Monday, October 5, 2009

பாதுகாப்புத் துறையும் விற்பனைக்கு...

சி.கிருத்திகா பிரபா

மத்திய அரசு விரித்துள்ள பங்கு விற்பனை கடையில் அடுத்த சரக்கு, விற்பனைக்குத் தயார். பாதுகாப்பு துறையிலும் அந்நிய நேரடி முதலீட் டை 26 சதவீதத்திலிருந்து 49 சத வீதமாக உயர்த்துவதற்கான ஏற்பாடு கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின் றன. ஹளுளுடீஊழஹஆ மற்றும் சர்வதேச நிறுவனமான நுசநேளவ & லுடிரபே கூட் டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நிய நேரடி முதலீட்டின் உச்ச வரம்பு 26 சதவீதமாக மட்டுமே உள்ளதால், அயல்நாட்டு போர்த்தளவாட கம்பெனிகள் தங்களது முதலீட்டை இந்தியாவிற்கு கொண்டுவர தயங்கு கின்றன என்றும், அரசு பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அளிக் கின்ற ஆதரவை விலக்கிக் கொண்டு, தனியார் துறையினருக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.

சுதந்திரத்திற்கு பிறகு, நாட்டின் பாதுகாப்பில் சுயசார்புத்தன்மையை உருவாக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், 8 பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களும், 25 பீரங்கி தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப் பட்டன. அவை இன்று 41 பீரங்கி தொழிற்சாலைகள், 51 பரிசோதனைக் கூடங்கள் மற்றும் 8 பொதுத்துறை நிறுவனங்களாக, தேவையான போர் உபகரணங்களை உள்நாட்டி லேயே தயாரிக்கக் கூடி யனவாக வளர்ந்துள்ளன. இவ்வாறு இருந்தும், நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான போர்த் தளவாடங் களில் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டே வருகிறது.

உலகளாவிய ராணுவ தள வாடங்கள் சந்தையில், உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளரான இந்தியா, வரும் காலங்களில் சுமார் 30 பில்லியன் டாலர்கள் செலவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 2004-05 முதல் பாதுகாப்பு துறைக் கான முதலீட்டு செலவுகள் தொடர்ச் சியாக அதிகரிக்கப்பட்டு வந்துள் ளது; அதில் பெரும்பான்மையான பங்கு போர் விமானங்கள், போர்க்கப் பல்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், போர்க்கருவிகள் மற்றும் தகவல் பரிமாற்ற கருவிகள் போன்றவற்றை வாங்குவதற்காக செலவிடப்பட்டுள் ளது. ஏற்கெனவே உள்ள கருவிகள் பழுதானதோடு பயனற்றுப் போன தும், உள்நாட்டு தயாரிப்புகள் தோல் வியடைந்ததும், வெளிநாட்டு இறக் குமதிக்கு காரணமாக சொல்லப்பட்டது.

தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் என்பது அனுபவம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம்; போஃவோர்ஸ் ஊழ லை நாம் யாரும் மறந்திருக்க முடி யாது! நமது சுயசார்புத் தன்மையை நிலைநிறுத்த, தற்போதுள்ள பாது காப்பு தொழிற்சாலைகளை வலுப் படுத்துவதும், உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்துவதுமே உதவும் என் பதை மத்திய அரசு உணர்ந்து செயல் பட வேண்டும் என்பதே இந்திய மக்கள் அனைவரின் விருப்பம் ஆகும்.

நன்றி : சங்கமுரசு

No comments: