாவிய பொதுவான உலகமயமாதல் உத்தியாகவும் உள்ளது.
No comments:
Post a Comment