Wednesday, July 28, 2010

பெட்ரோல் விலையும் அரசின் பித்தலாட்டமும்

மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.50ம், டீசலுக்கு ரூ.2ம், சமையல் எரிவாயுவுக்கு ரூ.35ம், மண்ணெண்ணெய்க்கு ரூ.3ம் உயர்த்தியது. இதன் மூலம் லாரி வாடகை உயர்வால் அத் தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது. டாக்ஸி, ஆட்டோ, பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. நாட்டில் 77 சதவீத மக்கள் தங்களது வருமானத்தில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உணவிற்காக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரி நீங்கலாக பெட்ரோல் விலை எவ் வளவு என்ற கேள்விக்கு, லிட்டருக்கு பெட் ரோல் விலை ரூ.23.02 என நாடாளுமன்றத் தில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற் போது ஒரு லிட்டர் பெட்ரோல் (திருநெல்வேலியில்) ரூ.55.74 ஆகும். வரி நீங்கலாக பெட்ரோல் விலை ரூ.23.02 என்றால் மத்திய, மாநில அரசுகளின் வரி மட்டும் ரூ.32.72. ஆக, வரி மட்டும் 51 சதவீதம் பெட்ரோல் மீது விதிக்கப்படுகிறது. அண்டை நாடுகளின் வரி விகிதங்கள்:

நாடு பெட்ரோலுக்கு மொத்த வரி டீசல் வரி

தாய்லாந்து 24 சதவீதம் 15 சதவீதம்

பாகிஸ்தான் 30 சதவீதம் 15 சதவீதம்

ஸ்ரீலங்கா 37 சதவீதம் 20 சதவீதம்

இந்தியா 51 சதவீதம் 30 சதவீதம்


எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே மானியம் அதிக அளவில் வழங்க வேண்டியுள்ளது என மத்திய அரசு கூறுகிறது. வரி மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.16.50வீதம் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. ஆனால் கீழ்க்கண்டவாறுதான் மானியம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.

வருடம் பெட்ரோல் மூலம் மானியம் அரசு எடுத்துக்

வரி வருமானம் வழங்கியது கொண்டது

2006-07 1,57,219 கோடி 51,911 கோடி 1,05,308 கோடி

2007-08 1,71,731 கோடி 79,764 கோடி 91,867 கோடி

2008-09 1,61,798 கோடி 1,05,980 கோடி 55,818 கோடி

உயர்த்திய

விலையில் 56,365 கோடி 14,058 கோடி 42,307 கோடி


மட்டும் வரவு

இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்படும் போது விலை உயர்த்தாமல் இருக்க இருப்பு நிதியாக செஸ்வரி கொண்டுவரப்பட்டது.

2001ல் ஒரு டன்னுக்கு ரூ.900ம், 2006ல் ஒரு டன்னுக்கு ரூ.2800ம், தற்போது ரங்கநாதன் கமிட்டி ஒரு டன்னுக்கு ரூ.4800ம் வரி விதிக்கக் கூறுகிறது. செஸ் வரிப்பணத்தையும் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு பயன்படுத்தவில்லை.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் போது பெட்ரோல், விமான பெட்ரோல், டீசல், தார், சேக்கரின், கேஸ், மண்ணெண்ணெய் போன்ற 13 பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பான்மை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பல்லாயிரம் கோடி பணம் பெட்ரோலியத்துறைக்கு வழங்கப்படுவதில்லை.

பெட்ரோல் விலையின் கட்டுப்பாட்டை அரசு பிடியில் இருந்து விடுவித்து, பெட்ரோலிய கம்பெனிகள் (தனியார் கம்பெனிகள் உட்பட) 15 தினங்களுக்கு ஒருமுறை விற்பனை விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் பெட்ரோலியத்துறையில் 41 சதவீதம் வைத்துள்ள தனியார் கம்பெனிகளே அதிக லாபம் பெறும். முதலாளிகள் சங்கமான ‘பிக்கி’ இதை வரவேற்றதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்து அமலாக்க வேண்டும்.

1. விலை நிர்ணயத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும்.

2. பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்க வேண்டும்.

3. பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் பெறப்படும் வரிகள், செஸ்வரி இருப்புத்தொகை, 13 வகையான பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

4. இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தித்திறன் 177.97எம்.எம்.டி.அளவை முழுமையாக பயன்படுத்த வேண்டும். புதிய பகுதிகளை கண்டுபிடித்து உற்பத்தி திறனை அதிகமாக்க வேண்டும்.

5. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்.

-நெல்லை ஆறுமுகம்

No comments: