Thursday, July 1, 2010

பட்டினி குறியீடு, புள்ளி விபரம் தரும் உண்மைகள்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப் படையில் வேகமாக வளர்ந்து வருவதாக பல முதலாளித்துவ ஏடுகள் செய்திகளை வெளி யிட்டு வருகின்றன. சந்தை பொருளாதா ரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல் படும் சேவைத் துறைகள், உற்பத்தித் துறை கள், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற் றால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாக தொடர் பிரச்சாரங்கள் செய்யப்படும் நிலையில், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் வெளியிடும் புள்ளியியல் தகவல்கள் உண்மை நிலவரத்தை வெளிக் கொண்டு வருகிறது.

நமது நாட்டில் வளங்குன்றிய மாநிலங்க ளாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், ராஜஸ் தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வை வருமான அடிப்படையில் கண்டறியப் பட்டுள்ளது. இந்திய வருமானத்தில் அடிப் படையில் செய்யப்படும் பொருளாதாரக் கணிப்புகள், மக்கள் தொகையை அடிப்படை யாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலத்திற்கு மாநிலம் மாறினாலும் சராசரி வருமானம் வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் மாறுபடுவதாகவும் கண்டறி யப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைச்சூழலில், புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தும் ஆய்வுக ளில் மத்தியப் பிரதேச மாநில ஏழை மக்கள் உணவு பஞ்சத்தால் பட்டினியில் வாடுவதா கவும், உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். எனவே பிறந்த குழந்தைகளின் எடை குறைந்து காணப்படுவதாகவும் 59.8 சதவீத அளவில் குழந்தைச் சாவுகள் உள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. அடுத்ததாக உலகளவில் ஏமன் நாடும் (41.3 சதவீதம்) பிற மாநிலங்க ளான ஜார்க் கண்ட் (57.1 சதவீதம்), பீகார் (56.2 சதவீதம்), சத்தீஸ்கர்( 47.6 சதவீதம்) என்ற அளவில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பட்டினியில் உள்ளவர் கள் குறைந்தளவு உள்ள மாநிலங்களாக கேரளா (17.7 சதவீதம்), ஆந்திரா (19.5 சதவீதம்) அசாம் (19.8 சதவீதம்) மற்றும் ஹரியானா ஆகி யவை முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலங் களாக, தனி நபர் வருமான அடிப்படையில் முன்னேறிய மாநிலங்களாக காணப்பட்டா லும் தவறான உணவு கொள்கைகளால் பட் டினி கிடப்பவர்களை அதிகளவு கொண்ட மாநிலங்களாகவே உள்ளன. மாநிலத்தின் வளங்கள் மற்றும் வருமானம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை சென்று சேரவில்லை என் பது பட்டினி குறியீடுகள் தரும் உண்மைகள்.

மறுபுறம் இடதுசாரி கட்சிகள் ஆட்சியில் உள்ள கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநி லங்கள் அதிகளவு தனிநபர் வருமானம் கொண்டதாகவும் குறைந்தளவு பட்டினி குறியீடு கொண்டதாகவும் திகழ்வதாக சர்வ தேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் வட்டார அலுவலகம் தெரிவிக்கிறது. ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பு, உணவுத் தேவைகளை சந்தித்து பட்டினியைப் போக் கும் கொள்கை நடைமுறைகள் மற்றும் ஊட் டச் சத்துக் குறைபாடுகளினால் ஏற்படும் குழந்தைகள் மரணம் போன்றவை கட்டுப்ப டுத்தப்படுவதுடன் மக்கள்நலக் கொள்கை கள் வாயிலாக பட்டினி இல்லாத இந்திய தேசத்தை உருவாக்க தற்போதைய சந்தை அடிப்படையிலான உணவு தானியக் கொள்கை, உணவு வழங்கல் நடைமுறைக ளில் மாற்றம் தேவை. இடதுசாரிக் கட்சிகள் காட்டும் வழியில் பயணம் செய்தால் பட்டினி இல்லாத இந்தியா கனவாக இல்லாமல், நடைமுறைக்கு வரும் காலம் வெகுதொலை வில் இல்லை

-முனைவர் தி.ராஜ்பிரவின்

No comments: